Home » Articles » மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!

 
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!


சூரியன்
Author:

மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.

மேற்கண்டவை போக, தம்மை உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. பொதுவாக சான்றோர்கள் தாங்கள் வாழுகிற காலத்தில் வருங்கால மக்கள் நலமாக இருக்க பல வகையில் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு தங்களுக்கு என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படாது நல்லது பல செய்கின்றனர். அவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனையோ பெரியவர்கள் செய்த செயல்களின் விளைவை நாம் அனுபவிக்கறோம்.

அந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு தண்ணீர் ஏற்பாடு செய்து மரங்களாக உருவாக்கிப்போதல் நம்முடைய முக்கிய கடமையாகும்.

இன்றைய சூழலில் காற்று மண்டலம் மாசுபட்டுக் கொண்டுள்ளது. அவற்றைச் சுவாசிக்கிற மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகின்றன. இப்போது நாம் மாசுபடுத்திவிட்டுப் போய் விடுகிறோம். வருங்கால குழந்தைகள் எல்லாம் அவற்றை சுவாசித்து நோய்வாய்ப்பட்டு துன்பங்களை அனுபிக்கப் போகின்றன. இந்தப் பிரச்னைக்குப் பல தீர்வுகளில் ஒரு முக்கிய தீர்வு நிறைய மரங்களை வளர்த்தல் ஆகும்.

தண்ணீரில் அறிஞர்களின் கருத்துப்படி நமக்குக் கிடைக்கிற நீரின் அளவு குறைந்து கொண்டே போய் கொண்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழே போய் கொண்டுள்ளது. இவற்றிற்குத் தீர்வு நிறைய மழை வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தலும், மழைநீரை கடலில் சென்று வீணாக கலந்து விடாமலும் திட்டமிடப்பட்டுப் போதிய அளவு நீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும்.

மழையை உருவாக்க மரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே, நிறைய மரங்களை வளர்ப்பது அவசியமானது. மரங்கள் கொடுக்கிற காய்களும், கனிகளும், உணவுக்கும், மருந்துக்கும் பயன்படுகின்றன.

நாட்டில் வாழுகிற எல்லா மக்களும் கீழ்கண்ட உறுதியை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் இன்னும் சில ஆண்டுகளில் நாடு பசுமை நிறைந்த நாடாக மாறிவிடும்.

1. என்னால் முடிந்த அளவு என் வாழ்க்கையில் எவ்வளவு மரங்களை வளர்க்க முடியுமோ வளர்ப்பேன்.

2. நான் சார்ந்திருக்கிற நிறுவனத்திலும், சமுதாய அமைப்புகளிலும் இதைப்பற்றிச் சொல்லி குழுக்களை இணைத்து – மனிதர்களை திரட்டி – எவ்வளவு மரங்களை நட முடியுமோ நடுவோம். அவற்றை தண்ணீர் விட்டுப் பாதுகாத்து வளர்ப்போம்.

3. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகளிடத்தில் கூட்டங்கள் நடத்தி மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுமுறைகளில் மரங்கள் நடுதலில் ஈடுபடுத்துவோம்.

4. பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை மரங்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைப்போம்.

5. நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்கப் பல அமைப்புகள் மூலம் அரசுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருப்போம். பல்வேறு மனிதர்கள் மத்தியில் நதிகள் இணைப்பு பற்றி எண்ணங்கள் பரவி மீண்டும் மீண்டும் எண்ணப்பட்டால் அது செயலாக மாறும். ‘சுதந்திரம் வேண்டும் வேண்டும்’ என்று இந்திய மக்களால் ஆர்வத்துடன் எண்ணப்பட எண்ணங்கள் தலைவர்களை உருவாக்கி செயலாக மாற்றியது. அதுபோல் மரங்கள் வளர்ப்பது பற்றியும் நதிகள் இணைப்பது பற்றியும் எண்ண அலைகளை உருவாக்குவோம். செயல்படுவோம்.

மனிதராய் பிறந்து இதுவரை வாழ்ந்து விட்டோம். இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இந்த பூமியில் நாம் இல்லை. நாம் இந்த உலகை விட்டு போவதற்குள் முடிந்த அளவு முடிந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு நல்லவற்றை கொடுத்து விட்டு போவோம். அப்படிச் செய்தால் நம் உயிர் போகும்போது நிறைவாக இந்த உலகை விட்டு செல்லலாம்.

‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’

-தொடரும்..


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு