Home » Articles » சுதந்திர சிந்தனை

 
சுதந்திர சிந்தனை


மணவழகன் ஜே
Author:

சிந்தித்தல், யோசித்தல் போன்ற வார்த்தைகள் நம்மால் தினசரி பயன்படுத்தப்படுபவையே. நமது சிந்தனைகள் எப்படி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் தெரியுமா? (சிலரைத் தவிர) அதிகமானவர்கள் ஒரு சிறைக்குள் மட்டுமே சிந்திப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு விஷயம் குறித்து விவாதிக்க கூறினால் ஒவ்வொரு வரும் தனது கருத்துக்களைக் கூறுவார்கள். பெரும்பாலும் அவர்களது கருத்து, அவர்களின் சிந்தனைப் போக்கினை ஒட்டியே வந்து விழும்.

சிந்தித்தல் என்பது மனதின் கருவி எனக் கூறலாம். மனது எந்த கருத்தையும் தனது போக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளும் இயல்புடையது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினைப் பார்த்து அதில் உங்களுக்கு என்னென்ன தோன்றுகிறது என்பதை ஒரு பட்டியல் எழுதிக்கொள்ளுங்கள்.

இப்படத்தினை உங்கள் நண்பரிடமோ (அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்) காண்பித்து அவர்களுக்கு படத்தினைப் பார்த்தால் என்னத் தோன்றுகிறது என்பதைக் கேளுங்கள். அவர்களும் சில பொருள்கள், விஷயங்களைக் கூறுவார்கள். அதை கவனித்தீர்களேயானால், அவைகள் அந்த நபர்கள் சம்பந்தபட்டவையாகவே இருக்கும். நீங்கள் எழுதிய பட்டியலுக்கும் அவர் கூறியதற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம்.

இந்த படத்தினை சில குழந்தைகளிடம் காட்டி அவர்களிடம் என்ன தெரிகிறது என்பதைக் கேட்டுப்பாருங்கள். குழந்தைகளின் பட்டியல்கள், பட்டாம்பூச்சி, மரம், பறவை, பூச்சிகள், மேகம், பட்டம் ன்உ அழகான ரசனைமிக்க, இயற்கை சார்ந்த விஷயங்களாக இருக்கும். குழந்தைகளுகு இவ்வாறு கருத்துகள் தோன்றக் காரணம் அவர்களின் சிந்தனை சுதந்திரமாக, ரசனை மிக்கதாக உள்ளது.

மாறாகப் பெரியவர்களின் சிந்தனைகள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற இயலாத காற்று போல இருப்பதால் கருத்துக்களும் அவ்வாறே அவர்கள் சம்பந்தப்பட்டவையாக மட்டுமே இருக்கிறது.

பிரபல உளவியல் பரிசோதனைகளும் இது போல உண்டு, அதை (Ink Plot Test) டெஸ்ட் என்பர். ஒரு முறை கவுன்சிலிங் வந்திருந்த இளைஞரிடம் இதைப் போன்ற படத்தினைக் காட்டியபோது அவர் கூறிய ஒரு விஷயம் லவ் பேர்ட்ஸ் போல தெரிகிறது என்று கூறினார். (அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதற்கான வயதில் இருந்தார்.). ஓர் குடும்பத் தலைவி இதை ஒரு குத்துவிளக்கு என்றும், ஆன்மிகவாதி ஒருவர் இது திரிசூலம் என்றும் குறிப்பிட்டார்கள். சபரிமலைக்கு போவாரிடம் காட்டினால் பதினெட்டு படிகள் தெரிகிறது என்று கூடக்கூறலாம்.

சரி, இது போன்ற சிறைக்கூடச்சிந்தனைகளிலிருந்து எவ்வாறு வெளியேறுவது?

சிந்தித்தல் என்பது கூட நாம் கற்றுக் கொள்கின்ற ஒரு விஷயமாகத்தான் சில உளவியளார்கள் கருதுகிறார்கள். ஆகவே ஒரு விஷயத்தை பலவாறு யோசிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். பலவற்றைக் கூர்ந்து கவனித்தல், படித்தல், ஒரு நிகழ்வு நடந்து விட்டால் எப்படி இருக்கும் என்று சிந்திப்பதைப் போலவே, நடக்காவிட்டால் எப்படி இருக்கும், அந்த நிகழ்வு நல்லபடியே, சிறப்பாக நடந்தேற என்னென்ன செய்யலாம் என்பதை சிந்தித்தால் நீங்கள் சிந்தித்தலில் விடுதலை பெறத் துவங்கிவிட்டீர்கள் எனக் கூற இயலும்.

ஒரு விஷயத்தைக் குறித்த பலரிடம் கருத்துகளைக் கேட்டுப் பெறுதல், அவ்விஷயத்தில் எதிர்கால மாற்றம் எப்படி இருக்கும் போன்றவை சிந்தித்தலில் சிகரத்தை தொடவைக்கும்.

சிந்திப்பதற்கு எந்த கட்டணமும் இல்லை, 100 சதவீத இலவசம், சுதந்திரமாக சிந்தியுங்கள் 2008ல் சிறப்படைவதற்காக.


Share
 

2 Comments

  1. soosaithasan says:

    xxxxxxxxx

  2. soosaithasan says:

    நல்லம்
    எனக்கு நல்ல செய்தி அனுபுக்கள்

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்