Home » Articles » உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'

 
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'


மனோகரன் பி.கே
Author:

புகார்களும் மேல் முறையீடுகளும்: இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், சுயேட்சையான தகவல் ஆணையங்களை அமைக்க வழி செய்கிறது. இதன்படி, மத்தியில் ஒன்றும், ஒவ்வொரு மாநிலத்தில் ஒன்றும் என ஆணையங்கள் செயல்படும். இந்த ஆணையத்தின் தலைவராக தலைமைத் தகவல் ஆணையர் இருப்பார். அவருக்குக் கீழ் 10 தகவல் ஆணையர்கள் இருப்பார்கள் இச்சட்டத்தை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம்

தகவல் தர மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் தகவல் அதிகாரிக்கு எதிராக இரண்டு நிலைகளில் முறையீடு செய்யலாம். தகவல் அதிகாரியைவிட, மூத்த அதிகாரியிடம் முதலாவதாக முறையீடு செய்யலாம். இரண்டாவதாக மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம். ஒரு விஷயம் தொடர்பான தகவலை தர மறுப்பதற்கான காரணத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் தகவல் அதிகாரிக்கு உண்டு. தகவல் அதிகாரிக்கு எதிரான முறையீடுளை 30 முதல் 45 நாட்களுக்குள் பைசல் செய்து விட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.

கட்டணம்: தகவல்களைப் பெற குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் இக்கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. தேவையற்ற தகவல் அறியும் கோரிக்கைகளை கட்டுப்படுத்தவும் இத்தகைய கட்டணம் துணைபுரியும். மத்திய அரசு, தகவல் அறிய பத்து ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆவண நகல் கோருவோர் பக்கம் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சி.டி. அல்லது பிளாப்பியில் தகவல் வேண்டுவோர் ரூ. 50 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட மனுக்களில் நிராகரிக்கப்பட்டவை தொடர்பான மேல்முறையீடுகள், பொதுமக்கள் குறை களைதல், சட்ட அமலாக்க கண்காணிப்பு ஆகியவற்றுக்கு என புதிய சுயேச்சனையான அதிகாரிகள் – தகவல் ஆணையர்கள் – நியமிக்கப்படுகின்றனர். மத்திய மாநில அரசுகள் நியமித்துள்ள தகவல் ஆணையர்களில் பலர் உயர் அரசு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். அரசு அதிகாரிகள் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படும் போக்கு அரசுத் தகவல்களின் மீது அதிகாரிகளுக்குள்ள ஏகபோக உரிமையை மேலும் அதிகமாக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் முன்னாள் அரசு அதிகாரிகள் தகவல் ஆணையர்களாக இருப்பது வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் அரசுச் செயல்பாடுகள் குறித்து தெரிந்தவர்கள் என்பதால் வெளிப்படைத்தன்மை மேம்பாட்டு தகவல் பெறும் நடைமுறையை எளிதாகவும், துரிதமாகவும் மாற்ற அவர்களால் முடியும் என்ற கருத்து நிலவுகிறது.

அபராதம்: ஒரு விசயத்தில் குறிப்பிட்ட தகவலை வெளியிட வேண்டாம் என்று நிரூபிக்கப்பட்டால் அன்றி, அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டியவையே என்றும் மேல் முறையீட்டு அதிகாரிகள் கருத இச்சட்டம் வகை செய்கிறது. காரணம் ஏதும் இல்லாமல் செய்யப்படும் தாமதத்திற்கு, தகவல் ஆணையம் நாளொன்றுக்கு ரூ. 250 ரூபாய் அபராதம் விதிக்கலாம். மக்களிடமிரிந்து மனுக்களை பெற மறுக்கும் அதிகாரிகள் மீதும் தீய எண்ணத்துடன் தகவலை அழிக்கும் அதிகாரிகள் மீதும் ரூ. 25000 வரை அபராதம் விதிக்கலாம். இருப்பினும் தகவல் அதிகாரிகள் நேர்மையாகவும், மனப்பூர்வமாகவும் செயல்படும்போது ஏற்படும் தவறுகளிலிருந்து அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக கிராம மற்றும் நகர்புற ஏழை மக்கள் அரசிடமிருந்து தகவல் பெறுவதற்கு இச்சட்டத்தில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டுதான், இச்சட்டம் நியாயமான கட்டண விதிப்பிற்கு வகை செய்கிறது. தகவல் கோருவோர் தகவலைப் பெறுவதற்கான காரணத்தை சொல்லத் தேவையில்லை. அதேபோல் தங்களைப் பற்றிய விவரங்களை எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. தகவல் கோரும் அனைவருக்கும், குறிப்பாக புலன் வளர்ச்சி குன்றியவர்களுக்கு, கோரிக்கைகளை எவ்வாறு அரசிடம் சமர்ப்பிப்பது என்பதை எடுத்துச் சொல்வதற்கும் அரசு உதவுகிறது.

வரையறைகள்: எனினும் இச்சட்டத்தின் செம்மையான செயல்பாடு மற்றும் நடைமுறை குறித்து சில ஐயங்கள் எழுப்பப்படுகின்றன. அரசுக் கோப்புகளில் அலுவலர்கள் எழுதும் குறிப்புகள் வெளியிடப்படுமானால் அரசு அலுவலர்கள் தங்களது உண்மையான கருத்துகளையும், மதிப்பீட்டையும் வெளியிடத் தயங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் இச் சட்டம் தேசிய நலன் பிரிவின்படி அமைச்சரவை ஆவணங்கள், முடிவு மேற்கொள்ளும் இதர ஆவணங்கள் ஆகியன வெளியிடப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்மையான அதிகாரிகளை பாதுகாப்பதற்கான ஆயுதமாகவே இந்தச் சட்டத்தைக் கருதலாம். முறையான உள்நடைமுறைகள், சட்ட நடைமுறைகள் ஆகியவற்றின்படி கோப்புகளில் கருத்துக்களை வெளியிடும் அதிகாரிகள் அச்சம் கொள்ளத்தேவையில்லாத வகையில் இப்பிரிவு அமைந்துள்ளது. இச்சட்டத்தினால் சாதாரண (அற்புதமான) கோரிக்கைகள் பெருமளவில் பெருகும் என்ற அச்சமும் உள்ளது. இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்களை தவறாக பயன்படுத்துவதற்கோ அல்லது அதிகாரிகளையோ, இதர குடிமக்களை அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தப்படும் என்ற அச்சமும் எழுகிறது.

இச்சட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட்டால், வெளிப்படையான ஆட்சிக்கான நடைமுறை தொடங்கப்பட்டு விடும். இச்சட்டம் அரசுத்திட்டங்களன் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. நலத்திட்டங்களுக்கான தொகை வேறு காரியங்களுக்கு செவிடப்படாமல் தடுக்க இச்சட்டம் உதவும். சுருங்கச் சொன்னால் இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்கள் அதிகாரத்தில் பங்குபெறுவதாகும். அதே சமயத்தில் அதிகாரத்தை எவரும் தவறாகப் பயன்படுத்துவதை தடைசெய்யும் ஒரு கருவியும் ஆகும். தவறிழைக்கும் அதிகாரிகளை தண்டிப்பதிலோ இச்சட்டத்தின் வெற்றி அமைந்துவிடாது. தண்டனை நடவடிக்கைகளினால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நடத்திச் செல்ல முடியாது. திறமையான நல்லாட்சியை ஊக்குவிப்பதிலும், ஊழலைத் தடுப்பதிலும் இச்சட்டம் எப்படி துணைபுரிகிறது என்பதன் மூலமே இச்சட்டத்தின் வெற்றி அமையும்.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி குடும்ப ரேஷன் கார்டு, வீடு மற்றும் நிலப் பட்டா கிடைக்காதவர்கள் அவற்றைப் பெறமுடியும். அரசின் பல்வேறு நலத்திட்ட பலன்களை கேட்டுப் பெற இச்சட்டம் வழிவகுக்கும். முடங்கிக் கிடக்கும் பல திட்டங்களை உயிர்பிக்க முடியும். சுகாதார சீர்கேடுகள் மற்றும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அரசிடம் நிலுவையில் உள்ள பல கோப்புகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவும், அதன் தற்போதைய நிலைமையை தெரிந்துகொள்ளவும் இயலும். இச்சட்டம் மக்களின் ஆயுதமாக மாறவேண்டுமானால் இதனை உரியமுறையில் பயன்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தகவல் உரிமைச் சட்டம் சாமானிய மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு பிரமாஸ்திரம், இச்சட்டம் குறித்து பொது மக்களிடம் இச்சட்டம் குறித்து பொது மக்களிடம் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசு மட்டுமின்றி தொண்டு நிறுவனங்களும், பொதுநல அமைப்புகளும் ஈடுபட வேண்டும். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த உரிமையை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். அப்போது தான் இச்சட்டத்தை கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும்.


Share
 

2 Comments

  1. gmurugan says:

    so the tagaval ariyum sattam , giramappura makkallukum payanbduvakail, vizibbunaru yarbbada .battirikkai matrum tolaikachi, vailaka ,munnetthu sellavendu, arrsu athikarikallu, tondu amaibbukallu makkalluku vuthi seaiyavendum.

    nandri

  2. vel says:

    Editor sir, அவர்களுக்கு வணக்கம், Employment office க்கு ஒரு கடிதம் போட்டு ஆறு மாதம் ஆகிறது.அதனுடைய நிலைமை என்ன என்று தெரியவில்லை. தயவு செய்து எப்படி தகவலறியும் உரிமை சட்டத்திற்கு கடிதம் எழுதுவது என்று தெரியபடுத்தவும் or Email id க்கு format of form அனுப்பி வைக்கவும்

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு