Home » Articles » தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!

 
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இனிய வாசகர்களே!

வாழ்க வளமுடன். 2008-ம் ஆண்டின் முதல் மாதத்தில் புகுந்து விட்டோம். பழையன கழிந்து புதியனவற்றுக்குள் புகுந்திருக்கிறோம். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழத்துக்கள்! நம் வாழ்விலும் கடந்த மூன்றாண்டு காலமாகப் பல குணநலன்களை அதிகரித்துக் கொள்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்ற செய்தியை விரிவாய் படித்தோம்.

பொதுவாக இன்று மனிதர்கள் பாதிப்பது நோய் மற்றும் கவலையால்தான். டாக்டர்களும் இன்று நோயாளிகளிடம் தியானம் செய்யுங்கள்; நோய், குறிப்பாக மனநோய்கள், டென்சன் முதலியன குணமாகும் எனக்கூறி வருகின்றனர். தியானம் செய்வதால் பலவிதமானப் பலன்களைப் பெறுவதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது என்பதை விரிவாய் காண்போம்.

வரலாறு

புராணங்கள், இதிகாசங்கள் முதற்கொண்ட இன்றைய நாகரிக உலகம் வரை, தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறவர்களே வாழ்வில் வெற்றிடைய முடிகிறது என்பதைப் பறைசாட்டுகின்றன. எந்தவிதமான மாறுபட்ட எண்ணமும் இல்லாமல், ஒரே நினைவுடன் விழிப்பு நிலையில் செயல்பட்டே அர்ச்சுன்ன் வில்லுக்கு சிறந்த நபரானார். தியானத்தில் ஈடுபட்டவர்களே விஞ்ஞானிகளாக வலம் வருகின்றனர். எந்த ஒரு சவலான செயலையும்செய்ய தியானம் செய்த பின்றே செய்து வெற்றி பெற்றனர்/பெறுகின்றனர்.

உலகை வசமாக்கும் தியானம்

பிறரால் பெரும்பான்மையாக விரும்ப몮படும் நிலைதான் எல்லோரிடமும் சுமுகமாய் நடப்பது. சாதாரணமான நிலையில் நமக்கு நெருக்கமானவர்களிடம், மட்டுமே சுமுகமாய் நடப்போம். தியானம் செய்த பின், எல்லோரையும் சம்மாய் பாவிக்கத் தோன்றும். உலகையே வசமாக்கும் தாரக மந்திரம் பிறருக்கு உதவுதல். ஆனால் சாதாரணமாக எல்லோருக்கும் உதவமாட்டோம். ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னிடமுள்ள எல்லா வளங்களாலும், பிறருக்கு உதவி செய்வதால் மட்டுமே உலகை வச மாக்கலாம். இதற்கு தியானம் உதவுகிறது.

தியானம்! என்ன?

மன இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல்; தன்னையறிதல், புலன்களை நெறிப்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்தல்; இறைவனை, இயற்கையை அறிய உதவி செய்யும்; நமது அறிவைப் பிரபஞ்ச அறிவுடன் இணைக்கும். இதுபோல் பல கூறலாம். பொதுவாக ஒன்றின் மீது முழுமையாக ஈடுபாடு கொள்வது. மன அலைச்சுழல் வேகத்தை தேவைப்படும்போது தேவையான அளவுக்கு குறைத்துக் கொள்வது. அவரசரமான உலகில் நம் மனதுக்குள் ஏராளமான கருத்து மோதல்கள் உருவாகும். தியானம் இதை சரி செய்து மனம் அமைதி நிலைக்குச் செல்ல உதவுகிறது; தியானம் செய்வதால் நம் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அழகான ஓர் உதாரணம் மூலம் அறியலாம். தெளிந்த நீரில் அடியில் உள்ளவைகளைப் பார்ப்பதற்கு ஒப்பானது; தியானம், மனதின் அலைச்சுழல் வேகத்தைக் குறைக்கிறது. எனவே நம் குறிக்கோளை அடையாளம் காணலாம்.

பலன்கள்

சாதாரணமாக விநாடிக்கு 20 முதல் 30 முறை நம் (மூளை) மனமானது சுழல்கிறது. தியானம் செய்வதால் இந்த சுழல் வேகம் குறைகிறது. வேகம் எந்த அளவு குறைகிறதோ, அந்த அளவு நல்ல எண்ணங்கள் வான்வெளியிலிருந்த நம்மை அடைகிறது. திடீரென கோபப்படும்போது அலைச்சுழல் வேகம் அதிகரிக்கும். இது வரை பேசாத சொற்களை பேசுவர்; செய்யாத செயல்களைச் செய்வர். அந்த அலைச்சுழல் வேகத்தில் வாழ்ந்து மறைந்தோர் எண்ண அலைகள் நம்மை அடைவதே இதற்குக் காரணம். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சீர்குலையும் மூளை மற்றும் உடல் செல்கள் தியானத்தால் விரைவில் புதுப்பிக்கப்படுகின்றன.

புலன் வரை எல்லை கட்டிய கவர்ச்சியில் உண்டாகும் மயக்க நிலை நீங்கும்; அறிவில் தெளிவு உண்டாகும். ஒன்றைச் செய்தபின் வருந்த வேண்டியதில்லை. பொறுப்புணர்ந்து செயல்படும் பண்பு அதிகரிக்கும். முழு மன ஈடுபாடும், விழிப்பு நிலையும் அதிகரிக்கிறது. தீய குணங்கள், பாவச் செயல் பதிவுகள் நீங்குகின்றன.

மனம் நுண்ணிய நிலையை அடைவதால், பிறரது மனதை ஊடுருவி அவரது எண்ணங்களை எளிதாய் உணரும் ஆற்றல் பெறலாம். மனம் தளராமல் செயல்களில் தொடர்ந்து ஈடுபடலாம். இது போன்ற பல பலன்களைத் தருவது தியானம்.

தன்னம்பிக்கை

ஒன்று தன்னால் முடியும் என்ற திடமான, உறுதியான எண்ணம் தான் தன்னம்பிக்கை. பேச்சு, செயல்கள் மூலமே மற்றவர்களின் தன்னம்பிக்கையை அறிய முடியும். வளர்ப்பு முறை, பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் ஆகியன தன்னம்பிக்கையை நிர்ணயிக்கம் காரணிகள்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்”

என்றார் பொய்யா மொழி. அசாதாரணத் துணிச்சல், அறிவார்ந்த செயல்பாடு ஆகியன வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

தியானம் செய்வோம்; திருப்தியாய் வாழ்வோம்!

தியானம் என்பது ஒரு பயிற்சி என நாம் நினைதுக் கொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அது பயிற்சி தான். பின் அதுவே வாழ்க்கையாக வேண்டும். பள்ளயில் சிறு வயதில் படித்தவைகள் (வாய்ப்பாடு, சில பார்முலாக்கள்) இன்றும் நம் நினைவில்நிற்கிறதே. நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் முதலியவை ஆரம்பத்தில் பழகும் போது பயிற்சிதான். பின் எப்போது வேண்டுமானாலும் எந்த வயதிலும் அவைகளைச செய்கிறோமே. அதுபோல் தான் தியானமும்.

ஏதாவதொன்றின் மீது நம் எண்ணங்களை (மனதை) செலுத்தி, ஒருமுகப்பாட்டுடன், விழிப்பு நிலையில் இருபதே தியானம். இது போல் செய்வதால் நம் ஆற்றல் அதிகரிக்கிறது. அறிவை அறிய முடிகிறது. அத்தியாவசியத் தேவை என்ன எனத் தெரிகிறது. அவைகளை அடைவதற்கான வழி முறைகளை நம் மனமே தெளிவாய் அறிந்து கொள்கிறது. காரணம் Tuning of Mind: மன அலைச்சுழல் வேகத்தைக் குறைத்தல் என்ற ஒரு செயல் தியானத்தால் நடைபெறுகிறது. அதனால் வான்காந்தக் களத்திலே (Cosmic Energy) கலந்து நிறைந்துள்ள எண்ண அலைகள் நமது மன வேகத்துக்கு ஏற்றவாறு நமக்கு கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்கள் சாதனைகளை உதாரணமாய் கூறலாம். நல்ல முழு அளவில் உள்ள பலரால் செய்ய முடியாத சாதனைகளை எவ்வாறு அவர்களால் செய்யமுடிகிறது.

அவர்களது திண்ணிய எண்ணம். அதையே சதா நினைத்து, அதைச் செயல்படுத முழு முனைப்புடன், விழிப்பு நிலையில், கவனச் சிதறலின்றி திட்டமிடுவதால்தான் வெற்றி பெறமுடிகிறது. நெருப்பு பிடித்துக் கொள்ளும் வரை போராட்டம்தான். அதன் பிறகு அது சுற்றிலுமுள்ளள காற்றிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு எரிவதுபோல, நம் மனமானது ஆற்றலை வெளியிலிருந்து பெற்று தனது நம்பிக்கையாக தன்னம்பிக்கையாக மாற்றிக்கொள்கிறது.

என்ன பேசினாலும், எச்செயல் செய்தாலும் அதன் விளைவறிந்து செய்வதுதான் தியானத்தின் பலன். எப்போதும் விழிப்புநிலையில் இருப்பதே தியானத்தின் வழி. நமக்குப் பின்னால் வருபவர்களைகூட அறிந்து கொள்ளும் திறமை வந்துவிடும்.

நம்மிடமுள்ள குணங்களை அறிந்து கொள்வோம்; மனதை ஒருநிலைப்படுத்தும் எளிய தியானத்தைச் செய்வோம்; நம் மன ஆற்றலை அதகரித்துக் கொள்வோம். பெரியோர்களிடம் ஆலோசனைகள் பெறுவோம். இப்படி நம் வாழ்க்கையை நடத்தினால், எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் தன்னம்பிக்கையாளராக, சொல்வதைச் செய்யும் திறமையுடன், செய்வதை மட்டும் சொல்லும் விழிப்பு நிலையுடன் வாழலாம். வாழ்வோம். மகிழ்வோம். நம் வாழ்க்கைத் தொடர் நிறைந்தது. வாழ்க வளமுடன்!


Share
 

3 Comments

 1. johnpaul says:

  now on words i ll do meditation…

 2. M.J. SYED ABDULRAHMAN says:

  அன்புள்ள வாசகர்கள் படித்து விடவேனம்! படித்துச்யல்படுவோம். நன்றி
  M.J. SYED ABDULRAHMAN

 3. M.J. SYED ABDULRAHMAN says:

  அன்புள்ள வாசகர்கள் நல்லவைகளை படித்து விடவேனம்! படித்துச்யல்படுவோம். நன்றி
  M.J. SYED ABDULRAHMAN

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்