Home » Articles » வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!

 
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!


செலின் சி.ஆர்
Author:

வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!

வெற்றிக்கான அடிப்படைத் தூண்கள் என்று பொருளாதார நிபுணர்கள் பல விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். தொழிலாளர்களைத் தேர்வு செய்தல், நேர மேலாண்மை, சரியான வரவு செலவு கணக்கைப் பராமரித்தல், விளம்பரங்கள் செய்யும் முறைகள்.. இப்படி நிறைய இந்தப் பட்டியலில் மிகமுக்கியமான இடத்தைப் பிடிப்பது, முதலீடு மற்றும் மறுமுதலீடு நீங்கள் உங்கள் தொழிலில் சூரப்புலி ஆகவேண்டுமென்றால் சரியான முதலீடு தேவையான சமயங்களில் மறுமுதலீடு செய்தல் இந்த இரண்டு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக நாம் முதலீடு செய்யும் போது செலவு செய்யும் பணத்தை அடிப்டையாக்க் கொண்டு, சிறிய முதலீடு, பெரிய முதலீடு அல்லது சிறிய செலவ, பெரிய செலவு என்றுதான் மதிப்பிடுகிறோம். இது சரியான அணுகுமுறை அல்ல. எது தேவையான செலவு எது தேவையற்ற செலவு அல்லது எது இப்பொழுதே செய்தாக வேண்டிய முதலீடு, எது தள்ளிப்போடத் தகுதி வாய்ந்த முதலீடு என்பது குறித்த விழிப்புணர்வு தேவை. செலவு குறைவான முதலீடெல்லாம் சரியானது என்றும், செலவு அதிகமான முதலீடெல்லாம் தவறான அல்லது தேவையற்ற முதலீடு என்றும் அர்த்தமல்ல. எடுத்துக்காட்டாக உங்கள் அலுவலகத்திற்கான உள் அலங்கார வேலைக்கு ஆகும் செலவு ஐம்பதாயிரம் ரூபாய். உங்கள் உற்பத்தி பொருள் இப்பொழுது மிகக் குறைந்த அளவே ‘ஸ்டாக்’ இருக்கிறது. அடுத்த ஆர்டருக்குத் தேவையான அளவு கூட இல்லை. உற்பத்திப் பொருளின் அளவை (Stock) அதிகரிக்கத் தேவையான முதலீடு, ஒரு லட்சம் ரூபாயை இப்போது செலவழிக்க வேண்டும், முதலில் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் உள் அலங்கார வேலைகளைச் செய்வோம். உற்பத்தியைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பீர்களானால், நீங்கள் எடுப்பது தவறான முடிவாகும். அப்படியில்லாமல், செலவைக் கொஞ்சம் ஓரம்கட்டி விட்டு, பலன்களை அடிப்படையாக்க் கொண்டு உங்களை நீங்களே சில கேள்விகள் கேட்டு குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

1.உள் அலங்காரம் செய்யாமல் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமா? உற்பத்திக் குறைவாயிருப்பதால் ஏற்படும் இழப்புகள் அதிகமா?

2. உள் அலங்காரம் செய்யாமல் தள்ளிப் போட்டால்கூட ஆர்டர்களை விரைவாய் அனுப்பி, பணம் ஈட்ட முடியும். ஆனால், உற்பத்திப் பொருட்களே இல்லாவிட்டால் பொருளை அனுப்புவும் முடியாது, லாபம் பெறவும் முடியாது என்பது சரிதானே…?
3. உற்பத்திப் பொருடகள் எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டியது அவசியம். உள் அலங்கார வேலையைத் தள்ளிப் போடுவதென்பது சாத்தியம்தானே…?
4. பொருட்களைத் தயாரிக்க செலவு அதிகம் தானென்றாலும், அதை ஒரு சில மாதங்களில் எடுத்து விடலாம். உள் அலங்காரத்திற்கு இப்பொழுது செலவு செய்து விட்டு, உற்பத்திப் பொருட்கள் இல்லாத பட்சத்தில் தொழிலில் ஒரு முடக்கம் ஏற்படும் என்பது உண்மைதானே?

மேற்கண்ட கேள்விகளையெல்லாம் நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளும்போது இப்பொழுதே செய்தாக வேண்டிய, மிகவும் தேவையான முதலீடு, உற்பத்தியைப் பெருக்குவதற்கானது தான் என்பது தெளிவாகப் புரியவரும். இந்த சமயத்தில் இந்த முதலீட்டை செய்யாமல் தவிர்ப்பதால் ஏற்படும் இழப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிடுங்கள். நிச்சயமாக உங்கள் முதலீட்டுத் தொகையை விட பல மடங்கு அதிகமாயிருக்கும். இன்னும் சிலர், வேலைக்கு ஆட்களை சேர்ப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். இப்போது என்ன அவசரம், பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்றே பல வருடங்களை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். நான்கு ஆட்கள் செய்யும் வேலையை நான் ஒருவேன செய்து விடுகிறேன் பார் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயலில் இறங்குவார்கள். விளைவு, சின்ன சின்ன வேலைகளிலிலேயே, உடல் உழைப்பிலேயே நிறைய நேரத்தை செலவழித்து விட்டு, முக்கியமான நபர்களை சந்தித்தல், தொழில் சார்ந்த கூட்டங்கள் இவற்றில் பங்கேற்க முடியாத்தால், தானே செய்தாக வேண்டும் என்றிருக்கும் செயல்களை செய்யாமல் போவதால் அவர்கள் இழந்திருகும் தொகை, நான்கு வேலை ஆட்களுக்கு கொடுத்திருக்க வேண்டிய சம்பளத்தை விட பல மடங்கு இருக்கும்.

நீங்களும் யோசித்துப் பாருங்கள், இதுவரை எத்தனை முறை சரியான முதலீடுகளை, செய்ய வேண்டிய முதலீடுகளை செய்யாமல் விட்டிருக்கிறீர்கள்…? தேவையற்ற முதலீடுகளை செய்வது, தேவையான முதலீடுகளை செய்யாமல் தவிர்ப்பது இரண்டுமே மிக மிக தவறான விஷயங்கள்தான். தொழிலில் வெற்றி பெற விரும்புபவர்கள் செய்யவே கூடாத விஷயங்கள்தான்.

சேமிப்பிற்காக இவ்வளவு என சரியாகத்திட்டமிட்டுக் கொண்டீர்களென்றால், உங்கள் தொழில் பரந்து விரிந்து கிளைகள் பரப்பும். அதேசமயம், இந்த தெளிவான திட்டமிடல் உங்களுக்கு மன அழுத்தம் இல்லாத தொழில் முன்னேற்றத்தை, வாழ்க்கை முறையை சொந்தமாக்கும். தொழிலில் சீரான வேகம், முன்னேற்றம் இருக்க வேண்டுமென்றால், அதந்த செலவுகளுக்கென வைத்திருக்கும் பணத்தை அதற்குமட்டுமே செலவழிக்கும் மனப்பக்குவம் உங்களுக்குக் கைவரவேண்டும். இதை எடுத்து அதுல போட்டு, அதை எடுத்து இதுல போட்டு.. என்று சுற்றி வளைத்துக் குழப்பும் கதையே இருக்கக்கூடாது

நிதானமான வேகத்தில், சரியான முறையில் மறுமதீடு செய்யும்பொழுதுதான் வெற்றியை நிரந்தர மாக்கிக் கொள்ள முடியும். ஏனெனில் ஒருமுறை வெற்றியடைவது மிக மிக எளிதான காரியம். அதைத்தக்க வைத்துக் கொள்வதில், இன்னும் இன்னும் பல மடங்காக்கிக் காட்டுவதில்தான் உங்களது சாமர்த்தியம் வெளிப்படுகிறது. அதற்கான பாலபாடம் முதலீடு, மறு முதலீடு இவற்றில் தெளிவான திட்டமிடலைப் பின்பற்றுவதுதான். இதற்கு மனம் சார்ந்த குணங்களும் கொஞ்சம் நிறையவே தேவைப்படுகிறது. சலனமில்லாமல் ஆழ்ந்து யோசிக்கும் குணம், முழுமையான மனக்கட்டுப்பாடு, எந்த விஷயத்திலும் அதீத )over attachment) ஒட்டுதலற்றதன்மை, பணத்திற்கு அடிமையாகாத குணம்…இவை அத்தனையும் உங்களுக்குக் கைவரட்டும். முதலீட்டு முறைகளில் தெளிவு பிறக்கட்டும் பிறகென்ன?

வெற்றி உங்களை தேடி ஓடி வரும். உங்களது தொழிலில் சாம்ராஜ்யம் உலகெங்கும் விரவிப் பாயும். என்ன, நான் சொல்வது சரிதானே..?
(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்