Home » Articles » மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்

 
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்


செந்தில் நடேசன்
Author:

புதிய சூழ்நிலையில் எந்த உயிரினம் பிழைக்கிறதோ அது வாழத் தகுதியானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அந்த வகையான உயிரினங்கள் மட்டுமே பிழைக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் மற்ற உயிரினங்கள் காலப்போக்கில் மறைந்து விடுகின்றன.

இதற்கு எப்படி விஞ்ஞானப் பூர்வமான விடை கொடுத்தார். தற்போது காணப்படுகின்ற நாய்களில் பல வகையான ரகங்களை நாம் பார்க்கிறோம். இதில் ஏன் இவ்வளவு வகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான மனிதனின் தேர்வு.

சில வீட்டில் வளர்ப்பதற்காக, சிறிய உருவம், அதிக முடி, பார்க்க அழகாக இருக்கும் (Pomaranian).

சில நாய்கள் வேட்டையாட, வெளியில் கடினமான சூழ்நிலையை தாங்க வேண்டி வரும் (Dlohpin)

மனிதன் தன் தேவைக்கு ஏற்ப சில நாய் ரகங்களை தேர்வு செய்து அதை தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்டு வருவதால் புதிய வகையான குணங்கள், புதிய தோற்றம் ஏற்பட்டு தேவையில்லாத குணங்கள் நாளடைவில் மறைந்து போக காரணமாகிறது.

இதில் மரபணு மாற்றத்தை இவர்கள் ஏற்படுத்தவிலை. ஆனால் இவற்றில் உள்ள சிறு வேறுபாடுகளை கண்டறிந்து அவற்றை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து அந்த வகையான உயிரினத்தை அதிகம் உற்பத்தி செய்வதன் மூலம் நாளடைவில் மிக வேறுபட்ட குணங்களை உடைய புதிய நாய் ரகங்களை காணமுடிகிறது.

இதைத்தான் டார்வின் இயற்கையின் தேர்வில் உண்டான மாறுபாடுகள் என்பார். இவை “பல தலைமுறைக்கு செல்கிறது” என்பதை “கிரிகர் மென்டல்” என்ற விஞ்ஞானி தன் ஆராய்ச்சி மூலம் நிரூபித்தார்.

மனிதனுக்கு தன் தோற்றம் பற்றி இன்னும் பல ஆராய்ச்சிகள் சென்று கொண்டு இருந்தாலும் பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட மூன்று காரணங்கள் (Principles).

1. Micro evolution(நுண்ணிய வேறுபாடுகள் தோற்றம்)

2. Natural Selection (இயற்கையின் தேர்வு)

3. Speciation (புதிய உயிரினம் உருவாகுதல்)

1. சடுதி மாற்றங்காத்தல் (Gene mutation) உயிரினங்கள் மரபணுக்களில் சிறு மாறுபாடுகள் (Gene mutation) ஏற்படுகிறது. இந்த மாற்றம் சூழ்நிலையில் உள்ள தட்ப வெப்ப மாற்றம் அல்லது புவியில் வேதிபொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகள் மாற்றம் மிகவும் அரிதாக ஏற்படுகிறது.

2. உயிரினங்களில் ஏற்படும் மாறுபாடுகள். இயற்கையில் எது வாழத் தகுதியாக இருக்கின்றதோ அந்த வேறுபாடுகள் (உறுப்புகள், குணங்கள்) மட்டுமே நிலைத்து விடுவதையும், சூழ்நிலைகளை தாங்க முடியாத வேறுபாடுகள் நாளடைவில் அழிந்து விடுவதால், இயற்கையின் தேர்வு உயிரை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. (டார்வின் விளக்கத்தை முன்பே படித்தோம்).

3. உயிரினங்களில் ஏற்படும் மாறுபாடுள் நிலைத்து நிற்கும்போது புதியதான தோற்றத்தை உடைய உயிரினம் தன்னுடைய மூதாதையரில் இருந்து முழுவதும் வேறுபட்டு இருக்கும்போது, இது தனியாக பிரிந்து வாழ ஆரம்பித்து விடுகிறது.

இனச்சேர்க்கை புதிய உயிரினத்தின் உடன்தான் நடக்கிறது. மூதாதையர்களிடம் இருந்து பிரிந்தே காணப்படுகிறது.

உதாரணமாக மனித இனம் குரங்கில் இருந்து வரும்போது, மனித இனம் பரிமாணத்தை அடைந்த உடன், குரங்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டு விட்டதால், தன் இனத்தின் உடன் தான் இனச்சேர்க்கை செய்து சந்ததிகளை உருவாக்குகிறது. இதனால் இது முற்றிலும் மாறுபட்ட புதிய உயிரினமாக காட்சி அளிக்கிறது. இதைத் தான் புதிய உயிரினம் தோன்றுதல் (Speciation) என்பார்கள்.

மேற்கூறப்பட்ட மூன்று வகையான காரணங்கள் மனித தோற்றத்தை பற்றி ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தாலும் “சில விடுபட்ட தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்”.

என்ன தடயங்கள் தேவை?

குரங்கு உயிரினத்தில் இருந்து மனிதன் வந்து இருந்தால், எங்கே குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம், இது இருந்ததற்கான தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளனவா?

-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு