Home » Articles » ஈடுபாடு

 
ஈடுபாடு


தங்கவேலு மாரிமுத்து
Author:

தெய்வம் எது என்று நாத்திகரை கேட்டால், தெய்வம் ஏது? என்பார்கள் ஆத்திகரைக் கேட்டால், ஒரு ஐம்பது பெயர்களையாவது அடுக்குவார்கள்.

ஆனால் ஒரு அழகான, அர்த்தமுள்ள பதிலும் இருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம்.

ஆம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று பொய்யா மொழிப் புலவரே போதித்து விட்டபிறகு, அந்தப் பொருளை ஈட்டித்தரும் தொழிலைவிட வேறு தெய்வம் உண்டா?

செய்யும் தொழிலே தெய்வம் என்று ஆகிவிட்டால், எண்ணம், இயக்கம் எல்லாமே அதில் இறங்கிவிடும்; ஈடுபட்டுவிடும்; முழுகி விடும். தொழிலில் நாம் முழுகினால் தொழில் எப்படி முழுகும்?

என் நண்பர் ஒருவரின் மகன், ப்ளஸ் டூ முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். வேலைக்குப் போவதைவிட, சொந்தமாய் ஏதாவது செய்தால் என்ன என்ற எண்ணத்தில், எனது நண்பர் அவனுக்கு ஒரு ஜெராக்ஸ் கடை வைத்துக் கொடுத்தார்.

ஏற்கனவே அந்தத் தெருவில் ஏழெட்டு ஜெராக்ஸ் கடைகள் இருந்தன. இவன் எப்படி குப்பை கொட்டப் போகிறான் என்ற குறுகுறுப்பு எனக்கு.

ஆனால் பையன் படு ஸ்மார்ட் ஆரம்பித்த ஆறே மாதத்தில் நம்பர் ஒன் கடையாக அதைக் கொண்டு வந்துவிட்டான். காரணம், செய்யும் தொழிலே தெய்வம் என்ற தத்துவத்தை பரிபூர்ணமாக உணர்ந்து, ஏற்று, தன் தொழிலில் அவன் காட்டிய ஈடுபடாது.

மற்ற கடைக்காரர்களிடம் இருந்த வீக் பாயிண்ட்டுகளை எல்லாம் கவனித்தான். அத்தனை விஷயங்ளிலும் தன் கடையை ஸ்ட்ராங் பாயிண்ட்களாக மாற்றிவிட்டன. எதிரியின் பலவீனம் தனது பலம் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.

அவன் கவனித்த பலவீனங்கள்:-

1. ஒரு கடைக்காரர், இயந்திரத்தின் பராமரிப்பை கவனிப்பதே இல்லை. இரண்டு நாளைக்கு ஒருமுறை இயந்திரம் படுத்துவிடும். நம்பி எவரும் கடைக்கு வர முடியாது.

2. இன்னொரு கடையில், அந்த முதலாளி எப்போதும் கடுகடுத்த முகத்துடன் தான் இருப்பார். உதவிக்கு இருக்கும் பெண்ணோ எதையோ பறிகொடுத்த மாதிரி சோக சாயத்தை முகம் முழுக்க அப்பியிருப்பார். வருகின்ற வாடிக்கையாளருக்கும் அந்த கடுகடுப்பும் சோகமும் உடனே ஒட்டிக்கொள்ளும். அடுத்த முறை வரவே மாட்டார்கள்.

3. இன்னொருவர், காலை பத்தரை மணிக்குத்தான் கடையே திறப்பார். மத்தியானம் இரண்டு மணிக்கு ஷட்டரை இறக்கி விட்டு சாப்பிட உட்கார்ந்துவிடுவார்.

4. இன்னொருவர், கடையில் உள்ளே நுழைவதற்கே முடியாது. வெளியில், அதுவும் ரோட்டில் நின்று கொண்டுதான் பேப்பரைக் கொடுக்க வேண்டும். வாங்க வேண்டும்.

5. இன்னொரு கடை, உள்ளே போகலாம். ஆனால் உட்கார இடம் கிடையாது மின்விசிறி, முதலாளிக்கு மட்டும்தான். வேலை முடிந்து வெளியே வருகிறவரை வியர்வையில் பனியன் நனைந்து விடும்.

6. இன்னொரு கடை, ஜெராக்ஸ் மட்டும் தான் உண்டு. லேமினேஷன், ஸ்பைரல் பைண்டிங் போன்ற கூடுதல் வசதிகள் கிடையாது. இது சில வாடிக்கையாளர்களுக்கு சங்கடம்தான்.

7. இன்னொரு கடை, பெரியதாகவோ சிறியதாகவோ ஜெராக்ஸ் எடுக்கும் வசதியோ, நிறைய பிரதிகளை விரைவாக எடுக்கும் வசதியோ இல்லாத இயந்திரம், பல வாடிக்கையாளர்களுக்கு இது பெரிய அசௌகரியம்.

நம்ம பையன் இத்தனை குறைகளையும் தூளாக்கி விட்டான்.

  • லேட்டஸ்ட் மெஷினாக வாங்கிப் போட்டான். எல்லா வசதியும் உண்டு.
  • ரெகுலர் பராமரிப்பு, அதனால் ப்ரேக் டவுன் கிடையாது. எடுக்கும் நகல்கள் பளிச்சென்று இருக்கும்.
  • வாடிக்கையாளர் கடை வாசலில் கால் வைக்கும் போதே, வாங்க சார் என்ற வார்த்தைகள் அவரை வரவேற்கும். உள்ளே நுழைந்து விட்டால், இவனுடை மலர்ந்த முகம் அவருடைய முகத்தையும் மலர வைத்து விடும். உதவிக்கு இருக்கும் பெண்ணுக்கும் இனிய சொற்கள்தான் இயல்பான சொற்கள்.
  • உள்ளே உட்கார ஏழெட்டு ப்ளாஸ்டிக் ஸ்டூல்கள், மின் விசிறி, சுத்தமான பானையில் குளிர்ந்த குடிநீர்.
  • இரண்டு ரூபாய்க்கு ஜெராக்ஸ் எடுத்து விட்டு பத்து ரூபாய் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் மீதி கிடைக்கும்.
  • உதவிக்கு இருக்கும் பெண்ணை ஓவராக வேலை வாங்குவது கிடையாது. எந்த நேரமும் தானும் கடையில் இருந்து வேலைப்பளுவைப் பகிர்ந்து கொள்ளம் பாங்கு. காலையும் மாலையும் உதவியாளருக்கு டீ, அல்லது காபி, சில நாட்களில் பஜ்ஜி, வடையும் உண்டு. முக்கியமாக கனிவு என்பது பங்கு, கண்டிப்பு இருபது பங்கு.
  • கடை வாசலில் கவர்ந்து இழுக்கும் பளிச்சென்ற , மின் விளக்குடன் கூடிய போர்டு.
  • ஞாயிற்றுக்கிழமையும் அரைநாள் கடை திறந்திருக்கும்.
  • சுவரில், கண்ணுக்கு இனிமை தரும் வண்ணப்படங்கள். மனதுக்கு வலிமை தரும் தன்னம்பிக்கை வாசகங்கள்.

இப்படி வாடிக்கையாளரை தெய்வமாக நினைத்து, செய்யும் தொழிலையும் தெய்வமாக நினைத்து, அதில் முழுமையான ஈடுபாடு, அக்கறை, அர்ப்பணிப்பு, கவனம் எல்லாம் காட்டும்போது, ஏன் வாடிக்கையாள்கள், மற்ற கடைகளை விட்டு விலகி இவனைத் தேடி வர மாட்டார்கள்? இவனுடைய தொழில் எப்படி சிறக்காமல் போகும்?

ஈடுபாட்டுடன் பாடுபட்டால்
வீடு தேடி வருவாள் வெற்றி தேவதை

-சுதங்க மா முனிவர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு