Home » Articles » எங்கே நிம்மதி

 
எங்கே நிம்மதி


திருமுருகன்
Author:

‘ஸார் ரெண்டு கனெக் ஷனுக்கு பணம் கட்டியிருக்கேன். கொஞ்சம் சீக்கிரமா கனெக்ஷன் வேணும்’. டிவிஷனல் என்ஜினியர் ராமிசாமியிடம் ஒரு இளைஞன் வந்த நின்றான்.

“பணம் கட்டிய ரசீதை குடுத்துட்டு வெளியே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”. ராமசாமி சொல்ல வெளியே சென்று பார்வையாளர் நற்காலியில் அமர்ந்தான் இளைஞர். ஐந்து நிமிடத்தில் ராமசாமியின் அறையில் இருந்து அவரது உதவியாளர் வந்து இளஞரின் அருகில் அமர்ந்தார்.

“சார் உங்களுக்கு லைன் குடுக்கனும்னா த்ரீ மன்த்ஸ் ஆகும். உங்க ஏரியா கனெக்ஷ்ன்ஸ் எல்லாம் கொடுத்தாச்சு. இனி அடுத்த எக்ஸ்சேன்ஞ் ஓபன் ஆனதுக்கப்புறம் தான்” என்றார் உதவியாளர்.

“சார் ரொம்ப எமர்ஜென்சி” என்று கூறி ஏதோ விளக்கமெல்லாம் கொடுத்தான் இளைஞன்.

“அப்படித்தான் கொஞ்சம் செலவாகுமே, ஒரு லைனுக்கு என்ஜினியருக்கு இரண்டாயிரம், எனக்கு ஆயிரம் மூவாயிரம் குடுத்தா உடனே முடிச்சு குடுத்துர்றேன்” என்று பேரம் பேச பணம் கைமாறியது.

“என்னம்மா சாப்டியா, நான் சாப்டாச்சு, பொண்ணும், மாப்பிள்ளையும் வந்தாங்கனா, சரி சாப்பிட்டு போக சொல்லு. உடம்பை பார்த்துக்க சொலு. சரி வேலையிருக்கு போன வெச்சுருட்டா”. ரிசீவரை வைத்துவிட்டு கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்தார். சர்புதீன். தொலை தொடர்புத்துறை இன்ஜினியர். கடமை தவறாத நேர்மையான அதிகாரி. வேலை நேரத்தில் ஒரு காபி கூட மற்றவர் பணத்தில் சாப்பிடமாட்டார். ஒரு ரூபாய்கூட அன்பளிப்பாக பெறாதவர் என்று பெயர் பெற்றவர். வரும் வாடிக்கையாளர்களை உட்கார வைத்துதான் பேசுவார்.

ஒரே பெண் திருமணம் செய்து கொடுத்து நல்ல முறையில் செட்டில் ஆகிவிட்டான். வாங்கும் சம்பளத்தில் நிறைவாக குடும்பம் நடத்தும் மனைவி என்று நிம்மதியாக இருக்கிறார்.

கதவை திறந்து கொண்டு சக அதிகாரி ராமசாமி உள்ளே நுழைந்தார். நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தார்.

“சர்புதீன் நிம்மதியே இல்லீங்க. சம்பளத்துக்கு மேல இரண்டு மடங்கு அதிகமா சம்பாதிச்சு வீட்டுக்கு போய் கொட்றேன். அப்பவும் பற்றாக்குறைதான். பெண்ணை படிக்க அனுப்பினா தண்டமா செலவு செஞ்சுட்டு படிக்காம ஊரைச் சுத்தறான். என் பையன் வருத்தம் தெரியாம வளர்ந்து ஒரு வேலையிலும் உருப்படியா இருக்க மாட்டீங்கரான். எவ்வளவு சம்பாதிச்சாலும் நிம்மதியே இல்லீங்க சர்புதீன்.” சொல்லிக்கொண்டே போனார் ராமசாமி.

‘சம்பளத்தை தவிர வேறு எதையும் இனாமாக வாங்குவதை நிறுத்திவிடுங்கள் ராமசாமி. நிம்மதி தானே வரும்” என்று சொல்ல நினைத்தார் சர்புதீன். ஆனால் இந்த வார்த்தையை சொல்லி இந்த அலுவலகத்தில் நிறைய பேரை பகைத்துக் கொண்டாயிற்று. இவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாமென்று மௌனமாக அமர்ந்திருந்தார் சர்புதீன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு