Home » Articles » தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!

 
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!


admin
Author:

அதிகாலை முதல்
அந்தி மாலை வரை
நிதிதேடி நிதிதேடி
நித்தம்தன் னலம் சேர்த்தீர்!

முதுமையுற்றோர் நோயுற்றோர்
நிதியற்றோர் கதியற்றோர்
நாதியற்றோர் எவர்க்கேனும்
நலம்விளைக்க முனைந்தீரா?

உழுதுழுது உடல்வருந்தி
உழைத்துழைத்து உலகுக்கே -உணவை
உற்பத்தி செய்வதும்!

ஊனுருக்கி உடலுருக்கி
உயிர்ப்பிழிந்து உயிர்ப்பிழிந்து
நாள்தோறும் நாள்தோறும்
பால்பொழிந்து பயன்விளைத்து

தன்னலமே கருதாது
தனையழித்து நமை வளர்க்கும்
மாடுகளிடமிருந்து
மாட்டுப் பொங்கல் நாளில்
மானுடத்திற் கொரு சேதி

வாய்க்கும் போதெல்லாம் -உலகை
வாழ்விக்க தொண்டு செய்வீர் – இதுவே
வாயில்லா ஜீவன்களின்
வாழ்வு தரும் சேதி!

உழைப்பைக் கொடுத்து
ஊதியம் பெறலாம்…!
காசைக் கொடுத்து
காடுகழனி பெறலாம்…!

பணத்தைக் கொடுத்து
பதவியைப் பெறலாம்!
நிரந்தர மில்லா
ஒன்றைக் கொடுத்து
நிரந்தரமில்லா
ஒன்றைப் பெறலாம்!

ஆனால்..
தன்னார்வத் தொண்டால்
நிரந்தரமில்லா
ஒன்றைக் கொடுத்து
நிரந்தரமானதை
நீங்கள் அடையலாம்
நிரந்தரமாகவும்
நீங்கள் அடையலாம்!

தன்னார்வத் தொண்டாற்ற
தமிழர் திருநாளில்
சூளுரைப்போம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்