Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

அது 1977-ஆம் வருடம் சனவரி மாதம். அய்யா இல.செ.கந்தசாமி அவர்கள், தனது முதல் நாவலாகிய “ஓ.. அன்றில் பறவைகளே” என்ற படையலை முதற்பதிப்பாக வெளியிட்டிருந்தார்.

அவர் தனது மாணவர்களிடம் எத்துணை அளவுக்கு வாஞ்சையோடு இருந்தார் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்று. வழக்கமாக படைப்பாளிகள், நூலின் முதற்பக்கத்தில், ‘இந்த நூல் என் அன்னைக்கு தந்தைக்கு குருவுக்கு சமர்ப்பணம்’ என்றுதான் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், அய்யா அவர்கள் எப்படிக் குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? இப்படித்தான்.

“படையல்
இந்த நாவல் எழுதத்
தூண்டுகோலாக இருந்த
எனது இனிய
வேளாண் பல்கலைக்கழக
மாணவ நண்பர்களுக்கு”.

என்னே பெருந்தன்மை! மாணவர்கள் தமது நூலை ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்வார்கள். ஆனால், ஆசிரியர் தனது நூலை, மாணவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அது கண்டு, பேராசிரியர்களும், மாணவர்களும் அவரைப் பெரிதும் போற்றினார்.

அந்த நாவலின் ஐந்தாம் அத்தியாயத்தில், மாணவர்கள் வகுப்பறைகளிலும் விடுதியிலும், கல்லூரி வளாகத்திலும் நடந்து கொள்ளும் விதம் பற்றி, அப்படியே உயிர்ப்போடு எழுதியிருந்தார். அவர்களுடைய குறைகள், நிறைகள் அனைத்தையும் வடித்திருந்தார். அதைப் பார்த்து, மனக் குமுறலையும், மனச் சாந்தியையும் வெளிப்படுத்தியவ்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

“ஏதேனும் ஒரு பொது நிகழ்ச்சி என்றால் கல்லூரியே விழாக்கோலம் பூண்டுவிடும். ஆனால், ஆசிரியர் தமது நூலை, மாணவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அது கண்டு, பேராசிரியர்களும், மாணவர்களும் அவரைப் பெரிதும் போற்றினர்.

அந்த நாவலின் ஐந்தாம் அத்தியாயத்தில், மாணவர்கள் வகுப்பறைகளிலும் விடுதியிலும், கல்லூரி வளாகத்திலும் நடந்து கொள்ளும் விதம் பற்றி, அப்படியே உயிர்ப்போடு எழுதியிருந்தார். அவர்களுடைய குறைகள், நிறைகள் அனைத்தையும் வடித்திருந்தார். அதைப் பார்த்து, மனக் குமுறலையும், மனச் சாந்தியையும் வெளிப்படுத்தியவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

“ஏதேனும் ஒரு பொது நிகழ்ச்சி என்றால் கல்லூரியே விழாக்கோலம் பூண்டுவிடும். அதனால் வேளாண் கல்லூரி மாணவர்கள் என்றால் பிறகல்லூரி மாணவர்களிடையே ஒரு தனிச் செல்வாக்கு இருந்து வந்தது. ‘பல்வகை ஆற்றலிலும் சிறந்தவர்கள் என்ற பெயரையும் பெற்று இருந்தோம்.

என்று அந்த நாவலின் 53ஆம் பக்கத்தில் மாணவர்களின் சிறப்புகளை எழுதியிருந்தார். மாணவர்களின்பால், அவர் கொண்டுள்ள அன்புக்கு இதுவே சான்றாகும். ஆனால், அந்த நாவலோ ஒரு காதல் காவியம். ஒன்று பிரிந்த பொழுது மற்றொன்று அப்பிரிவைத் தாங்காது வருந்தித் துன்புறும் அன்றில் பறவையைப் போல, பிரிந்து வாழும் வேள்-தங்கம் என்ற காதலர்களின் உணர்வுகளை உன்னதமாகப் பிரதிபலிக்கும்.

அயயா அவர்களின் எழுத்து, நடை, மறைந்த தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சாயலில் இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள்.

எத்தனையோ பேர் பாராட்டினாலும், தனது மாணவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். ஒரு நாள். அதற்காக, அந்தப் புத்தகத்தின் சில பிரதிகளை எடுத்து வந்து, வகுப்பறையில் மாணவர்களிடமே கொடுத்து, “இது பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் காட்டிக் கருத்தைக் கேளுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு, எல்லா மாணவர்களும், தத்தம் பாராட்டுகளைத் தெரிவித்தனர். அதில் திரு. G. சிவானந்தம் (B.E. Agri) என்ற மாணவர் (இன்று திருப்பூரில் பசுமை இயக்கத்தின் தலைவராக இருந்து, பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறார்) எழுந்து “அய்யா, இது ஒரு சுய விளம்பரம்” என்றார். மாணவர்கள் மத்தியில் திடீர் நிசப்தம்!

