Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

ஆசிரியர் ஒருவர் தம் மாணவர்களிடம் ”இரு கோடுகள் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் உயரலாம்” என்றார்.

உடனே மாணவர்களில் ஒருவன், ”இரு கோடுகள் தத்துவமா? அதை விளக்குங்கள் என்றான்.

கோடு ஒன்றைப் போட்ட அவர், ”இதன் அருகே சிறிய கோடு போட்டால் இந்தக் கோடு பெரிதாகி விடும். பெரிய கோடு போட்டால் முன்னமே உள்ள கோடு சிறியதாகி விடும் இதுதான் அதன் விளக்கம் என்றார்.

இதைப் புரிந்து கொள்வதால் வாழ்க்கையில் எப்படி உயர முடியும்? என்றான் மாணவர்களில் ஒருவன்.

”நம்மை விடச் சிறியவர்களுடன் நாம் இருக்கும்போது இவ்வளவு உயர்ந்த நிலை அடைந்து உள்ளோமே என்று பெருமை கொள்ள வேண்டும்.

நம்மை விட உயர்ந்தவர்களுடன் இருக்கும்போது இவர்களைப் போல உயர்ந்த நிலையை எப்பொழுது அடையப் போகிறோம் என்று எண்ண வேண்டும்.

ஆம்! உயர்ந்ததற்காகப் பெருமையும் இன்னும் உயர்வதற்கான முயற்சியும் சேரும் போது நீங்கள் உயர்ந்து கொண்டே செல்வீர்கள் என்றார் ஆசிரியர்.

உயர்ந்ததற்கான பெருமை!
உயர்வதற்கான முயற்சி!
எப்போதும் இருக்கட்டும்!

”இனி வரும் காலம் இளைஞர்கள் காலம்” என்று

நாடே பேசுகிறது! சாதித்துக் காட்டுவோம்!

அன்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு