Home » Articles » சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!

 
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!


மணவழகன் ஜே
Author:

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தோல்வி அடையுங்கள்” என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. தோல்வி விரும்பத்தகாத ஒன்றாகவே குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. நமக்கு கற்பிக்கப்பட்ட தவறானப் பாடங்களில் இது மோசமான ஒன்று.

வாழ்க்கையில் தவிர்க்க இயலாத, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நிகழ்வு. “தோல்வி” இதை தவிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இதிலிருந்து தப்பி ஓடுவதற்கும் மட்டுமே வழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. வருகிறது. பல மாணவர்களும், இது போன்ற காரணத்தினாலேயே தற்கொலை விஷத்தில் செத்து மடிகிறார்கள். தோல்வியை தாங்க இயலாத (படித்தவர்கள் கூட) இதில் விழுவது கண்கூடு.

தோல்வி என்பது தப்பிச் செல்ல இயலாதது. அதை எவ்வாறு சந்திப்பது மற்றும் அது வெற்றிப் பாதையின் திருப்புமுனை என்பதை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

தோல்வியைப் பற்றி பேசும்பொழுது தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி குறிப்பிடாமல் இருக்க இயலாது. ஒவ்வொரு க்ணடுபிடிப்பின் பின்பும் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தோல்விகளை அவர் சந்தித்தார் என்பது அவரின் வரலாறு படிப்போர் அறிய முடியும். ஒவ்வொரு தோல்வியையும் புதிய கண்டு பிடிப்பின் புதிருக்கான ஓர் விடை என்றே அவர் கருதினார்.

இந்த மனநிலைதான் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் ஏன் நாம் கூட கற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. தோல்வி என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோமானால், அதன் மூலம் ஏற்படுகின்ற அழுத்தம், உணர்ச்சி கொந்தளிப்புகள் (Emotional Disturbance) வினால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து விடுபட்டுக் கொள்ள இயலும்.

மேலும் ஓர் முக்கிய பயன் என்னவென்றால், தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் ஓர் நிறுத்தம் எனக் கொண்டோமானால், அத நிறுத்தத்திலேயே நின்றுவிடாமல் நமக்கு பிடித்த “வெற்றி” ஊருக்கு தொடர்ந்து பயணிக்க முடியும்.

திட்டமிடல், பயிற்சி, அனுபவம், அறிவுரை அவைகளினால் தொடர்ந்து வெற்றியே பெற்றுவருபவரா நீங்கள், உங்களுக்கு 2008 வணக்கங்கள்.. உங்கள் தொழிலில் மட்டுமல்ல, தோல்வி என்பது உறவு முறைகளில் கூட ஏற்படலாம், உதாரணத்திற்கு சிறந்த பிஸினஸ்மேன், நன்கு படித்த, அழகான மனைவியுடன் மகிழ்வான வாழ்க்கை வாழ இயலாமல் இருக்கிறார்கள். இது கூட ஒரு விதத்தில் தோல்விதான். உறவு முறைத் தோல்விகளினால் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகான தற்போது ஆலோசனைக்காக அதிகமானோர் வருகின்றனர். இத்தோல்வியை எவ்வாறு சமாளிப்பது அதில் வெற்றி பெறுவதற்கான வழிகளை நபர்களுக்கு தகுந்தவாறு கூறி அனுப்புகிறோம்.

‘தேவையான சாதனையை அடைய பல தேவையற்ற தோல்விகளை சந்தித்துதான் ஆகவேண்டும். ஆகவே அதிகமாக அடிக்கடி தோல்வி அடைபவர்கள் விரைவில் வெற்றியைப் பெற இயலும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்