Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

தன்னம்பிக்கையை உள்ளத்தில் கொண்டு வந்துவிட்டால், அது முயற்சியைத் தோற்றுவிக்கும்; முயற்சி திட்டமிடலை உண்டாக்கும்; திட்டம் ஒரு வெற்றித் தேடலை தரும்.

அந்த தேடல் வாழ்க்கையின் வெற்றியை வெகு அருகில் அழைக்கும். இது வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆண், பெண்களிடமும் கண்ட அனுபவபூர்வமான ஒன்று.

நமது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட, தமிழகத்தில் சிறந்த புத்தகமாக தன்னம்பிக்கை மாத இதழ் வருவது பாராட்டற்குரியது.

– ம. வின்சென்ட் ராஜ், திருப்பூர் – 1.

ஒவ்வொரு கருத்துச் சிந்தனைத் துளிகளும் வருங்கால இளைய சமுதாயத்தினர் மனதில் பதிக்க வேண்டிய பொன் எழுத்துக்கள் என்றால் மிகையாகாது.

தன்னம்பிக்கையின் ஒவ்வொரு கட்டுரையையும் ஆழ்உணர்வோடு படித்து, மனதிலுறுத்தி செயலாற்றினால், ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

வாழ்க தன்னம்பிக்கை! வாழ்க அதன் தன்னலமற்ற தொண்டு!

– வாசகர் எம். பாண்டியம்மாள் (Alies)
சாந்தோ சந்தோஷ், திண்டுக்கல்.

தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது என்பதற்கு எத்துணை எளிமையான உதாரணம். நான் எத்துனையோ தன்னம்பிக்கை கட்டுரைகளை படித்திருக்கிறேன். திருமதி. இரா, ஜெயந்தி அவர்களின் எளிமையாக யாரும் புரிந்து, மகிழ்ச்சியோடு செயல்படத் தூண்டும் விதமாக ஒரு “குழந்தை”யை நம் கண் முன் படம் பிடித்துக் காட்டி எழுதியிருக்கும் விதம், உயர்வு! தெளிவு!…எளிமை!…

பல விதமான “பயிற்சி” வகைகளில் மேலான பலனை தருவது அச்சம் இல்லாமல் இருப்பது. குறைந்த பட்சம் அச்சத்தை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்கின்ற பயிற்சியில் நிறைய வெற்றிகள் நமக்காக காத்திருக்கிறது என்பதை திரு. ஜெ. கமலநாதன் அவர்களின் “வேரில் பழுத்த பலா” அருமையாக விளக்கியது. பல வகை கனி வகைகளை குவித்து வைத்து அற்புதமான விருந்து கொடுத்து அசத்திவிட்டார்…

-கவிஞர் நம்பிக்கை நாகராஜன்.
ஆர்.எஸ்.புரம். கோவை – 2

கடந்த 5 மாதங்களாக நான் “தன்னம்பிக்கை” மாத இதழ் வாங்கி படித்து பயன்பெறுகிறேன். வெற்றி பெற்றவர்களுடன் நேர்முகம், தன்னம்பிக்கை கவிதைகள், சிந்தனைத்துளிகள், ஆசிரியர் பக்கம், பேராசிரியர் பி.கே. மனோகரன் அவர்களது கட்டுரை, கோவை வானொலி நிலைய இயக்குநர் திரு. ஜெ. கமலநாதன் அவர்களது “வேரில் பழுத்த பலா” தன்னம்பிக்கை கட்டுரை, திரு. சூரியன் அவர்களது தொடர் கட்டுரை, மாணவ, மாணவியர்களுக்கு “தேர்வுகள் இனி தேர்ச்சிகளே” என்ற பேரா. ஆ. இரத்தினசாமியின் தொடர் கட்டுரை என அனைத்து பகுதிகளும் அருமை, பயனுள்ள மாத இதழ். பாராட்டுகள், வாழ்த்துக்கள்!

-கோவைப்புதூர் கண்ணன்.

தன் மேல் நம்பிக்கைக் கொள்ளாதவன் வாழ்வில் முன்னேற்றம் காண்பது கடினம். தாழ்வு மனப்பான்மை கொண்டு தத்தளிக்கும் மனிதர்க்கு, எழுந்து நில், துணிவு கொள், முயற்சி செய், வாழ்வில் முன்னேறு — என உற்சாகமூட்டுவது சிறப்பானச் சேவையாகும். இன்றைய கணினி காலத்தில், மனிதர்களின் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டச் சூழலில், மனநல ஆலோசனைகள் அரு மருந்தாகும். மனிதர்களின் நன்மையான, தீமையானச் செயல்களுக்கு மனமே முதற்காரணம்.

மனிதனின் மனதை பக்குவப்படுத்திவிட்டால் மனதிலிருந்து மருள் அகலும். மனம் தெளிந்த நீரோடையாகும். இவ்வாறிருக்க, பொழுதைப் போக்குவதற்கு எத்தனையோ ஏடுகள் வலம்வர, பொழுதை வீண் செய்யாத பயனுள்ளதாக மாற்றி, வாழ்வை வளமாகக் வழிகாட்டும், ‘தன்னம்பிக்கை’யின் தனித்துவம் போற்றத் தகுந்தது. சுருங்கக்கூறின், தன்னம்பிக்கை மாத இதழுக்குச் செலுத்தும் சந்தா செலவல்ல மூலதனமே என்பது நிதர்சனமான உண்மை.

-எம். முகம்மது பாரூக்
11, பள்ளிவாசல் தெரு,
சீர்காழி – 609 110.

டிசம்பர் இதழில் திரு. தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள் கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ள MLM தொழில் பற்றிய விளக்கம் அருமையிலும் அருமை. மற்றவர்கள் வெற்றிபெற உறுதுணையாக இருக்கும் பொறுப்புமிக்க மனித நேயம்மிக்க தொழில் என்று ஆணித்தரமாக்க் கூறிப்பிட்டுள்ளனர்.

MLM தொழில் என்பது ஒரு தீண்டத்தகாத் தொழில் என்ற பொதுவான கருத்து மக்களிடையே பரவியுள்ள நிலையில், திரு. தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியன் அவர்களது விளக்கம் அனைத்து தரப்பு மக்களிடையே நிச்சயமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி MLM தொழிலின் மகத்தான பயன்களை மக்கள் அனைவரும் அடைந்து பெறுவதற்கும், நமது இந்திய நாட்டிலும் MLM தொழில் வளர்ச்சிக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்பது திண்ணம்.

சுயநலமிகளைத் தவிர்த்து விடுவதன் அவசியத்தையும், சரியான குழுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. சரியான நேரத்தில் தெரிவித்துள்ள மிகச் சரியான கருத்தாகும். இந்த கேள்வியைக் கேட்ட திரு. அசோக்குமார் பாராட்டப்பட வேண்டியவர்.

-தண்டாயுதபாணி
P.N. புதூர், கோவை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்