Home » Articles » விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)

 
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)


செந்தில் நடேசன்
Author:

புதிய தொடர்…

சார்லஸ் டார்வின் 1859 ஆம் ஆண்டு வெளியிட்ட “உயிரினங்கள் தோற்றம் இயற்கையின் தேர்ந்தெடுப்பால்” என்ற புத்தகம் புரட்சிகரமான புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தது. இதுவரை மனிதன் படைப்பை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றதுபோல் சொல்லி வந்தனர்.

உலகத்தில் உள்ள ஆறு அறிவு உடைய மனிதன் உயர்ந்த உயிரினம் என்றும், இந்த உயிரினத்தின் மூதாதையர் குரங்கு என்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை டார்வின் உலகத்தை கப்பலில் சுற்றித் தெரிந்துகொண்டார்.

சார்லஸ் டார்வின் 1809ல் லண்டன் நகரல் ஒரு சிறந்த மருத்துவருக்கு மகனாக பிறந்தார். எல்லாத் தந்தையைப் போல டார்வின் தந்தையும் மகனை மருத்துவராக்க வேண்டும் என்று கனவு கண்டு அவரை உலகப் பிரசித்திப் பெற்ற எடின்பெர்க் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தார். மருத்துவமனையில் மருத்துவப்படிப்பின் மீது மிக வெறுப்பு அடைந்தார். அதனால் டார்வினுக்கு மருத்துவ படிப்பில் கவனம் செல்லவில்லை.

அதனால் டார்வின் தந்தை அவரை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு மதங்களும் மனிதனும் (Theology) என்ற பட்டப்படிப்பிற்கு அனுப்பினார். அங்கு கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவன் போன்ற கருத்துக்களுக்காக டார்வின் சந்தேகம் எழுப்பினார். இதனால் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றார்.

டார்வின் ஆர்வம் இயற்கை தோற்றம் பற்றி படிக்கவேண்டும், இதன் மூலம் தறபோது மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளை, எப்படி உயிரினம் இந்த பூமியில் தோன்றியது, மனிதன் எவ்வாறு தோன்றினான் போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே இருந்துது.

இதற்காக டார்வின் தன் சகோரதரர் வில்லியம் டார்வின் பாக்ஸிடம் இருந்து உயிரினம் தோற்றம் பற்றி சில கருத்துக்களை கேட்டறிந்தார்.

டார்வின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை அவர் தாவரவியல் பேராசிரியர் ஜான் ஹேன்ஸ்லோவை (Henslow) சந்தித்தது ஆகும். அதன் பிறகு டார்வின் தன் முழுக் கவனத்தையும் அறிவியலில் திருப்பினார். பேராசிரியர் தூண்டுதலில் கடல் பயணம் செய்யத் தீர்மானித்தார்.

ஹெச்.எம்.எஸ் பிகாலே என்ற கப்பலில் இயற்கையை ஆராய்ச்சி செய்யவும் கடல் பயணியாக எந்த ஊதியமும் இல்லாமல் தனது கடல் பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பயணம்தான் டார்வினை உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வர உதவியாக இருந்தது.

டார்வின் தென் அமெரிக்கா மற்றும் கேல்பாகோஸ் தீவுகளில் அவர் பார்த்த விலங்கினங்கள், பறவைகள், பூச்சிகளில் உள்ள வேறுபாடுகள், அவற்றை மற்ற கண்டங்களில் உள்ள உயிரினங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த விதம் அவரை உயிரினங்கள் உருவாக்கம் பற்றிய சிறந்த கோட்பாட்டை உருவாக்க காரணமாக இருந்தது.

டார்வின் 5 ஆண்டுகள் கப்பலில் பல நாடுகள் மற்றும் மனிதன் செல்லாத தீவுகள் அங்குள்ள உயிரினங்களை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு தனது பேராசிரியர் ஹேன்ஸ்லோவுக்கு எழுதிய கடிதங்கள், இயற்கையில் உள்ள வேறுபாடுகள், பல்வேறு உயிரினங்களுக்கு உள்ள தொடர்புகள், வேறுபாடுகள் பற்றிய ஆய்வுகள் எல்லாம் கட்டுரைகளாக பிரசுரிக்கப்பட்டன.

அவருடைய கருத்துக்கள் பல விஞ்ஞானிகளை வியப்படையச் செய்த்து மட்டும் அல்லாமல், பெரும் சர்ச்சை மற்றும் ஆராய்ச்சிகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டார்வின் கப்பல் பயணத்தை முடித்து, இங்கிலாந்து திரும்பியபோது மிகவும் கவனிக்கத்தக்க விஞ்ஞானியாக உயர்ந்திருந்தார்.

நாடு திரும்பிய அவர் விஞ்ஞானிகளின் பழைய கருத்துக்களைத் திரும்ப ஆய்வு செய்து, தனது புது விளக்கத்தை தர முற்பட்டார்.

அவருடைய புதிய விளக்கம் மனிதன் விலங்குகளில் இருந்து வேறுபட்டவர் இல்லை. குரங்கில் இருந்தான் மனிதன் தோன்றினான் என்பதை ஆதாரப்பூர்வமாக உலகிற்கு வெளியிட்டார்.

இது உலகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியத.

இது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டு இன்றும் பல பரிசோதனைகளில் செயல் விளக்கம் காட்டப்பட்டுள்ளது.

மனிதன் குரங்கில் இருந்து வந்தான் – விஞ்ஞானப்பூர்வ ஆதாரங்களை அடுத்த இதழில் காண்போம்.

– தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்