Home » Articles » சீனியர் சிட்டிசன்

 
சீனியர் சிட்டிசன்


திருமுருகன்
Author:

சே எங்க போனாலும் க்யூ, கம்ப்யூட்டரைஸ்ட் பிரான்ச்ன்னு பேர். ஆனா, அரை மணி நேரமா நாலு பேர் கூட நகரல. ஏகப்பட்ட வேலை இருக்கு. டி.டி. எடுக்கலாம் என்று பேங்க் வந்தா, இப்படி அநியாயமா லேட்டாகுதே”, பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும் விதமாக குறைபட்டுக் கொண்டான் சதீஷ். கடைத்தெருவில் சிறுநகைக்கடை வைத்திருப்பவன். ஓரளவுக்கு வசதியானவன். வேலை, வேலை என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைபவன்.

சதீஷ்க்கு முன்னால் ஒரு வயதான பெரியவர் நின்று கொண்டிருந்தார். வயது எழுபத்தைந்துக்கு மேல் இருக்கும். தள்ளாமை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவரும் ஏதோ பணம் கட்டுவதற்கு நின்று கொண்டிருந்தார். வயது காரணமாக முதலில் கட்டிவிட்டு செல்லும்படி வரிசையில் நின்ற நான்கு ஐந்து பேர் சொல்லியும் கூட மறுத்துவிட்டு வரிசையிலேயே நின்றார்.

‘வீட்டில் வேலையிருக்காது சரிதான். தான் அப்படியா. எத்தனை வேலை இருக்கிறது. தன்னை முன்னே அனுமதித்திருந்தால் சந்தோஷமாக கட்டி விட்டு சென்றிருக்கலாம் என்று நினைத்தவாறு நின்றிருந்தான் சதீஷ். ஆயிற்று இன்னும இரண்டு பேர் தான் விசையில் முன்னே. ஆனாலும் சதீஷ்க்கு பொறுக்கவில்லை.

“ரொம்ப மெதுவா ஒர்க் பண்றாங்க சார். இதுக்கு தான் இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறாங்க போலிருக்கு”, சதீஷின் கோபம் வங்கி வேலையாட்கள் மீது திரும்பியது.

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தம்பி. இன்னும் இரண்டு பேர்தான். பீக் அவர்ஸ்ல கொஞ்சம் கூட்டமாகத்தான் இருக்கு” என்றான் பெரியவர். கொஞ்சம் நிதானமானான் சதீஷ்.

“நீங்க என்ன பென்சன் வாங்க வந்தீங்களா?” என்றான். “இல்ல தம்பி சின்ன ஸ்டேஷனரி ஷாப் வைச்சிருக்கேன். பக்கத்து கடைக்காரரை பார்த்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றார் பெரியவர்.

“முன்னாடியே போக சொன்னாங்களே போயிருக்கலாமில்லையா”, சதீஷ் கேட்க,

“இல்லை தம்பி எல்லோருக்கும் அவசர ஜோலியிருக்கும். இதுல நான் ஏன் அவர்களை டிஸ்டர்ப் பண்ணனும். மேலும் எல்லோரும் சமமா வரிசையில நிற்கும்போது நானும் நிற்பது தான் சரி” என்றார் பெரியவர்.

‘அட இந்த வயதிலும் கடையும் வைத்திருக்கிறார். வரிசையில் நிற்பதற்காக வருத்தப்படாமல் இருக்கிறாரே’ என்று நினைத்துக் கொண்டான். அவர் கையில் ஏதோ பணம் கட்டும் சலான் இருக்க, ஏதோ கடை கணக்கிலோ, லோன் கணக்கிலோ பணம் கட்டுவதற்காக நின்று கொண்டிருப்பார் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டான்.

பெரியவரின் முறை வந்தது. கையில் இருந்த சலானை எடுத்து பணம் கட்டும் மேஜை மீது வைத்தார். ஆர்வம் மிகுதியால் எட்டிப்பார்த்தான் சதீஷ். அது பிரதமரின் நிவாரண நிதிக்காக பணம் கட்டும் சலான்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்