Home » Articles » உடல் நலம் பேணுவோம்

 
உடல் நலம் பேணுவோம்


சூரியன்
Author:

முன்னுரை

வாழ்வில் முழு வெற்றிக்கு உடல் நலம் பேணல் அவசியமான ஒன்று. உடலுக்கும், மனதுக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. மனம் பாதிக்கப்படும்போது உடல் பாதிக்கப்படும். உடல்நலம் பற்றி ஒரு விழிப்புணர்வை இக்கட்டுரை ஏற்படுத்தும். அதன் பிறகு அடுத்த மாத இதழில் இருந்து சிறப்பு மிக்க அனுபவம் மிக்க பல டாக்டர்களிடமிருந்து கட்டுரை பெற்று தன்னம்பிக்கை வாசகர்களுக்கு கொடுக்க முடிவு செய்து உள்ளேன். அதில் ஒவ்வொரு உடல் பகுதி சிறப்பு மருத்துவர்கள் அந்த பகுதியின் நோய் வருதவற்கான காரணங்களும் நடவடிக்கைகள் பற்றியும் எழுத உள்ளார்கள்.

உடல் ஓர் அற்புதமான இயந்திரம்

நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக நெய்வேலியில் பல ஆண்டுகள் பணிபுரிந்த போது ஓர் பராமரிப்பு பொறியியாளராக இருந்தேன்.

பராமரிப்பு பணியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. Preventive Maintenance (பழுது வராமல் இருக்க செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகள்)

2. Breakdown Maintanance (பழுது ஆனபின் செய்ய வேண்டிய பணிகள்)

அந்த அனுபவத்தை வைத்து உடல் என்ற அதிசயத்தக்க இயந்திரத்தைப் பற்றி சிந்தித்தேன். மனித உடலில் Mechanical, Electrical, Electronic, Communication, Computer, Chemical, Structural, Hydradics, Contron Systems ஆகிய அத்துணை பொறியியல் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு “Bio-Medical Engieneering” வித்தை.

இத்தகைய அற்புத இயந்திரத்தை நன்கு புரிந்து கொண்டு சரியாகக் கையாளல் அவசியம்.

இந்த இயந்திரத்தை நாம் பெரும்பாலும் ‘Breakdown matintenance’ செய்கிறோம். ஆனால் ‘Preventive Maintenance’ செய்வது குறைவு. Preventive- சரியாகச் செய்து வந்தால் நோய் வராமல் காக்கலாம். துன்பங்களைத் தவிர்க்கலாம்.

உடல் நலம் என்று வரும்பொழுது கவனிக்கபட வேண்டிய அம்சங்கள் – உணவு, உறக்கம், உடல் உறவு, தூக்கம், உடல்பயிற்சிகள் ஆகும்.

பொதுவாக நோய் வருவதற்கு அடிப்படையில் மூன்று காரணங்கள். உடலைப் பயன்படுத்தும் முறையில் –

1. Over use. (சில பகுதிகளை அதிகமாகப் பயன்படுத்துதல்)

2. Under use. (சில பகுதிகளை பயன்படுத்தாமலிருத்தல்)

3. Mis use. (சில பகுதிகளை தவறாகப் பயன்படுத்துதல்)

ஆனால் நம் வாழ்வியல்-தொழில் அமைப்பில் மேற்கண்டவை செய்ய வேண்டியது ஏற்பட்டால் – அவற்றைச சரி செய்ய – தக்க பயிற்சிகள் செய்ய வேண்டும். அவற்றிற்கு –

1. யோகாசனப் பயிற்சிகள்

2. உடல் ஓய்வுப் பயிற்சிகள் (Relaxation Exercise) பயன்படுகின்றன. அவற்றை-

i) வேதாத்திரி மகிரிஷி அவர்களின் எளிய உடல் பயிறசிகள்
ii) வாழும் கலைப்பயிற்சி (Art of Living)
iii) ஈஷா யோகப் பயிற்சி

ஆகிய மையங்களிலோ அல்லது முறையான தக்க ஆசிரியர்களிடமோ கற்றுக்கொண்டு செய்தால் – உடலை சரியாகப் பராமரிக்கலாம்.

ஒரு பழமொழி உண்டு.
‘செருப்புக் காலைக் கடிக்கும் போதுதான்
கால் பற்றிய உணர்வே மனிதனுக்கு ஏற்படுதுண்டு’

அதுபோல் உடலின் ஒரு பகுதி வலி வரும்போது அந்த பகுதி பற்றிய நினைவு நமக்கு வருகிறது. நாம் வலிக்கு மருந்து உண்ணாமல் நோய் வருவதற்கான காரணம் கண்டுபிடித்து அதற்குத் தீர்வு காண வேண்டும்.

உதாரணத்திற்கு: தலைவலி வருவதற்கு 20வது காரணங்களுக்கு மேல் இருப்பதாக சொல்கிறார்கள். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் தலைவலி நாம் உணர முடியாமல் மறத்துப்போகும். அது தற்காலிகத்தீர்வு. ஆனால் நாம் காரணங்களை கண்டு பிடித்து நிரந்தர தீர்வைக் காண வேண்டும்.

நிறைவுரை

நோய் – disease என்பது dis ease. அதாவது நாம் Easy ஆக Free ஆக இல்லை என்பதைக் காட்டுகிறது. உடல் ஆரோக்கியம் என்பது ஓர் சந்தோஷமான விஷயம் . நம்முடைய இலட்சியங்களை அடைவதற்கும் – எல்லா இன்பங்களையும் முறையாக அனுபவிப்பதறகும் உடல் ஆரோக்கியம் அவசியம்.

இயற்கை உணவுகள் உடல் நலம் கொடுத்து Postive Energyயை அதிகரிக்கும்.

“யோகா” பயிற்சிகள் உள்சக்தியைக் கூட்டும். எல்லா உள் சுரப்பிகளையும் சரியாக இயங்க வைக்கும். எல்லாப் புலன்களையும் நுண்மையாக்கி நாம் அனுபவிக்கும் எல்லாப் புலன் இனபங்களையும் உச்சமாக அனுபவிக்க வைக்கும்.

ஒவ்வொரு நாளும் உடலைப் பேணி இன்பம் பெறுவோம! வாழ்த்துக்கள்!!


Share
 

1 Comment

  1. Sv,Meyyappan says:

    Dear Sir,

    Your Article is very very useful for everybody. Please Countinue your service.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்