Home » Articles » அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!

 
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

நம் வாழ்க்கைத்…. தொடர்

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்:

1) கவசம் அணிதல்:

பண்டைக்காலத்தில் பிறரது ஆயுதங்களின் தாக்குதலைத் தவிர்த்துக் கொள்ள இரும்புக் கவசங்களை அணிந்ததாய் வரலாறு கூறுகிறது. அதேபோல் பிறரது சொல்லும், செயலும் எதிர்மறையாக இருப்பின் அவை நம்மைத் தாக்காமலிருக்க ஒரு கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் அத்தாக்குதலுக்கு ஆளாகி, நாம் நம் தனித்தன்மையை இழந்து உணர்ச்சிக்கு அடிமையாகி செயல்படுவோம்.

அதற்கான பயிற்சி:

மூச்சை உள் இழுக்கும் போது முதுகுத்தண்டின் அடி நுனியிலிருந்து உச்சி வரை வருவதாய் பாவனை செய்து இழுக்கவும், மெதுவாக, முழுமையாக, சப்தமில்லாமல் வெளியிடவேண்டும். வெளிவிடும்போது மூச்சு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையுள்ள எல்லா உறுப்புகளுக்கும் ஆக்கப் பூர்வமான சக்தியைத் (Positive Energy) தருவதாய் பாவனை செய்ய வேண்டும். இதுபோல் 12 மூச்சு தினமும் காலை, மாலை இருவேளை செய்து வரவும். இப்பயிற்சியால் பிறரது எதிர்மறையான எண்ணங்கள் நம் உடலையும் உள்ளத்தையும் தாக்கமுடியாது.

2. கதவை மூடுதல்:

பிறரது உணர்ச்சிவயப்பட்ட பேச்சு நம்மை அடிமையாக்கி, சிந்திக்க விடாமல், உணர்ச்சிவயப்படுத்தி, தவறான வழியில் செயல்படத் தூண்டும், மாலைநேரம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்தால், கொசுக்கள் உள்ளே வந்துவிடும். கதவை மூடிவிட்டால் கொசு வராது. அதுபோல் நாம் காதுகள் வழியே பிறரது தேவையற்ற நம்மை அடிமையாக்கும் சொற்கள் உள்ளே செல்லாமல் காது முன்புறம் கறபனையாக ஒரு கதவைப் பொருத்தி மூடிவிடவேண்டும்.

இதற்கான பயிற்சி. அவர்களது பேச்சில் கவனம் செலுத்தாமல் மனதுக்குள் வேறு ஒரு காட்சியை அதாவது நம்மால் விரும்பப்படும் ஒன்றை, நினைத்தால் சிறிது நேரத்தில் அவர்களும் பேசி முடித்திருப்பர். அது நம்மையும் பாதிக்காது. அவர்களுக்கும் பேசி முடித்த நிறைவைத் தரும். இந்தக் கற்பனைக கதவு மிகவும் உபயோகமானது. பயன்படுத்துங்கள்.

3. ஓடி விடுதல் (Flight)

‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது பொழமொழி.

“தீயோர் சொல் கேட்பதுவும் தீதே!
தீயோரைக் காண்பதுவும் தீதே!
தீயாரோடு இணங்கி இருப்பதுவும் தீதே!”
என்ற வரிகள் நமக்குத் தெரியும்.

கெட்ட செயல்களைக் கண்டால், அங்கிருந்து ஓடிவிட வேண்டும். இல்லா விட்டால் அவை நம்மையும் அடிமையாக்கி, நம் வாழ்க்கையைச் சீர் குலைத்துவிடும். இங்கு உடலுக்கும் மனதுக்கும் இடையே பெரும் போராட்டம் நடைபெறும். மனம் இடும் கட்டளைகளை உடல் செய்யாது; ஆக மனதுக்கும் உடலுக்கும் ஒத்த உறவில்லையென்று பொருள். ஒத்த உறவைப் பெற உயற்பிற்சிகளும், நல்ல சிந்தனையாளர்களின் நூல்களும், தியானமும் துணை செய்யும்.

விட்டு விடுதலையாதல்:

பழக்கத்தை அடிமைப்படுத்தி வைப்பவர்களால் சாதிக்க முடியும். அவ்வாறு இலாமல் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் நமது திறமைகள் தெரியாமல், செயல்பட்டு துன்பத்துக்கு ஆளாக நேரிடும்.

வாய்ப்புக் கிடைக்கும் வரை எல்லோருமே யோக்கியர்கள்தான். தீய செயல்கள் செய்வதற்கான வாய்ப்புகளுக்கு இடையே வாழ்ந்தாலும், நேர்மையாக வாழ்பவர்களே சுதந்திரமானவர்கள். அவர்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது; அன்பைத் தவிர.

ஆனால் இன்று அவரவர் தகுதிக்கேற்ப போட்டி போட்டுக் கொண்டு அடிமைகளாக வாழ்ந்து கொண்டுள்ளோம். வயதில் பெரியோரைக் கேட்டால் ஆங்கிலேய ஆட்சி அடிமைக்காலம் என்று கூறுவர். காந்திஜி மக்கள் உணர்வுகளை ஒன்றுபடுத்தி, தலைமையேற்று ஆங்கிலேய ஆட்சி என்ற அடிமைத்தனத்திலிருந்து இந்திய மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். பெற்ற சுதந்திரத்தை இன்று நம் ஊர் அரசியல்வாதிகளிடம் நாம் அடகு வைத்து விட்டோம். அடிமைகளாக அவர்கள் அறிவிக்கும் இலவசங்களுக்காக ஏங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கூட்டமாய் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனோபாவம் வந்துவிட்டது. இம் மாதிரியான கூட்டத்தில் உள்ளவர்கள் சுயமாய் சிந்திக்காமல், மேலுள்ளவர்களது உத்திரவுப்படி செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் திறமைகளை அறியாமல் தன்னம்பிக்கையில்லாமல், சாவி கொடுத்த பொம்மை போல் செயல்பட்டு வருகின்றனர்.

நம் நேர்மையான செயல்பாடுகள் நமக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கும் இதற்கு காரில் உள்ள பேட்டரியை உதாரணமாய் கூறலாம். கார் ஓட பேட்டரி அவசியம். அதுபோல் கார் ஓடும் போது அப்பேட்டரி சக்தியைப் புதுப்பித்துக் கொள்கிறது. (Recharge). ஆனால் செல்போன்களிலுள்ள பேட்டரி, போன் உபயோகித்தால் சக்தியை இழக்கும். ஒரு கட்டத்தில் மீண்டும் சக்தியைப் பெற்றாலே (Recharge). மீண்டும் செயல்படும். அடிமைத்னம் என்பதை செல்போனுக்கு ஒப்படலாம். பிறரது தூண்டுதல் சக்தி குறைந்தவுடன் செயல்பாட்டை நிறுத்தி விடுவார்கள். சுயமாய் செயல்பட மாட்டார்கள். வெளியிலிருந்து கிடைக்கும் உத்வேகத்தால், குழுவாகச் சென்று செயல்படுவர்.

எனவே, அடிமையாகாமல், சுதந்திரமாய் பெரியவர்களின் ஆலோசனை பெற்று செயல்படும் போது நம்மிடமுள்ள தன்னம்பிக்கை செயல்படும்.

கறுப்பராய் பிறந்த ஆப்ரகாம் லிங்கன், அடிமைத்தனத்திலிருந்து முதலில் தன்னை விடுவித்துக்கொண்டு அமெரிக்க நாட்டின் அதிபரானதை நினைத்துப் பாருங்கள். நம்மாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனைகள் செய்ய முடியும். அடிமைத்தளையை அகற்றிடுவோம்; தரணியில் தன்னம்பிகையுடன் வாழ்ந்திடுவோம்.

வாழ்க வளமுடன்!

– (தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு