Home » Articles » அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!

 
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!


இராமநாதன் கோ
Author:

இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகிற முக்கிய காரணம், சாலை விபத்து. 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கிறார்கள்.

இதனால் தனிமனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஒன்று. நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்.

விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள்:

மிக அதிக வேகம்: வண்டிகளை அளவான வேகத்தில் மக்கள் போக்குவரத்திற்கேற்ப ஓட்டினால் எண்ணற்ற விபத்துக்களைக் குறைக்கலாம். ஒருவரை ஒருவர் முந்திக்கொள்வதற்காக வேகமாகச் செல்லும்போதுதான் இத்தகைய விபத்துக்கள் நிகழ்கின்றன.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்: நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்களுக்கு காரணமாக இருந்த ஓட்டுநர்கள் பெரும்பாலோர் போதை மயக்கத்தில் ஒட்டியதுதான் முக்கிய காரணம்.

போதையில் இருக்கின்றபோது ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் அதை உடனடியாக சமாளிப்பதற்கான மூளையின் விழிப்புணர்வு குறைந்துவிடுவதே இதற்கு அடிப்படைக் காரணம்.

தலைக்கவசம்: இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவோரும் அதில் உட்கார்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணியாமல் செல்வதால்தான் விபத்துக்களின் போது மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழ்கிறார்கள். ஹெல்மெட் அணிவது மிக அவசியம்.

பாதுகாப்பு முறைகள்: கார்களில் செல்வோர் சீட்டின் பெல்ட்டை அணிதல், குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு முறைகளைச் செய்தல் போன்றவைகள் விபத்து நடந்தாலும் உயிரிழப்பைத் தடுக்க உதவும்.

விபத்தின்போது உடனடி சிகிச்சை: கோர விபத்துக்களில் ஏற்படுகிற இரத்த இழப்பை சரி செய்தல் மற்றும் விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தில் செய்கிற சரியான சகிச்சை முறைகள் மூலம் பல உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

சாலை அமைப்புகள்: நாகரீக வளர்ச்சியினால் தற்காலத்தில் வாகனங்கள் பன்மடங்காகிவிட்டன. ஆனால் அதற்கேற்ப சாலைகள் அதிகமாகவோ அகலமாகவோ இல்லை. இதனால் சாலைகளை தேவைக்கேற்ப மாற்றியமைப்பது மிக அவசியமானது.

சாலை விதிகள்: சாலை விதிமுறைகளை அறியாமல் ஓட்டுபவர்களாலேயே விபத்துக்களும் அதிகமாகின்றன. அதனால் சாலை விதிமுறைளின் சட்ட முறைகளை கடுமையாக்கி அமுல்படுத்துதல் அவசியமாகும்.

சாலை பாதுகாப்பு நெறி முறைகள்: சாலை பாதுகாப்பு பணிகளில் இருக்கின்ற காவலர்கள் மற்றும் வண்டியை ஓட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரிகள் சரியாக பணிகளை செய்யாதபோது சாலை விபத்துக்கள் அதிகமாகவே செய்யும்.

வாகன பாதுகாப்பு: விபத்தின்போது வண்டிகள் அதிகமாக பாதிப்படையாமலிருக்க வண்டியின் முன்புறமும், பின்புறமும் பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துதல் நல்ல பலனளிக்கும்.

பெரிய வாகனங்களைப் பரிசோதித்தல்: பெரிய வாகனங்களான பேருந்து, லாரி போன்றவைகளை முற்றிலும் தகுதியான முறையில் உள்ளதா என்பதை பரிசோதித்து அனுமதியளிக்க வேண்டும்.

– டாக்டர் கோ. இராமநாதன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு