Home » Articles » எல்லாமுமே முடியும்

 
எல்லாமுமே முடியும்


admin
Author:

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் உலகில் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறப்போவது யார் என்றால் “பெண்கள்” என்று சொல்லிவிட முடியும்.

பல்வேறு துறைகளிலும் கால்பதித்து ஆணுக்கு நிகராக “சாதனை பணி” ஆற்றி வருவது கண்கூடு.

வீட்டு வேலை பார்ப்பதும், பிள்ளைகளை பெறுவதும் தான் தமக்கு இடப்பட்ட கட்டளை என்று பெண்கள் வாழ்ந்த காலம் இனி இல்லை. எல்லா நிலைகளிலும் முப்பத்தி மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்று “சாதிப்பு” என்பது இன்றைய பெண்கள் சமுதாயத்தின் அன்றாடச் சந்திப்பாக இருக்கிறது.

இது உண்மை! ஆளுமைப் பண்பை நிரம்பப் பெற்று ஏற்கும் பணிகளை முதன்மையாக்குகின்ற சக்தியை பெருமளவு பெற்றுவிட்ட “சக்தி”கள் இன்றைக்கு கிராமப்புற பஞ்சாயதுக்களிலும் பார்க்க முடிகிறது.

கிராமப்புற பெண்கள் அறியாமையிலும், பழமையிலும் தோய்ந்து தேய்ந்து போய்க் கிடக்கிறார்கள். தலைவர் பொறுப்பா? அவர்களிடம் நினைத்துக்கூடப பார்க்க முடியவில்லை என்று எத்தனையோ “குரல்கள்” உரக்கச் சொன்னதுண்டு. அவர்களை எல்லாம் திரும்பிப் பார்க்கச் செய்யும் விதமாக பொறுப்பின் முக்கியத்துவம் உணர்ந்து கிராமப்புற ஊராட்சி ஒன்றியங்களில் சாதித்திருக்கிறார்கள் இரு பெரும் தலைவிகள்.

ஒருவர் ஓடந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. லிங்கம்மாள் சண்முகம்.

இன்னொருவர் ஈரோடு மாவட்டம் திண்டல் ஊராட்சி மன்றத் தலைவர் – திருமதி. மணிமேகலை குமாரசாமி.

ஆறாயிரத்து ஐநூறு மக்கள் வசிக்கக்கூடிய ஒன்பது குக்கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து ஓடந்துறை பஞ்சாயத்தாகும். இதன் தலைவராக 2006ல் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி லிங்கம்மாள் சண்முகம் அவர்கள் தலைவர் ஏழையாக இருந்தாலும் மக்கள் ஏழையாக இருக்கக்கூடாது என்று பல்வேறு பணிகளை அற்புதமாக செய்து தமிழக அரசிடமிருந்து 2007ல் உத்தமர் காந்தி விருதினையும், வாசிங்டன் உலக வங்கியிடமிருந்து பாராட்டுப் பத்திரத்தையும், ஜப்பான் பல்கலைக்கழக Kobe University of Forein Tudies இங்கிருந்து ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றிருக்கிறார்.

1996ல் பஞ்சாயத்து வருமானம் வெறுமனே ரூபாய் 20,000 என்றிருந்ததை – இன்றைக்கு 43/4 லட்சமளவு உயர்த்தியிருக்கிறார்.

செலவீனத்தைக் குறைத்து, உண்மைக்கு புறம்பாக செயல்படாமல் வரிவிதிப்பை சரியாக செய்து மக்களின் தேவைகளை முன் நின்று முடித்து வைத்து நிறைய பாராட்டுதல்களை பெற்று வருகிறார்.

மண்சாலை இல்லாத கிராமமாக, குடிநீரில் தன்நிறைவு பெற்ற கிராமமாக, மாற்றியிருப்பதோடு அல்லாமல் 100% தனிநபர் கழிப்பிடம், எல்லாக் கிராமங்களிலும் பொதுக் கழிப்பிடமென அசத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் நிதியுதவியை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்காமல் மக்களின் நிதியுதவிகளை பெற்று நிறைய சாதிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

அரசு உதவியில்லாமல் உலக வங்கி மற்றும் ஊராட்சி மன்ற மக்கள் பங்களிப்புடன் மின் காற்றாலை ஒன்றை நிறுவி அதன் மூலம் 350 கிலோ வாட் உற்பத்தியை கொடுக்கக்கூடிய நிறுவனத்தை அமைத்திருக்கிறார்.

வருடத்திற்கு 8 லட்சம் யூனிட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பஞ்சாயத்திற்கு தேவை 4 லட்சம் யூனிட் மட்டுமே. மீதமுள்ளவற்றை அரசாங்கத்திற்கு கொடுத்து கட்டணம் பெற்று கிராம முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.

7 வருடங்களில் இந்த மின் காற்றாலை பஞ்சாயத்திற்கு சொந்தமாக்கிடுமளவு அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறார்.

சிறப்பான முறையில் மகளிர் உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலமாக ‘தாகம்’ மினரல் வாட்டர், கைவினைப் பொருடகள் உற்பத்தி என பணிகள் நிறையவே நடைபெற காரணமாக இருக்கிறார்.

அவரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது நல்லது செய்வார்கள் என்று தான் மக்கள் நம்மை தேந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்ததை அதிகாரிகளுடன், மக்களுடன் சுமூகமான உறவை வைத்துக் கொண்டு தனித்தன்மையுன் செயல்பட்டது தான் காரணம். மேலம்,

1996-லிருந்து 2006ம் ஆண்டுவரை கணவர் சண்முகம் அவர்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை (0% பாக்டீரியாக்கள்) உருவாக்கியதிலிருந்து சாலையோரம் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடுகள், 675 காங்கிரீட் வீடுகள், வீணான மரக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல் என பல பணிகளை செய்து 98ல் தமிழகத்தில் சிறந்த பஞ்சாயத்து கிராம சேவாரத்னா விருது, பத்திரிக்கை சார்பாக ஜாம்பவான் விருது, டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து நிர்மல் கிராம புஷ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவரின் துணையுடன் என் பணிகளை நிறைவாக செய்து வருகிறேன் என்றார். ஒரு நாட்டின் / வீட்டின் வளர்ச்சியில் ஏற்படுத்த ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடுகள் காணாமல் ஒருமித்த ஒற்றும, கொண்ட கடமையில் நிறைவு இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு திருமதி S. லிங்கம்மாள் சண்முகம் ஓர் உதாரணம் என்றே சொல்ல்லாம்.

ஈரோடு மாவட்டம் திண்டல் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. மணிமேகலை குமாரசாமி இன்னொருவர் ஆவார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பஞ்சாயத்தின் தலைவரான இவரும், கொண்ட கடைமையை செவ்வனே செய்து 2006 ஆம் ஆண்டு தமிழக அரசின் உத்தமர் காந்தி விருதினை பெற்றிருக்கிறார்.

இதே பஞ்சாயத்தில் 2001-06 ஆம் ஆண்டுக்கான நிர்மல் புஷ்கர் விருது கிடைக்கப் பெற்றிருக்கிறது. இந்த திண்டல் பஞ்சாயத்தை முழுச் சுகாதாரம் உள்ள கிராமமாக – 100 சதவீதம் வரி வசூலிப்பை செய்யக்கூடிய கிராமமாக மாற்றியிருக்கிறார் திருமதி. மணிமேகலை குமாரசாமி.

கிராமத்தின் தேவைகளை அறிந்து, கிராமத்தின் பிரச்சனைகளை உணர்ந்து, அரசாங்கத்தின் திட்டங்களை, சரியான அளவு பயன்படுத்தி கிராமத்தின் வருவாயை பெருக்கி, பெண்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தி கிராம முன்னேற்றத்திற்கு மகத்தான பணிகளை செய்திருக்கிறார். அவரிடம் தொடர்பு கொண்டபோது, “வாழ்க்கையின் மதிப்புமிகுந்த நேரங்கள் எது என்றால்நாம்நம் கடமைகளை செய்த நேரமும் பிறருக்கு சேவை செய்த நேரமும் தான் என்பார் என் கணவர் குமாரசாமி அவர்கள், அவரின் வழிகாட்டுதலில் செயற்கரிய செயலகளைச் செய்ய முடியுமென்று தன்னால் முடிந்ததை செய்து வருகிறேன் என்றார், 12,618 கிராமப்புற ஊராட்சிகளில் உள்ளவர்களும் இவர்களைப் போல ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் மலரும். நமது இந்தியா இன்னும் இன்னும் வளரும்.
-நன்றி! S.R.K. தேவராஜன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்