Home » Articles » யானையின் மனோபாவம்

 
யானையின் மனோபாவம்


வெள்ளியங்கிரி. K
Author:

நம்மைச் சுற்றியுள்ள பலர் (ஏன், நம்மையம் சேர்த்துதான்) திறமைசாலிகளாக இருந்தும் சாதனையாளர்களாக இல்லாமல் இருப்பது ஏன்? அதற்கு காரணம், நம்முடைய “யானை மனோபாவம்” என்கிறார்கள் நிபுணர்கள்.

எதையாவது செய்ய ஆசை இருந்தாலும், “நம்மால் முடியாது…. நமக்கெல்லாம் ஒத்து வராது.. அதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை.. டைம் கிடைச்சா பார்க்கலாம்….” என்பது போன்றகாரணங்களைச் சொல்லி, பல காரியங்களை செய்யாமலேயே விட்டு விடுகிறோம். இதற்கு அடிப்படைக் காரணம், நம்முடைய “யானை மனோபாவத்தை” விட்டு விட்டாலே நம்மால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்…ஆம்!

குட்டியாக இருக்கும் யானையைப் பிடித்து வந்து அதைப் பெரிய சங்கிலியால் கட்டிப்போட்டுப் பழக்குவார்கள். குட்டி யானை தன் பலன் கொண்ட மட்டும் சங்கிலியை இழுத்து, தப்பிச் செல்ல முயற்சிக்கும். ஆனால் சங்கிலி பலமாக இருப்பதால் அதன் முயற்சி பலிக்காது.

குட்டி யானை வளர்ந்து பெரிய யானை ஆனதும், அந்த யானையை சாதாரண கயிற்றால் தான் கட்டி இருப்பார்கள். அப்போது யானை நினைத்தால், லேசாக இழுத்தாலே கயிறு அறுந்து விடும்.

ஆனால், அந்த முயற்சியில் யானை இறங்காது.

அதற்கு காரணம், அந்த யானையின் மனோபாவம் தான். இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த காலத்தில் அது அடைந்த தோல்வி அதன் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.

“அந்தக் காலத்தில் செய்யாத முயற்சியா? எவ்வளவோ முயற்சி செஞ்சும் அப்பவே, முடியலையே, இப்பவா முடியும் என்று அந்த யாமை நினைப்பதால் கயிற்றால் கட்டியிருக்கும்போது கூட இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதாக நினைத்து அதற்குக் கட்டுப்பட்டு இருக்கும். இந்த தவறான மனோபாவம் தான் ராங்மைன்ட்செட், (Wrong mind set) இன்று பலரிடம் இருக்கிறது. இது கலைந்தாலே போதும்.. வெற்றிக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிவிடலாம்.


Share
 

1 Comment

  1. P.YOGATHA says:

    the elephants when fight among themselvas. if we stand a child in between them , they simply remove the child without any harm &continue their fight,
    elephants power is like this.
    valthukkal

Leave a Reply to P.YOGATHA


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்