Home » Articles » மனதின் மொழி

 
மனதின் மொழி


யோகதா ப
Author:

சென்ற இதழ் தொடர்ச்சி..

இனிய வாசகர்களுக்கு! தீபாவளி வாழ்த்துக்கள். முடிவுகளை சரியாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் ஆர்வமும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் சரியான முடிவுகளை எடுக்கப் பழகிவிட்டால் நம் வாழ்க்கையை நாம் விரும்பி மகிழ்ச்சியாக வாழுவோம். இதைத் தானே நாம் அனைவரும் விரும்புகிறோம்.

சரி நாம் கட்டுரைக்கு வருவோம். கடந்த மாத கட்டுரையின் தொடர்ச்சியாக அடுத்து வருவது.

ஆலோசனை பெறுவது (Take Counsell)

இது மிகவும் சிறந்த வழி; ஆம். இது நம்மை ஒரு சிறந்த முடிவை எடுக்கும்போது உணர்ச்சி வலையில் சிக்காமலிருக்க மிகவும உதவுகிறது. ஆலோசனைகளை நண்பர்களிடம், உடன் பணிபுரிபவரிடம், பெற்றோர்களிடம் அல்லது ஆலோசகர்களிடம் பெறலாம். எந்த ஒரு செயலிலுமே நாம் நம்மீது அக்கறை கொண்டுள்ள, நாம் மதிக்கத்தக்க நபர்களிடம் ஆலோசனைகளை கேட்டு செய்வது நம் மனதிற்கு ஆறுதலாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அமையும். இதற்கு உதாரணமாக கூறுகையில்

‘ஒரு தலையைக் காட்டிலும் இரண்டு தலை சிறந்ததே’.(Two heads are better than one head)

அனைத்தையும் அனைத்து கோணங்களிலும் ஒருவரால் மட்டுமே சிந்திக முடியாது.
(One can’t think of everything in all directions)

ஆம், இது சரியான வாக்கியம் தான். ஒரு பிரச்னையை ஒருவர் சிந்திப்பதைப் போல் மற்றொருவர் சிந்திப்பதில்லை. மாற்றம் இருக்கும். வேறுபடும். நமக்குlத் தெரியாத ஒன்று நிச்சயம் மற்றொருவருக்கு தெரிந்திருக்கும். அனைத்தையும் அனைவராலும் அறிந்து வைத்துக் கொள்வது கடினம். இதைத்தான்

கற்றது கைமண் அளவு
கல்லாதது உலக அளவு

என்று கூறியுள்ளனர்.

எனவே எனக்கு அனைத்து தெரியும் என்று எப்பொழுதுமே நாம் பேசவோ, செய்யவோ கூடாது.

மற்றவர்களை இரண்டாவதாக ஊகம் செய்யாதே (Don’t Second guess others)

எப்பொழுதும் நாம் ஒரு முடிவு செய்த பின் மற்றவர்கள் அதைச் சரி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. மற்றவர்களின் சில செயல்களை வைத்து அவர்களும் நம்மைப்போலவே எண்ணுவர் என்று நினைப்பது முட்டாள்தனம். ஏனெனில் நம் ஒவ்வொருவருக்கும் உடன் பிறந்த சில குணாதிசயங்கள் நிச்சயம் இருக்கும். அதுவே பல சமயங்களில் வெளிவரும். அது மற்றவர்கள் ஏற்றுக்கொண்டது என நினைப்பது தவறு. எனவே எப்பொழுதுமே மற்றவர்கள் இப்படித்தான் நடந்துகொளவர் என்ற தீர்மானத்தறகு நாம் வரவே கூடாது. அவர்களாகக் கூறும் வரை பொறுமையாக இருப்பது அவசியம். ஒருவரை நம்பி ஒருவர் அனைத்துக் காரியங்களிலுமே இருப்பவராயின் அது மிகப் பெரிய பலவீனமாகிவிடும். இதைத் தான் நாம் பல இடங்களில் கூறக் கேட்டுள்ளோம்.

“முதலில் எப்படி இருந்தவங்க இப்ப இப்படி மாறீட்டாங்க” என்று.

இல்லையா!.. ஆம் நிச்சயம் நாம் உறுதியற்று செயல்பட்டால் யார் வேண்டுமாயினும் நம்மை மாற்றி விடுவர். நாம் இறுதியில் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ தான். ‘இல்லை’ என்பதை நியாயமாக சொல்ல வேண்டும்.

Just say ‘No’:

‘ஆம்’, ‘இல்லை’ இந்த இரண்டு சிறிய வார்த்தைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளுக்குப் பின் வரும் வாக்கியத்தன் பொருளைவிட, கருத்தைவிட, அந்த இரண்டு வார்த்தை தனித்துவம் பெற்றது.

