Home » Articles » குளிர்காலத்தில் தோல் பாதிப்பு

 
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு


இராமநாதன் கோ
Author:

தோலில் சுரக்கின்ற திரவங்களால் தோல் மென்மையாகவும் ஈரப்பசையுடனும் இருக்கிறது. ஆனால் குளிர்காலங்களில் ஈரப்பசை குறைவதாலும் உடலில் ஏற்படுகிற மாற்றங்களாலும் தோல் வறண்டுவிடும். சிலருக்கு வறட்சி அதிகமாகி சொர சொரவென இருக்கும்.

கால் பாதங்களில் தோல்கள் வறட்சியால் கால் வெடிப்பும் வெடிப்புக்குள் தண்ணீரும் மண்ணும் சேர்ந்துவிட்டால் கிருமிகளின் பாதிப்பும் ஏற்பட்டு புண் ஏற்படும்.

தோல் வறட்சியாகி மென்மையான தோல் கடினமான தோலாகிவிடும். இது பெண்களுக்கு அழகு பிரச்சினையும் கூட.

இதற்கு என்ன செய்யலாம்?

தோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் உடலை கழுவக்கூடாது. அப்படி கழுவும்போது ஏற்கனவே குறைந்துள்ள ஈரப்பசை மேலும் குறைந்துவிடும். மேலும் சோப்பு போட்டு குளித்தால் இன்னும் அதிகமாகவே வறட்சியாகிவிடும். அதனால் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம்.

மிதமான வெந்நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள் மற்றும் குளிர்காலத்தில் வறட்சி, ஏற்பட்டவர்கள் குளிர் கிரீம்களை (Cold Creams) உபயோகிக்கலாம். பாரபின் எண்ணெய், வாசிலைன் போன்ற தைலங்களும் பயனளிக்கும்.

கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாடிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். மாலையில் குறிப்பாக குளிர்காலத்தில் காலுறைகளை இரவு முழுவதும் அணிந்தால் கால் வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.

உணவில் பால் , முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம். தேவைப்படுவோருக்கு ‘ஏ’ மற்றும் அனைத்து வைட்டமின்கள் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும்

சொறி – சிரங்கு

இந்நோய் குழந்தைகளுக்கே அதிகம்.

அரிப்பு

  • உடலில் குறிப்பாக விரல்களுக்கிடையில், மணிக்கட்டில், இடுப்பில், இன உறுப்புகளில் அரிப்பு ஏற்படும்.
  • பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
  • குடும்பத்தில் அல்லது உடனிருப்பவர்களுக்கு அரிப்பு ஏற்படும்.
  • அரிப்பினால் சொறிந்து அதில் கொப்புளம் ஏற்படும், சீல் பிடிக்கும்.

சிகிச்சை

  • குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே சமயத்தில் லின்டேன் என்ற மருந்தை இரவில் உடல் முழுவதும் (முகத்தை தவிர) போட்டு பகலில் குளிக்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை போட்டால் போதுமானது. குளித்தபின் புதிய ஆடைகளை போட வேண்டும். ஒரு வார இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் பூரண குணமாகும்.

– டாக்டர் கோ. இராமநாதன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு