Home » Articles » ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்

 
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்


கலைச்செல்வி க
Author:

ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மனிதர்கள் காது கேட்கும் தன்மையை இழந்து விடுகின்றனர்.

காது செவிடு ஆவதற்கு முக்கிய காரணம் உள் காதுகளில் உள்ள காது செல்கள் மிக அதிகமான ஒலி கேட்கும்போது செவிடு ஆகிறது. மேலும் அதிக அளவில் தேவையில்லாத மருந்துகள் உட்கொள்ளுதல் மற்றும் வயது முதிர்வு இவைகள் மற்ற காரணங்கள் ஆகும்.

உள் காதில் உள்ள செல்கள் ஒரு மைக்ரோபோன் போல் செயல்பட்டு காதில் உள்ள திரவத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை பதிவு செய்து அவற்றை காது நரம்புகளுக்கு அனுப்புகிறது. இதைத்தான் நாம் ஒலியாக உணர்கிறோம்.

யூகோஸ் ராஃபல் (Yeoash Raphael) என்ற விஞ்ஞானி, மெக்சிகன் பல்கலை கழகத்தில் செய்த ஆராய்ச்சியின் முடிவில் செவிட்டு தன்மைக்கு காரணமான செல்களை சரிசெய்ய முடியும் என்பதை நிரூபித்தார்.

மனிதனின் உடலில் நோய் உண்டாக்கக்கூடிய வைரஸ்களை உடற்கூற்றை மாற்றி அமைத்து, இந்த அடினோ வைரஸ் Atoh என்ற ஜீன் உட்புகுத்தி உடலில் செலுத்தும்போது, இந்த அடினோ வைரஸ் காதுகளில் உள்ள கோச்சல்லே (Cochllea) என்ற பகுதியில் உள்ள மயிரை செல்களில் சமிக்ஞைகளை பரிமாறும் திறன் கொண்ட மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதால், இந்த செவிடு தன்மை உடைய செல்கள் மாற்றம் பெற்று நல்ல காது கேட்கும் திறனை அடைகின்றன.

ஸ்டீபன் ஹெல்லர் (Stepan Heller) என்ற மருத்துவர் மாசா செட்டல் சிதறுவதில் இருந்து மற்றும் ஒருவகை ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் மூலம் காது கேட்கும் தன்மையை உண்டாக்கி உள்ளனர்.

இவர் உட்காதில் உள்ள செல்களை, ஸ்டெம் செல் திரவி மூலம் காது கேட்கும் தன்மையை உண்டாக்கி உள்ளார்.

இந்த இரு விஞ்ஞானிகளின் வியத்தகு கண்டுபிடிப்புகள், மனிதனில் செவிட்டு தன்மையை சரிசெய்ய வந்த ஒரு முக்கிய கண்டுபிடிப்புகள் ஆகும். ஒரு சில ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது காது கேட்காதவர்களின் குறையை சரிசெய்ய வந்த விந்தை விஞ்ஞானம்.


Share
 

2 Comments

  1. RAGU says:

    I am with hearing loss for the last 5 years in my both ear. I am in need of remedy. Kindly advice. I am aged only 43.

    Yours
    V.RAGU
    INDIA.

  2. mohana says:

    i am with hearing loss for the 3 years in my both ear. iam in need of remedy. kindly advice. i am aged only 28. very feeling

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்