இதைத்தான் “டேலிரேன்ட்” எனும் அரசியல் நிபுணர் கூறுகிறார், ‘பொதுவாகவே நம் அனைவரும் ஆம் என்று தான் மற்றவர்கள் எதை கூறினாலும் சொல்லப் பழகி உள்ளோம், காரணம் அவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்று. ஆனால் இல்லை என்பது எப்பொழுதுமே மிகச் சிறந்த பதில். காரணம் அதுவே அடுத்த கேள்விகளை சிந்திக்க வைக்கும்; பல பாடங்களைக் கற்பிக்க வைக்கும். நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ‘எதுவுமே உள்ளே நுழையும் போது சுலபமாகத்தான் இருக்கும்; ஆனால் அதிலிருது வெளிவருவது என்பது மிகக் கடினம்?

‘இல்லை என்ற சொல் நம்மை நிச்சயம் நம் முடிவுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்; ஏனெனில் ‘இல்லை’ என்பது ‘ஆம்’ என உடனே மாறிவிடும்; ஆனால் ஆம் என்பது எளிதில் இல்லை என மாறாது; மாறினாலும் பல மனக் கசப்புகளை ஏற்படுத்தும்’.

நமக்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும்

‘Be true to your own self”. நம்மால் தீர்மானிக்கப்படுகின்ற பல முடிவுகள் மற்றவர்களின் நெருக்கத்தினால் ஏற்படுகிறது. முடிவுகளை எடுப்பதில் மிக முக்கியமான அமசம் என்னவென்றால் ‘நாம் எதை முடிவு செய்கிறோமோ, அதை நாம் தான் செய்யப்போகிறோம். மற்றவர்கள் செய்வதற்கல்ல’. எப்பொழுதுமே நாம் முதலில் நம்மை முழுமையாக நம்ப வேண்டும் இல்லையெனில் நம்மை மற்றவர்கள் நம்புவது சந்தேகம் தான்.

இதற்குத் தேவை நம்மைப் பற்றிய அறிவு ‘know thyself” என்பர். நம் பலம், பலவீனம், நம்மை தூண்டும் சக்தி, நமக்குள் மறைந்திருக்கும் திறமைகள், சிறந்த எண்ணங்கள் எவை என்பதையெல்லாம் அறிந்துகொண்டால் நம் மீது நமக்கே ஒரு மதிப்பு ஏற்படும்.

எப்பொழுதுமே மற்றவர்களைப்
பின்பற்றுவது தவறு
(Don’t follow others Always)

நாம் அனுபவசாலிகளிடமிருந்து அடிக்கடி கேட்டிருப்போம். ‘மற்றவர்களைப் போலவே ஏன் நாம் செய்ய வேண்டும், ஆட்டு மந்தைகள் தான் அப்படிச் செய்யும்.

பகுத்தறிவு படைத்த நாம் மற்றவர்களை விடச் சற்று வித்தியாசப்பட்டு செயல்படுத்துவோமே’ என்று, பலமுறை நாம் நம் பெற்றோர்களிடம் கூடத் திட்டும் வாங்கி இருப்போம். என்னவென்றால் ‘அவன் கிணற்றில் விழுந்தால் நீயும் கண்ணை மூடிக்கொண்டு விழுந்து உயிரை விட்டுவிடுவாயா? என்று’. எனவே மற்றவர்களைப் பின்பற்றுவது முற்றிலும் தவறு அல்ல. நல்ல எண்ணங்களை நாமும் எண்ணலாம்; தவறே அல்ல.

நாம் நம்மீது கண்மூடித் தனமாக உறுதியோடு இருப்பது தவறு
(Don’t be Too sure yourself)

உலகத்தில சில மட்டமான முடிவுகள் ஏற்படுவதற்கும் காரணம் நாம் தான். நம் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான உறுதி எனலாம். நம்மீது நமக்கு கட்டாயம் உறுதி தேவை; ஆயினும் அதற்கென்று அளவு முறை உள்ளது. அதை மீறினால் பாதிப்பும் அவமானமும் நமக்குத் தான். பலர் கூறக் கேட்டிருப்போம்.

“நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் ஒன்று நினைக்கிறது”.

தெய்வம் ஒன்றும் நினைக்காது; தெய்வமாகிய நாம் தான் நினைக்கிறோம். அதைச் செய்தும் முடிக்கிறோம். சில சமயம் தோல்வி, ஆயினும் விடா முயற்சியால் மீண்டும் வெற்றி நமக்கே என போராடி வாழ்க்கைய உத்வேகத்தோடு வாழுவோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்