பல்வேறு பாராட்டுகளுக்கு மத்தியில் சுயவிளம்பரம்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அய்யாவுக்குக் கோபமும், வருத்தமும் நேரிடும் என்று, எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக, அவர் முகத்தில் ஆச்சரியமும், புன்னகையுமே மலர்ந்தன. ஒரு கணம் புருவங்களை உயர்த்தி, விழிகளை விரித்தவர், மென்னகை தவழ, அந்த மாணவரிடம், “சுய விளம்பரம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அம்மாணவர், “உங்கள் புத்தகத்தை எங்களிடம் காட்டி விளம்பரம் தேடுகிறீர்கள். இதைப்பற்றி, வெளியே சென்று நாலு பேரிடம் நாங்கள் சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இது ஒரு சுயவிளம்பரம் இல்லையா?” என்று, கொஞ்சம் சூடாகவே சொன்னார்.

அத்தனையும் பொறுமையோடு கேட்ட அந்தப் புன்னகை மன்னர், “உங்களைப் பாராட்டுகிறேன். மனந்திறந்து கருத்துக்களைச் சொன்னதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், எனது நோக்கம் ‘சுயவிளம்பரம்’ தேடுவதல்ல. ‘சுய விமர்சனம்’ தேடுவதே” , என்று பதிலுரைத்தார்.

அந்த மாணவர் விடவில்லை. “இரண்டுக்கும் என்னங்கய்யா வித்தியாசம்?” என்று வினவினார். அதற்கு அய்யா அவர்கள், “என்னுடைய நிறைகளை மட்டுமே பிறரிடம் சொல்லுங்கள் என்றால் அது சுயவிளம்பரம். என்னுடைய நிறை-குறை இரண்டையும் என்னிடமே சொல்லுங்கள் என்றால் சுய விமர்சனம் என்னைப் பற்றி நானே, பெருமையடித்துக் கொள்வது சுயவிளம்பரம். எனது பெருமை – சிறுமைகளை நீங்கள் அடித்துச் சொல்வது சுயவிமர்சனம். சுருங்கச் சொன்னால், வெறுமனே தன்னை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்துவது சுயவிளம்பரம். திட்டமிட்டு தன்னை வளர்த்திக் கொள்ளப் பயன்படுத்துவது சுயவிமர்சனம்” என்று சுய விளம்பரத்துக்கும், சுய விமர்சனத்துக்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றி, ஒரு விளக்க உரையே நடத்திவிட்டார். வகுப்பறையே ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்தது.

அவர் தொடர்ந்தார். “இது எனது முதல் நாவல். இதிலுள்ள குறைநிறைகளைத் தெரிந்து கொண்டால், அடுத்த நூலை மேம்படுத்திக் கொள்ள உதவுமே! அதற்காகத்தான் உங்களிடம் விமர்சனம் கேட்டேன். இந்த விமர்சனம் (Criticism) நூலுக்கு மாத்திரமல்ல. ஒவ்வொருவருடைய வாழ்வுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் நாம் சரியாகக் கால் வைக்கிறோமோ என்று பார்த்தறிய வேண்டும். அதோடு பிறரைக் கேட்டறிய வேண்டும். வருகின்ற விமர்சனங்களில், உங்கள் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை (Costructive Criticism) அள்ளிக் கொள்ள வேண்டும். உங்கள் வீழ்ச்சிக்கு உண்டானவற்றை (Destructive Criticism) விலக்கிவிட வேண்டும். இப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுவே வளர்ச்சிக்கான சூத்திரம். இந்த அறிவுரை, வளர விரும்புவர்களுக்கு மாத்திரம்”, என்ற முத்தாய்ப்போடு முடித்து நின்றார்.

மாணவர்களின் கரவொலி முழங்கி முடிய பல நிமிடங்கள் பிடித்தது. கேள்வி கேட்ட மாணவர் எழுந்தார். பனித்துப்போன அவர் கண்களும், நெகிழ்ந்து போன அவர் நெஞ்சமும் அவரை நிலைதடுமாற வைத்தது. “அய்யா, நீங்கள் எனக்கு ஆசிரியராக அமைந்தது நாங்கள் செய்த புண்ணியம்” என்று வியந்து கூறினார். எப்போதும் போல புன்னகையுடன், அவரைத் தட்டிக் கொடுத்தார் அய்யா.

எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொண்டு அதைத் தமது வெற்றிப் பயணத்திற்கு உதவியாக மாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் தம்மோடு கூட்டிக்கொண்டு செல்லும் வெற்றி மனிதர் அவர்! எல்லோரது மனதையும் வென்ற மனிதர் அவர்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்