Home » Articles » ரியல் ரிஸ்க்

 
ரியல் ரிஸ்க்


admin
Author:

நீங்கள் ரிஸ்க் எடுக்காததற்கு காரணங்களாகப் பலவற்றைக் கூறுவீர்கள். கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் ரிஸ்க் எடுத்த விஷயங்களை சிறிது நினைவு கூறுங்கள். இதனால் நீங்கள் பயந்தது போல இழந்தது என்னென்ன? பட்டியலிடுங்கள்.

சரி, நீங்கள் எடுத்த ரிஸ்க்கினால் பெற்ற பலன்கள் என்னென்ன தெரியுமா?

உங்களால் இப்போது இருப்பதைவிட இன்னும் ரிஸ்க் எடுத்தால் முன்னேற இயலும் என்ற தன்னம்பிக்கை வளர்ந்திருக்கும்.

என்ன காரணத்திற்காக (புதிய பிஸினஸ்க்காக, வீடுகட்ட, பொருளாதார வளர்ச்சிக்காக, ஒரு போட்டியில் வெற்றிபெற அதை அடைந்திருப்பீர்கள்.

-இவ்வளவு நாள் இப்படி ஒரு “வாய்ப்பை” பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என சிந்தப்பீர்கள்.

-இனி கிடைக்கும் வாய்ப்பைவிடப் போவதில்லை என்றதொரு நல்ல, புதிய முடிவை எடுத்திருப்பீர்கள்.

..மேற்படி விசயங்கள் நீங்கள் எடுத்த ரிஸ்க்கில் வெற்றி பெற்றிருந்தால்…

ஆனால் எடுத்த ரிஸ்க்கில் தோல்வியடைந்திருந்தால்…?

அப்போதும் சிலவற்றையாவது நீங்கள் அடைந்திருப்பீர்கள். “முட்டாள் எலி பூனையின் காதுக்குள் இடம் தேடும் என்பார்கள். ஆனால், புத்திசாலி பூனைதான் எலி எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலும். எனவே ரிஸ்க்கில் வெற்றி பெறவில்லையானாலும்

  • எதைச் செய்யக்கூடாது என உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
  • அதை தெரிந்து கொள்வதற்காக நீங்கள் கொடுத்த விலை பணமாகவோ, உழைப்பாகவோ, உங்கள் மதிப்பிற்குரிய நேரமாகவோ இருக்கலாம். அதை நஷ்டம் என எடுத்துக் கொள்ளக்கூடாது.
  • நஷ்டங்கள் என்பது விடைத்தாளில் உள்ள தவறுகள் போல எளிதாக கணித்துவிட இயலும். ஆனால் அத்தவறுகளை கண்டுபிடிக்க தேர்வு என்ற “ரிஸ்க்” எடுத்தாக வேண்டும்.

  • எந்தத் தோல்வியும் தனக்குரிய பாடங்களைத் தந்துவிட்டே செல்கின்றன.
  • நீங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைத்திருக்காது. ஆனால் வெற்றியடைய வேண்டிய வழியை காட்டிக் கொடுத்திருக்கும்.

இதெல்லாம் தெரிகிறது. ஆனால் ரிஸ்க் எடுக்க பயமாக உள்ளது. அல்லது ரிஸ்க் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை எனக் கூறுவோருக்கு —

எந்த ஓர் செயலுக்கும் முதல் காரணம் எண்ணம். அதை முதலில் தயார்படுத்த வேண்டும். பயம் தோன்றும் விஷயங்களை ஆழ்ந்து கவனித்தால் அவ்விஷயங்கள் குறித்த அறியாமைதான் காரணமாக இருக்கும். அறியாமையைப் போக்கிக் கொள்வதற்காக குறிப்பிட்ட விஷயம் குறித்த தகவல்களைத் திரட்டிக் கொள்வதன் மூலம் அறியாமை விலகி அதனால் ஏற்படும் பயத்தையும் நீக்கிட இயலும். அடுத்து எந்த அளவு ரிஸ்க் எடுக்கலாம் என்ற கேள்வி இருக்கும். இதை இரண்டுவிதமாக்க் கூறலாம்.

அ. ரிஸ்க் எடுத்த அளவிற்கு பெயரும், புகழும் அடைய இயலும் (முயல் எய்த அம்பைவிட, யானை பிழைத்த வேல் ஏந்துதல் மதிப்பிற்குரியது என்கிறது வள்ளுவம்).

ஆ. அந்த விளையாட்டுக்கெல்லாம் நான் தயாரில்லை என்பவர்கள். ரிஸ்க் எடுக்க வேண்டிய துறையில் தற்போதுள்ள நிபுணர்களிடம் (Specialists) ஆலோசனையைப் பெறலாம்.. அவர்கள் அந்த ரிஸ்க்கில் உள்ள வெற்றி வாய்ப்பையும் கூறிவிடுவார்கள்.

இவை உங்களுக்கு ரிஸ்க் எடுக்க உள்ள தயக்கத்தைப் போக்கி, ரிஸ்க் எடுக ஊக்கமளிக்கும்.

உதாரணத்திற்கு (அக்டோபர் மத்தியில்) பங்குச் சந்தை ஹோ..ஓ.. என காளை ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், முதலில் ஷேர் மார்க்கெட்டினால் பணத்தை இழந்தவர்களின் புலம்பல்கள்தாம் அதிகம் உங்களுக்கு கேட்கும். அதைத் தாண்டி மார்க்கெட் (விற்பது & வாங்குவது ), மியூச்சுவல் பண்டு, கமாரிடிடிஸ், பான் கார்டு, டிமட் அக்கௌண்ட், செபி போன்ற பரிட்சயமற்ற வார்த்தைகள் இனம் புரியாத கலக்கத்தை ஏற்படுத்தும்.

  • முதலில் பங்குசந்தை மார்க்கெட்டிங்கில் நுழைவதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
  • பயத்தை நீக்க இதற்காக உள்ள ஷேர் புரோக்கர்களை சென்று பாருங்கள். தினசரி செயல்பாடுகளை சில நாட்களாவது கவனியுங்கள். புரோக்கர்களிடம் இதில் உள்ள சிக்கலகள் அல்லது உங்கள் முதலீடுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய விசயங்களை கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். (பெரும்பாலும் அனைத்து புரோக்கர்களும் இதைக் கூறுவார்கள்) தற்போதைய நிலையில் இதுதிறந்த நிலையிலேயே மார்க்கெட்டிங் நடைபெறுகிறது. தகவல்களும், மார்க்கெட்டிங் நடைபெறும் முறையும உங்களுக்கு நம்பிக்கையூட்டும் பட்சத்தில் இதில் ஈடுபடலாம். எந்த நிலையிலும் இது ஓர் முதலீடு அல்லது சேமிப்பு என்ற நிலைதான் என்பதை புரோக்கர் கூறுவார். கடன் வாங்கி முதலீடு செய்ய இது ஏற்றதல்ல என்பதையும் கூறிவிடுவார். பிறகு எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை உங்கள் வருமானம் செலவு ஆகியவற்றை பொருத்து ரிஸக்கின் அளவினை முடிவு செய்ய இயலும்.

ரிஸ்க் எடுங்கள் வெற்றி வெள்ளியை அள்ளுங்கள். உண்மையான ரிஸ்க் எதிலும் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் என்பதை உணருங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்