Home » Articles » இது வேண்டாம் இது வேண்டும்

 
இது வேண்டாம் இது வேண்டும்


admin
Author:

உலகத்தில் நிறையவே மாற்றங்கள்!
மனிதனுக்குள்ளும் நிறையவே மாற்றங்கள்!
எல்லாத் தேவைகளையும் நிறைவேற்ற
எலக்ரானிக் பொருளோ கைக்குள்ளே!
பெற்றவர்களின் தேவையை நிறைவாக்க பையன் இல்ல
நாட்டுக்குள்ளே!

எதிர்ப்பார்ப்புகளோ எக்கச்சக்கம் ஏமாற்றம் மிஞ்சிடும்போது
நட்பில்லே… உறவில்லே கோபத்துக்குள்ளே!
“முகப்பூச்சு இல்லாமலே
நம் வாழ்க்கை வேசம் ஆச்சு இந்தப் பாருக்குள்ளே!
களையச் சொன்ன கழுத்திலே
கத்தி விழுகிற செய்தியை சொல்லுது
தொலைக்காட்சி, வானொலி வீட்டுக்குள்ளே!

இது வேண்டாம்! இனி இது வேண்டும்!

ஆம்!
பண்பு வேண்டும்
அன்பு வேண்டும்
குணம் வேண்டும்
பணம் வேண்டும்
பாசம் வேண்டும்
நேசம் வேண்டும்
பண்பாடு வேண்டும்

இவை எல்லாம் சேர்ந்த புத்தாண்டு வேண்டும்.
2008 புத்தாண்டே…!
நீ அந்த ஆண்டாக மலரேன்!
-என். செல்வராஜ்

2008-ல் உங்கள் குறிக்கோளில் இதுவும் இணைந்தே இருக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் தேசத்தை நேசிக்கிறீர்களா?

உங்களுக்குத் தூய்மையான தேசமும், நேர்மையான வாழ்வும் வேண்டுமா?

பொது இடத்தில் குப்பை போட வேண்டாம், பொது வாழ்க்கையில் இலஞ்சம் என்ற குப்பையைப் போட வேண்டாம்.

நீங்களும் நன்றாக இருக்கலாம்!

நாடும் நன்றாக இருக்கும்.

-R. சக்ரவர்த்தி,
துறை கண்காணிப்பாளர்,
குற்றப்புலனாய்வு, கோவை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்