Home » Articles » ஆமையும், முயலும்

 
ஆமையும், முயலும்


தங்கவேலு மாரிமுத்து
Author:

ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர்.

பிறகு, “இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள்.

 • போயும் போயும், ஒரு ஆமையுடன் ஓடுவதற்கு முயல் சம்மதிக்கலாமா? அதுவே அது செய்த முதல் தப்பு.
 • முயலுக்கு கொஞ்சம் ஆணவம் சார். ஆணவம் இருந்தால் எப்படி சார் ஜெயிக்க முடியும்?
 • முயற்சி என்று இறங்கிவிட்டால், கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்துடணும் சார்.
 • எப்பவுமே, அடுத்தவனை லேசா நினைக்கக்கூடாது சார்.
 • ஸ்லோவா இருந்தாலும், ஸ்டெடியா இருந்து சார் ஆமை. அதனால் தான் அது ஜெயிச்சது.
 • எதிராளியைப் பார்த்து பயப்படக்கூடாது சார். பயப்பட்டா ஜெயிக்க முடியாது.
 • ஒரு காரியத்தில் இறங்கிட்டா, சின்ஸியரா முயற்சி செய்தாலே போதும். முடிவு நல்லதாகவே இருக்கும்.
 • வேலைக்குப் போனப்பறம் வீட்டு ஞாபகமாகவே இருந்தால வேலை விளங்காது சார்
 • “நம்ம மோதுறது வேகத்துக்குப் பேர்போன முயலோட” அப்படின்னு தெரிஞ்சும் பந்தயத்துக்கு ஒத்துக்கிச்சே ஆமை, அதோட தன்னம்பிக்கைதான் அதை ஜெயிக்க வைச்சது.
 • முயல் தன்னைத் தாண்டி வேகமா முன்னால் போறதப் பார்த்த பிறகும், மனசு தளராம, போட்டியிலிருந்து விலகாம, தொடர்ந்து ஓடிச்சு பாருங்க ஆமை, அதுதான் சார், அது ஜெயிக்கிறதுக்குக் காரணம்.
 • ஆனைக்கும் அடி சறுக்கும்கிற மாதிரி முயலுக்கும் தோல்வி கிட்டும். ஆனா அந்தத் தோல்வியிலிருந்து முயல் ஏதாவது பாடம் கத்துக்கிட்டு இருந்தா, அதுக்கப்புறம் அது தோற்காது.
 • ஆமைக்கு இருந்தது தன்னம்பிக்கை. ஜெயிச்சது. முயலுக்கு இருந்தது அலட்சியம் தோத்துது.
 • திறமையிருந்த பிரயோஜனமில்ல சார். இருக்கிற திறமையை வீணாக்கக்கூடாது.
 • இத்தூனூண்டு திறமை இருந்தா கூட போதும். முழுசா வெளியே கொண்டு வந்தம்னா நிச்சயமா ஜெயிக்கலாம்
 • அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்கணும் சா.
 • வெற்றி தோல்விங்கிறது வாழ்க்கைல சகஜம் சார். எதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்.
 • அடுத்தவனுடைய வீக்னஸ்கூட, சில சமயம் நமக்கு ஒரு பலம் ஆயிடும் சார்.
 • ஆமை ஜெயித்ததுங்கிறது ஃப்ளூக்தான். ஆனா அது கடைசி வரை ஓடி வின்னிங் போஸ்ட்டைத் தாண்டுச்சே. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்
 • இந்த மாதிரி எல்லாக் கதையிலயும் ஏதோ ஒரு பாடம் இருக்கு சார். நாமாதன் அதைக் கத்துக்கிறதே இல்லை.

இப்படி இன்னும் பல மாணவர்கள், தங்கள் மனதில், அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்புகளை சொற்களால் சுவைபடச் சொன்னார்கள்.

ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி.

“சபாஷ் பிள்ளைகளா சபாஷ். கதையை மிகவும் நன்றாகக் கவனித்திருக்கிறீகள். இப்போது, சுருக்கமாக, வெற்றிக்கு தோல்விக்குமான காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறேன். கவனியுங்கள்.”

ஆமையின் வெற்றிக்குக் காரணம்

1. தன்னம்பிக்கை 2. கடும் உழைப்பு 3. லட்சியத்தில் கண். 4. பாதியில் விலகாமை 5. மனம் தளராமை, 5. போட்டியை எதிர்கொள்ளும் துணிவு.

முயலின் தோல்விக்கு காரணம்

1. தலைக்கனம். 2. அலட்சியம். 3. அளவு மீறிய ஓய்வு. 4. எதிராளியைக் குறைத்து மதிப்பிடுதல். 5. சகதியை வீணாக்குதல், 6. குறிக்கோளை மறத்தல்.

இது வகுப்பறைப் பாடமல்ல. வாழ்க்கைப் பாடம். என்ன பாடம்?

ஆமையும் முயலும் .
அப்படி முயன்றால் ஆமையும் வெல்லும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்