Home » Articles » தேர்வுகளுக்கு தயாராதல் – I

 
தேர்வுகளுக்கு தயாராதல் – I


இரத்தினசாமி ஆ
Author:

தேர்வுகள் இனி தேர்ச்சிகளே தொடர்

எனதன்பிற்குரிய இளைய சமுதாயமே!

கடந்த 10 தொடர்களில் கற்றல் தொடர்பான கீழ்கண்ட முக்கிய செய்திகளைப் பற்றி அறிந்து, தெரிந்து பயின்று கொண்டீர்கள்.

“கேள்விகள் ஆயிரம், படிப்பது சுகமே, உன்னை நம்பு, திட்டம் – கனவு – செயல்- வெற்றி, மனதை தன்வயப்படுத்துங்கள், எங்கே,எப்போது, எப்படி படிப்பது, கற்றல் படிப்பு, பாட வகுப்பும், பயிலும் மாணவர்களும், கற்றல் கருவிகள், மறதி ஏன்?”

உங்கள் முன்னர் நிலையிலிருந்து சிறிது சிறிதாக பல முயற்சிகள் மூலம், பயிற்சிகள் மூலம் உங்களை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

தேர்வுகள் என்ற வார்த்தையைக் கண்டாலோ, கேட்டாலோ பயம் – வெறுப்புகொண்ட உங்கள் மனது தற்போது தேர்வுகளோடு நட்பு கொண்டுவிட்டது. தேர்வுகளை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டுள்ளது.

முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.

தேர்வுகளுக்கு ஒரு மாதம் முன்னால்:

ஒவ்வொரு நாளும், மணியும், நிமிடமும் இனி மிக, மிக பயன்தரக்கூடியது. மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கப் போகிறோம். இதோ நாம் ஆவலோடு எதிர்பார்த்த தேர்வு நண்பனை ஒரு மாதத்தில் சந்திக்க உள்ளோம். பல நூறு கேள்விகளோடு வர உள்ள அவனை அவைகளுக்கான பதில்களைக் கொண்டு அசத்தப் போகிறோம்.

உங்கள் உணவு, உடை, உறக்கத்தில் சற்று கவனத்தைத் திருப்புங்கள்.

இலகுவாக ஜீரணமாகும் உணவே சிறந்தது. வயிறு தொடர்பான எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அசைவ உணவை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்போம். திரவ உணவுகள், சூப்புகள் அதிகம் எடுத்துக் கொள்வோம்.

உடலை இருக்கப் பிடிக்கும் உடைகளைத் தவிர்ப்போம். அவை மனதை திசை திருப்பும். கருப்பு, சிவப்பு, கருநீலம், பிரவுன் போன்ற டார்க் வண்ண உடைகள் இப்போது வேண்டாம். நம்மை அறியாமலேயே நமக்கு உதவி வரும் பிரபஞ்ச உயர் சக்தி அலைகள், நல்லெண்ண அலைகள், உயிர் சகதி அலைகளை டார்க் கலர்ஸ் நமது உடலுக்கு அதிக அளவு செல்ல விடாமல் தடுக்கும் வாய்ப்புகள் அதிகம். வெளிர் மஞ்சள், நீலம் இளம்பச்சை, வெண்மை நன்மை தருபவை.

தினசரி ஆறுமணி நேர உறக்கம் அவசியமானது. அதுவே உடலையும், மனதயும் சீராக்கி, புத்துணர்ச்சியையும், புதிய தெம்பையும் அளிக்கவல்லது. தேர்வு நாளில் கூட ஆறுமணி நேர உறக்கம் தேவை.

பாடத்திட்டத்திற்குத் தேவையான செய்திகள்:

உங்கள் பாடத்திட்டம் (syllabus) முழுமைக்குமான படிப்பு குறிப்புகள் (Notes) நினைவு வரைபடங்கள் (memory maps) புத்தகங்கள் இதே உங்கள் படிக்கும் அறையில் சீராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த அந்த பாடங்களில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்களும், அவைகளுக்கான விடைகளும் மீண்டும், மீண்டும் படிப்பதற்காக சேகரித்து கோர்வையாக வைத்துள்ளீர்கள்.

அனைத்துப் பாடங்களும் உங்களுக்கு பிடித்தமானவைதான். ஆனாலும் அதிக நேரம் தேவைப்படும் பாடங்கள், மிக எளிதாக குறைந்த நேரத்தில் முடித்துவிடும் பாடங்கள் என்பவை பற்றி மிகத்தெளிவாக தெரிந்திருப்பீர்கள்.

படிப்பதற்கான கால அட்டவணை:

எந்தெந்த நேரத்தில் எதைச் செய்வது படிப்பது என்பது பற்றிய கால அட்டவணை அவசியம் தேவை. சரியான நேர நிர்வாகமே நம்மை மேலோங்க வைக்கும்.

பள்ளி/கல்லூரிகளில் வகுப்பத்தேர்வுகள், திருப்புத் தேர்வுகள் மூலம் பல முறை படித்து எழுதிப் பார்த்து பெற்ற மதிப்பெண்கள், செய்த தவறுகள், அவைகளைப் போக்க எடுத்த முயற்சிகள் பற்றி உங்களுக்குள் ஒரு கலந்தாய்வு அவசியம்.

தினசரி குறைந்தது மூன்று வகையான பாடங்களை படிப்பதற்கான நேரங்களை அக்கால அட்டவணையில் குறிப்பிடுங்கள். ஒரே பாடத்தை படித்து முடித்து விட்டுத்தான் அடுத்த பாடம் என்று பிடிவாதம் பிடிக்காதீர். மனதும் மூளையும் மாறுதல் விரும்பிகள். அதற்கேற்ப பாடங்கள் அமைந்தால் விரைந்து படிக்க முடியும். நன்கு பதிய வைக்க முடியும். இதோ மாதிரி கால அட்டவணை (விடுமுறை நாட்களில்).

மாதிரி கால அட்டவணை:

(அதிகாலை எழுந்து படிப்போருக்கு)

4.00 காலை துயில் எழல்

4.15வரை காலைக்கடன்கள்

4.30வரை சூரிய நமஸ்காரம்,

சர்வாங்காசனம், 2- மூச்சுப்பயிற்சி,
தியானம்

4.30-5.30 இயற்பியல் படிப்பு

5.30-5.40 மூச்சுப் பயிற்சி, கண்களுக்கு உள்ளங்கை சிகிச்சை, வீட்டுக்கு வெளியே வந்து காற்று வாங்கல்

5.40-6.40 வேதியியல் படிப்பு

6.40-7.30 குளித்தல், காலை உணவு

7.30-8.30 இயற்பியல் எழுதிப் பார்த்தல்

8.30-9.30 வேதியல் எழுதிப் பார்த்தல்

9.30-10.30 கணக்கு போட்டுப் பார்த்தல்

10.30-10,40 2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்

10.40-11.40 ஆங்கிலம் படித்தல்

11.40-11.50 2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்

11.50-12.50 ஆங்கிலம் எழுதிப் பார்த்தல்

12.50-3.00 மதிய உணவு, சிறு உறக்கம்

3.00-4.00 தமிழ் படித்தல்

4.00-4.10 2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்

4.10-5.10 சிற்றுண்டி,தமிழ் எழுதிப்பார்த்தல்

5..10-5.20 2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்

5.20-6.20 இயற்பியல் படிப்பு

6.20-6.30 2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்

6.30-7.00 திறந்த வெளியில் நடை, சூரிய நமஸ்காரம், சர்வாங்காசனம், 2 மூச்சுப் பயிற்சி,
தியானம்

7.30-8.30 இயற்பில் எழுதிப் பார்த்தல்

8.30-8.40 2 மூச்சுப்பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்

8.40-9.40 வேதியியல் படித்தல் எழுதுதல்

9.40-10.00 வெற்றிக் கனவுகள்/ஆழ்மனப் பதிவுகள்/ ஆழ்மனக் கட்டளைகள்

இரவு 10.00- உறக்கம்

அதிகாலை 4.00

மேற்கண்ட கால அட்டவணையில் 5 வகைப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. குறைந்தது மூன்று பாடங்களாவது இடம் பெறுவது நலம். ஒவ்வொரு மணிநேர படிப்பு/எழுத்து வேலைகளுக்கு இடையே 10 நிமிட பயிற்சிகள் அவசியம். அடுத்த ஒருமணி நேரத்திற்காக நமது உடலையும், மனதையும் புதுப்பிக்கக் கூடியவை அவை.

சில பள்ளி /கல்லூரிகளில் படிப்பு விடுமுறை இல்லாமல் பள்ளி / கல்லூரியில் படித்தல் எழுதுதல் நடக்கும். அதற்கேற்ப கால அட்டவணை தயார் செய்து கொள்ளவும்.

(அடுத்த இதழில் சந்திப்போம்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்