Home » Articles » விழுவது எழுவதற்கே!

 
விழுவது எழுவதற்கே!


செயந்தி இரா
Author:

இது நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. கனடா செல்லும் வழியில் சிங்கப்பூரில் ஒரு சிறிய இடைவேளை. என் நலனில் அக்கறை கொண்டவரின் ஆசியை நினைத்துப் பார்த்தேன். என்னுடன் பயணிக்க வேண்டிய பெண்மணி ஒருவர் தன் குழந்தையைத் தரையில் விளையாட மாட்டார். அது தவழும் நிலையில் இருந்த சிசு. தனது கையையும் காலையும் உதறிக்கொண்டு தவழ முயன்றது. பல முறை முயற்சித்து கடைசியில் ஒருவாரு ஒரு எட்டுத் தவழ்ந்தது. அந்தக் குழந்தையை நோக்கியபடி எனது சிந்தனையைப் பறக்க விட்டேன்.

ஆம், ஒரு குழந்தை தவழும் பருவத்தில் எவ்வளவு தோல்விகளைச் சந்திக்கிறதோ அத்தனையையும் மீறி, தளராமல் முயன்று வளர்ச்சியை எதிர்கொள்கிறது. அது சமயம், அழுகின்றது, தன் இயலாமை தந்த ஏமாற்றத்தை தன் முகத்தில் காட்டுகிறது. பின்னர் மீண்டும் முயன்று வெற்றி கண்டு, பெருமிதத்துடன் சிரிக்கிறது. நடக்க முயன்று, பின்னர் ஓடும் நிலைக்கு வந்தபோது அது எதிர்கொள்ளும் இடர்கள், சிறுகாயங்களினால் ஏற்படும் வேதனை ஆகியவற்றை இங்கே விவரிக்க முடியுமா? இருந்தாலும், தன் முயற்சியைத் தளர விடுவதில்லையே!

ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில எழுத்தாளரின் கூற்று எனக்கு நினைவில் வந்தது. “உண்மையான வீரம் என்பது வெற்றி பெறுவதில் மட்டுமே அல்ல! ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடம் கற்று, வீறுகொண்டு, மீண்டும் எழுவதில் தான் உள்ளது” இந்த வார்த்தைகள் நான் இத்தனை நேரம் ரசித்த குழந்தையின் பிள்ளை விளையாட்டுக்குச் சாலப் பொருந்தியதை எண்ணி வியந்தேன்.

“இதோ, கனடா செல்லும் விமானம் புறப்படத் தயாராக உள்ளது, பயணிகள் தங்கள் உடமைகளுடன் ஆயத்தமாகவும்” என்ற அறிவிப்பு என் சிந்தனையைக் கலைத்தது. எங்களுடைய விமானம் இறக்கைகளை விரித்து, எங்களை ஏற்றிச் செல்வதை எதிர்பார்த்து நின்றிருந்தது.

மீண்டும் என் ஆசானின் ஊக்க மொழிகள் எனக்கு நினைவிற்கு வந்தன. “இளைஞர்களான நீங்கள் உங்கள் ஆற்றல் சிறகுகளை விரியுங்கள். விரித்து எண்ணங்களை ஓடவிட்டுச் செயலாற்றுங்கள். வானமே எல்லை! விழுவது என்றும் எழுவதற்கே!

எத்தனை சத்தியமான, உற்சாக வார்த்தைகள்! இன்றளவும் என்னை ஊக்குவித்து வந்துள்ள அற்புதமான வாக்கு! ஏன் – இன்னும் வருங்காலத்தில் கூடத்தான்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு