Home » Articles » சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்

 
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்


செலின் சி.ஆர்
Author:

என் மதிப்பிற்கும், பாசத்திற்குமுரிய தன்னம்பிக்கை வாசகர்களுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! என்னடா, build up கொஞ்சம் ஓவரா இருக்கேனு யோசிக்கிறீர்களா! அது ஒண்ணுமில்லீங்க. போன மாதத்திற்கு முந்தின மாத இதழில் சுய சோதனை கேள்வி பதில்கள் கொடுத்திருந்ததுல நிறைய வாசகர்கள் உற்சாகமாகிட்டாங்க. ரொம்ப usefulலா இருந்ததுன்று ஃபோன் செஞ்சு சொன்னதோட மட்டுமில்லாம, தொடர்ந்து இந்த மாதிரி கேள்விகள் கொடுக்கணும்னும் கேட்டாங்க. தொடர்ந்து இல்லேனாலும், ரொம்ப முக்கியமான சில issue பத்தி விவாதிக்கறப்ப நிச்சயமாக இந்த experimental questions கொடுப்பேன். Ok? anyway, தங்களோட கருத்துக்களை என்கிட்ட பகிர்ந்துக்கிட்ட வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தொழில் வெற்றிபெற, முன்னேற Risk எடுக்க வேண்டியது அவசியமா என்பதைப் பற்றி பிறகு விரிவாகப் பேசலாம் என்று முன்பு சொல்லியிருந்தேன் சரி. இப்போது பேசலாம். சென்ற மாதம் திருப்பூரில் ‘சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்’ என்ற தலைப்பில் தொழில் வெற்றிபெறத் தேவையான யுக்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி இடைவேளையின் போது ஒரு இளைஞர் என்னிடம் வந்து, ‘மேடம் நீங்கள் சொன்ன எல்லா tispsமே பயனுள்ளதாக இருந்தது. தொழில் நிச்சயமா முன்னேற முடியுங்கற நம்பிக்கையை எனக்குத் தந்திருக்கு. ஆனா, எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கலாம்னு எனக்குத்தெரியல. இதே குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படறதால, ஒவ்வொரு முறையும் புது முயற்சிகள் எடுக்கறத தள்ளிப் போட்டுட்டு வர்றேன். பத்தாயிரம் ரூபாய் தொடர்ந்து மாதாமாதம் கிடைக்கணுமேங்கற கவலையை, ஐம்பதாயிரம் ரூபாயை இழக்கறனோனு தோணுது. சிலசமயம், நான் செய்றதொழில் வெற்றியைக் கொடுக்க ஆரம்பிச்சப்புறம்கூட, சந்தேகத்தால, அடுத்து தேவையான அளவு முதலீடு செய்ய மாட்டேங்கறேன் மேடம். ரிஸ்க் எடுக்க பயப்படறது சரியா? தப்பா? என்று கேட்டு முடித்தார்.

சாப்பிடுவது சரியா தவறா? சாலையில் நடந்துபோவது சரியா தவறா..? என்பது போல்தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் சாப்பிடும் உணவு தவறானதாயிருக்கும் போது அல்லது மூச்சுக்குழலில் அடைத்துக் கொள்ளும் பொழுதுகூட, இறந்து போய்விட வாய்ப்பிருக்கிறது. இப்படி யாருக்காவது நடந்திருப்பதைக கேள்விப்பட்ட பிறகு நாம் அதற்காக பயந்து சாப்பிடாமல் இருக்கிறோமா? இல்லையே.. அப்படி சாப்பிடாமலிருப்பது முட்டாள்தனம். என்ன செய்கிறோம்? நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கி, தேவையானதை மட்டும், தேவைப்படும் அளவு மட்டும் சாப்பிடுகிறோமா இல்லையா..? சாலையில் நடந்து கொண்டிருந்த பாதசாரி மீது பஸ் மோதி மரணம் என்று தினமும் தான் செய்திதாளில் படித்திருக்கிறோம். அதற்காக, ரோட்டில் நடப்பதையேவா நிறுத்தி விடுகிறோம். இல்லையே..? கவனமாக, ஓரமாக நடந்து செல்வதில்லையா? ஸோ… வாழ்க்கையில் எல்லா விஷயங்ளிலமே ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். அதற்காக நாம் வாழாமலிருக்க முடியாது. தொழிலில், குறிப்பாக வியாபாரம் அல்லது சுய தொழிலில் நிச்சயமாக ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். நான் எந்த வித ரிஸ்க்குமே எடுக்காமல்தான் முன்னேறினேன் என்று யாராவது ஒரு வெற்றியாளரைச் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். எனவே ரிஸ்க் எடுப்பதற்கு பயப்படுவதை விட்டு விட்டு எப்போதுமே அதற்குத் தயாரான மனநிலையிலிருப்பது நல்லது. இப்படி ஒரு எதிர்பார்ப்பை, தயாரான மனநிலையை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு மிகவும் வேதனையான, ரிஸ்க்கான கால கட்டத்தில் பதட்டமில்லாமல் முடிவெடுப்பதற்கு உதவும்.

இன்னொரு முக்கியமான விஷயம், நிறைய பேர் Riskஐயும், Seculation ஐயும் குழப்பிக்கொள்வதுதான். இந்த முறை ஆட்டத்தில் ஜெயித்து, விட்ட காசை எல்லாம் எடுத்து விடுவேன் என்று தான் ரிஸ்க் எடுத்தேன். ஆனா, எல்லாம் போச்சே… இந்த முறை இந்த குதிரைதான் வரும்னு ரிஸ்க் எடுத்து பணத்தைக் கட்டினேன். ஆனா காலை வாரி விட்டுடுச்சே.. என்று நிறைய பேர் புலம்புவார்கள். மேற்சொன்ன செயல்களுக்கும், பணத்துக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அவற்றை தொழிலோடு தொடர்புபடுத்துவதும், ரிஸ்க் எடுத்தல் என்று சொல்வதும் தவறு. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்போது எப்போதாவது தோல்வி அல்லது தவறு நேரலாம் என்ற நிலையில் அதை செய்வது தான் ரிஸ்க் எடுத்தல். பெரும்பாலான சமயங்களில் வெற்றி கிடைக்காது, கிடைத்தால் அது பெரிய விஷயம், அபூர்வம் என்ற நிலையில் இறங்குவது, ஒருவித அதிர்ஷ்டம் சார்ந்த கணிப்போடு செயலில் இறங்குவது Speculation. நீங்கள் உங்கள திட்டமிடலை உழைப்பை உங்கள் பங்கீட்டை நம்பி செயலில் இறங்கி ரிஸ்க் எடுங்கள். அதிர்ஷ்டத்தை, குருட்டு நம்பிக்கையை, கண்ணை மூடிக்கொண்டு இரண்டில் ஒன்றைத்தொடுவது போன்ற விளையாட்டில் இறங்காதீர்கள். துணிந்து காரியத்தில் இறங்குவதற்கும், உத்தேசமாக சூதாட்டம் போல் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.’ உங்கள் தொழில் விளையாட்டல்ல, அது சீரியஸான விஷயம் என்று புரிந்து கொண்டாலே எப்பொழுது, எந்த விஷயத்திற்கு, எந்தளவில் ரிஸ்க் எடுக்கலாம் என்பது தெளிவாகும். நான் பலமுறை இதே தொடரில் சொல்லியிருப்பது போல் Parallel field அல்லது line வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் , மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம். உங்களது ரிஸ்க்கின் அளவை இதனால் வெகுவாக குறைக்க முடியும். அதே சமயம் படிப்படியான நம்பிக்கை (gradual hope) நீங்கள் செய்யும் தொழிலின் மீது உங்களுக்கு ஏற்படும். மிகக்குறைந்த அளவு ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள் கடைப்பிடிக்கும் வழி இதுதான். அதேசமயம், உங்கள் தொழிலின் மீது (Business) ஆர்வக் குறைவும், உழைக்கும் தன்மை மந்தமாதும் கூடவே கூடாது. எட்டு மணி நேரம் அலுவலகத்தில் மாத சம்பளத்திற்காக உழைக்கிறீர்கள என்றால், குறைந்தது நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் உங்கள் தொழிலுக்காக உழைத்தே ஆக வேண்டும். இன்னும் எளிமையாக, புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், எவ்வளவுக்கெவ்வளவு ரிஸ்க் குறைவாக எடுக்க ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உழைக்கும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

ஓ.கே. .. ரிஸ்க்கைப் பற்றிக் கேட்டதோடு மட்டுமில்லாமல், முதலீடு செய்வதைப் பற்றியும் அவர் சந்தேகம் கேட்டாரல்லவா? இதைப்பற்றித்தான் அடுத்த இதழில் பேசப் போகிறோம். தொழிலில் invest மற்றும் reinvest செய்வதைப் பற்றி, சரியா?

(தொடரும்)


Share
 

1 Comment

  1. Kaed says:

    Shoot, who would have thuohgt that it was that easy?

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு