Home » Articles » கடமைகளை மறக்கலாமா

 
கடமைகளை மறக்கலாமா


தங்கவேலு மாரிமுத்து
Author:

சென்ற இதழ் தொடர்ச்சி..

உன் கடமைகளை சரியான விதத்தில, சரியான நேரத்தில், செய்து முடித்துவிட்டால் வெற்றி உனக்கு நிச்சயம்; தோற்று விடுவோமா என்ற அச்சம் தேவையற்றது; பலனைப் பற்றி எந்தச் சந்தேகமும் பயமும் அடைய வேண்டாம்; அடுத்த கடமையில் கவனம் செலுத்து. என்றல்லவா இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.

வள்ளலாரும் இதைத்தான் சொன்னார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று.

எனக்கென்று இட்ட பணிகளை, என் மீது வந்து விழுந்த பணிகளை, நான் விரும்பி ஏற்றுக் கொண்ட பணிகளை, பழுதின்றி பக்குவமாய் செய்து முடிப்பதே என் கடன்; என் கடமை; அப்படிச் செய்து முடித்துவிட்டால், நன்மைகளும் வெற்றிகளும் மட்டுமே விளையும். அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆகவே, எனது கடமைகளில் கவனமாய் இருந்தாலே போதும் என்று தானே இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

பலனை எதிர்நோக்காமல் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதே கர்மயோகம் என்று சொல்லப்படுகிறது.

கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று அன்புக் கட்டளை இட்டாரே அண்ணா, அதில் முதல் சொல்லே கடமை தான். கடமை என்பது, ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவ்வளவு முக்கியமானது என்பதைத்தான் சூசகமாகச் சொன்னார் அவர். ஏன்? கோடிக்கணக்கான குடிமக்களின் நல்வாழ்வே அவர்களின் கையில்தானே இருக்கிறது.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி:-

கடைதனில் தூங்கியவன் முதல்
இழந்தான் – சொந்தக்
கடமையில் தூங்கியவன் புகழ்
இழந்தான்.

புகழ்தானே, போனால் போகிறது. யாருக்கு வேண்டும் இந்தப் புகழ் என்று இதைச் சாதாரணமாய் எடுத்துக் கொள்ளலாமா? கூடாது. ஏன் தெரியுமா?

புகழுக்கு எதிர்ப்பதம் என்ன? இகழ். கடமையில் தூங்கிவிட்டால் புகழ் போவது மட்டுமல்ல, இகழ் வந்து சேரும். அதாவது, அறிந்தவர் தெரிந்தவர் அத்தனை பேரின் ஏளனத்திற்கும் இகழ்ச்சிக்கும் ஆளாக வேண்டும் என்றல்லவா சொல்கின்றன இந்த வரிகள்.

ஆகவே, கடமையை நாம் மறக்கவில்லை என்றால் வெற்றியும் நம்மை மறக்காது. வெற்றியால் வரும் புகழும் நம்மை மறக்காது. புகழால் வரும் மகிழ்ச்சியும் நம்மை மறக்காது.

கடமையில் வைப்போம் கண்களை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்