Home » Articles » தேர்வு அரங்கில் நீங்கள்

 
தேர்வு அரங்கில் நீங்கள்


இரத்தினசாமி ஆ
Author:

ஓராண்டாக படித்த நீங்கள், கடந்த இரண்டு மாதங்களாக தேர்வுகளை சிறப்பாக எழுதுவதற்காக உங்களை நன்கு தயாரித்த நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த தேர்வுகள் இதோ தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் அரங்கிற்கு முன்னாள் அரைமணி நேரம் முன்னதாக வந்துவிட்டீர்கள். கடைசி நேர அவசர திருப்புதல், படபடப்பு சிறிதும் உங்களிடம் இல்லை. கேள்விகள்- விடைகள்- எழுதிப்பார்த்தல் என அனைத்திலும் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளீர்கள்.

தேர்வைப் பற்றிய பயமே சிறிதும் உங்களிடம் இல்லை. ‘தேர்வுகளை சிறப்பாக எழுதுவேன்’ எனும் ஒரே எண்ணம் மட்டும் மனதில் ஒலித்துக்கொண்டுள்ளது. தேர்வு எழுதுவதற்காக இரண்டு பேனா, பென்சில் ரப்பர், கலர் Sketch பேனாக்கள், நுழைவுச்சீட்டு (Hall Ticket) அனைத்தையும் தயாராக வைத்துள்ளீர்கள்.

தேர்வு எழுதும் முன்

இதோ தேர்வு எழுதும் அறையின் உள்ளே உங்களை அனுமதிக்கிறார்கள். அமைதியாக உங்கள் பதிவு எண் உள்ள இடத்தை கண்டுபிடித்து அமர்கிறீர்கள். கண்களைமூடி, ஆழ்ந்த சுவாசத்தை மெதுவாக, மெதுவாக வெளியேற்றுகிறீர்கள். கண்களுக்கு உள்ளங்கை சிகிச்சை அளித்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் மூளையின் அதிர்வெண்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. உங்களுடைய கூர்ந்து கவனிக்கும் ஆற்றலானது படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. O நிலைக்கு எளிதில் வந்துவிட்டீர்கள். இதோ விடைத்தாள் தரப்படுகிறது. உங்களுடைய பதிவு எண்ணை அதற்காக இடத்தில் எழுதுகின்றீர்கள். அரங்க நுழைவுச் சீட்டை எழுதும் மேஜை மேல் வைத்து சரிபார்த்துக் கொள்கிறீர்கள். நிரப்ப வேண்டிய மற்றவற்றை பூர்த்தி செய்கின்றீர்கள்.

‘தேர்வை சிறப்பாக எழுதுவேன். என்னால் முடியும்’ என்ற சொற்கள் உங்கள் ஆழ்மனதிலிருந்து ஒலித்துக்கொண்டே உள்ளது.

வினாத்தாள் பெற்ற பின்னர்

இதோ தேர்வுக்கான வினாத்தாளை ஆசிரியர் வழங்குகிறார். O நிலையிலேயே அதை பெறுகின்றீர்கள். பொறுமையாக, நிதானமாக ஒவ்வொரு கேள்வியாக படிக்கின்றீர்கள். நன்கு படித்து, முன்னரே வகுப்புத் தேர்வுகளில் எழுதிப் பார்த்து சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற வினாக்களை டிக் அடித்து (பென்சிலால்) வைக்கவும். கேள்வித்தாள் எளிதாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்தையும் சிறப்பாக எழுத முடியும் என்ற எண்ணம மேலோங்குகிறது.

முதலில் எழுதும் விடைகள்

பகுதி – அ (Section -A)ல் ஒரு கேள்விக்கு 4 விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுதலை முதலாவதாக எடுக்கிறீர்கள். புத்தகம் முழுமையாக பத்துமுறைக்கு மேல் வரி, வரியாக படித்த உங்களுக்கு மிக எளிதாக சரியான விடையை தெரிவு செய்ய முடியும். குறைந்த நேரத்தில் மிக அதிகமான மதிப்பெண்களை அள்ளித்தருவது இப்பகுதி. எனவே இப்பகுதிக்கு பதில் அளிக்க அதை முதலாவதாக தெரிவு செய்தது சரியான முடிவு.

விரிவான விடைகள்

அடுத்ததாக விரிவான விடையளிக்க வேண்டிய கேள்விகளில் உங்களுக்கு மிக, மிக பிடித்த, பல முறை விடையளித்து பழக்கப்பட்ட கேள்வியை தேந்தெடுக்கிறீர்கள். நேர நிர்வாகம் மிக முக்கியமானது. ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை நிமிடங்கள் ஒதுக்கினால் பதில் தரவேண்டிய அனைத்து கேள்விகளையும் சிறப்பாக எழுதலாம் என்பது உங்களது முன் அனுபவம் மூலம், திருப்புத் தேர்வுகள் மூலம தெரிந்திருக்கும். கையில் உள்ள வாட்சை பதில் எழுத துவங்கும் முன் பார்த்துக் கொள்ளவும். எப்போது அந்தக் கேள்விக்கான விடையை முடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும். அடித்தல், திருத்தல் சிறிதும் இல்லாமல், சீரான வேகத்தில், தேவையான அளவில் விடையை எழுதுகிறீர்கள்.

படங்களை தெளிவாக அழகாக போடுகிறீர்கள். படத்தில் பல்வேறு பகுதிகளை அம்புக் குறியிட்டு பெயரிடுகிறீர்கள். (சிவப்பு, பச்சை வண்ணங்களை பயன்படுத்தவேண்டாம்.)

ஒவ்வொரு விரிவான விடைகளுக்கிடையே:

முதல் விரிவான விடையை முழுத் திருப்தியுடன் எழுதி முடித்து விட்டீர்கள். அதேபோல் சிறப்பாக எழுத வேண்டிய அடுத்த கேள்வியை தெரிவு செய்துவிட்டீர்கள். விடை எழுத ஆரம்பிக்கும் முன்னர் ஒரு அரை நிமிடம் நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது:

  • பேனாவை கீழே வைத்துவிட்டு, கண்களை லேசாக மூடிக்கொள்ளவும்.
  • இரு கண்களுக்கும் உள்ளங்களை சிகிச்சை அளிக்கும் வகையில் கைகளை வைத்துக் கொள்ளவும்.
  • மெதுவான, ஆழ்ந்த சுவாசத்தை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து, மெதுவாக மெதுவாக வெளியேற்றவும்

கண்கள் புத்துணர்சியையும, புதிய தெம்பையும, பெறுவதற்காகவும்; தொடர்ந்து O நிலையில் இருப்பதற்காகவும் இப்பயிற்சி உதவுகிறது.

படித்து, எழுதி பதிவு செய்யப்பட்ட விடைகளை தங்கு தடையின்றி, தெளிவாக, சீராக பெறவும், எழுதவும் இப்பயிற்சிகள் உதவி செய்யும். இதற்காக நீங்கள் ஒதுக்கவேண்டிய நேரம் 5 நிமிடங்கள் தான். 180/150 நிமிடங்களில் இது மிகக் குறைந்தகாலம் தான். இதை செய்யாதபோது நீங்கள் பதிலைப் பெற போராடும் காலம் மிக அதிகமாகும். சில வேளைகளில் தடுமாற்றங்களால் சரியான விடைகள் கிடைக்காமலேயே போகலாம். அதனால் மதிப்பெண்களை இழக்க வேண்டியது வரலாம்.

விடையளிக்க வேண்டிய அடுத்த பகுதிகள்:

ஓரிரு வரிகளில் விடையளிக்க வேண்டியதை (பகுதி – ஆ-) அடுத்ததாக தெரிவு செய்யவும். அதற்கடுத்து Paragraph answer (பகுதி-இ )ஐ தேர்ந்தெடுக்கவும்.

2a/3 மணி நேர கேள்வித்தாள் விடைகளை எழுதி முடிக்க, நன்கு தயார் நிலையில் உள்ள உங்களுக்கு, 2d,3e மணிகளே ஆகும். ஆக 15 நிமிடங்கள் மீதமிருக்கும். விடையளிக்கப்பட வேண்டிய அனைத்து கேள்விகளுக்கும் விடையளிகப்பட்டனவா என்பதை சரிபார்க்கவும்.

அழகுபடுத்தவும்:

விடைகளில் முக்கியமான வார்த்தைகளை வண்ண மையினால் அடிக்கோடுகள் இடுகிறீர்கள். சிறு, சிறு பிழைகளை திருத்துகிறீர்கள். விடைத்தாள்களை (Additional Books) அழகுபடுத்துகிறீர்கள். கூடுதல் இணைப்பு விடைத்தாள்களை (முன்னரே 1,2,3,…. என்று குறிப்பிட்ட வரிசைப்படி) அதற்கென தரப்பட்ட நூலால் கட்டுகிறீர்கள். தேர்வுக்கான முழு நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்.

இதோ தேர்வு விடைத்தாள்களைத் தர வேண்டிய மணி ஒலிக்கப்படுகிறது. மனிநிறைவோடு, மகிழ்வோடு அதை ஆசிரியரிடம் சேர்ப்பித்துவிட்டு தேர்வு அரங்கத்தை விட்டு வெளியேறுகிறீர்கள்.

முக்கியமான ஒரு செய்தி:

தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த பின்னர் நேராக வீடு வந்து சேரவும். யாரிடமும்

“எப்படிடா எழுதினே?” என்று கேட்க வேண்டாம். விடைகளைப் பற்றிய ஆய்வுகள் வேண்டாம்.

தேர்வு எழுதிய பின் அத்தேர்வை மறக்கவும். அடுத்த தேர்வுக்கு தயாராகவும்.

ஏன்? ஏன்?

மேற் சொன்னவைகளுக்கெல்லாம் தகுந்த காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றியும், தேர்வு மதிப்பீடுகள் பற்றியும் அடுத்த இதழில் காண்போம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்