Home » Articles » உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்

 
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்


admin
Author:

கடந்த சில மாதங்களில் நாளேடுகளில் செய்தித் தலைப்புகளில் – ‘தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்’, ‘தகவல் அறியும் உரிமை சட்ட அமலில் மெத்தனம் – தலைமை செயலருக்கு நோட்டீஸ்’. ‘தகவல் ஆணைய உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை’ ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்’, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆறாயிரம் மனுக்களுக்கு தீர்வு’ – இப்படி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இச்செய்திகள் அனைத்தும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ தொடர்பானவை.

மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் என்று பல தரப்பிலிருந்தும் தகவல்களை பெற இச்சட்டம் வழி கொள்ள உதவும் இச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வதே வெற்றியை நோக்கிய ஒரு பயணமாகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பொதுமக்கள் அலுவலர்களிடமிருந்து தங்களுக்கு வேண்டிய தகவலை அதிகாரப் பூர்வமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தகவல் அறியும உரிமை இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் பல முறை தெரிவித்திருந்தபோதும், குடிமக்கள் இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் இதற்குமுன் நடை முறையில் இல்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 1776ம் ஆண்டு சுவீடம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 56 நாடுகளில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு மத்திய அரசு இயற்றிய தேசிய தகவல் அறியு உரிமைச் சட்டம் நாட்டின் ஜனநாயக வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகும். தகவல் அறியும் உரிமை ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு (Right to Information) குடியரசுத் தலைவர் 2005ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தார். இச்சட்டம் 2005 அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டம சர்வதேச நடைமுறைக்கு ஏற்றதாக இயற்றப்பட்டுள்ளது.

வெளிப்படையான நிர்வாகம், லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றுக்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இச்சட்டம செயல்பட்டு வருகிறது. அரசு தானாக முன் வந்து தகவல்களை தெரிவிக்காதபோது, அத்தகவல்களை ஒருவர் பெறுவதற்கு இச்சட்டம் உதவுகிறது. மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, நாம் கேட்கும் தகவல்களை அந்த அமைப்புகள் நமக்கு அளிக்க வேண்டியதை கட்டாயமாக்குகிறது இந்தச் சட்டம். நாடு விடுதலை அடைந்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமக்களுக்கு முதன் முறையாக மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரிமையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இப்புதிய சட்டம் ‘தகவல்’ என்ற சொல்லுக்கு விரிவான விளக்கத்தை அளிக்கிறது. இதன்படி ஒரு விஷயம் குறித்து அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளும் கருத்துக்களும் கூட வெளியிடப்பட வேண்டும். இச்சட்டத்தின் 8வது பரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, ஒரு விஷயம் குறித்து அதிகாரிகள் கோப்புகளில் எழுதிய குறிப்புகளும், கேட்பவருக்கு அளிக்கப்பட வேண்டும். அரசின் ஆவணங்களையும், பதிவேடுகளையும், அரசின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்வதற்கான உரிமையும் இச்சட்டத்தின் ‘தகவல்’ என்ற சொல்லில் அடங்கும். எனவே, இச்சட்டம் கோப்புகள், ஆவணங்கள் என்ற எல்லையைத் தாண்டி, உண்மை நிலவரத்தை மக்களே அறிய உதவுகிறது.

அணுகுமுறை: அரசிடமிருந்து தகவலைப் பெற எளிமையான முறையை இச்சட்டம் வகுத்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு அரசுத்துறையும் பொதுமக்களிடமிரிந்து மனுக்களைப் பெறவும், அது தொடர்பான தகவல்களைத் தரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுவுக்கு 30நாளில் பதிலளிக்க வேண்டும். இருப்பினும் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பின் அது தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், ஒரு நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களை 48 மணி நேரத்திற்குள் அளிக்கப்பட வேண்டும்.

விதிவிலக்கு: இச்சட்டத்தின் கீழ் சிலவகைத் தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாபு, அறிவியல் அல்லது பொருளாதார நலன்களைப் பாதிக்கும் தகவல்கள், அண்டை நாடுகளுடன் உறவை பாதிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டிவிடும் தகவல்கள் ஆகியவற்றை வெளியிட இச்சட்டம் தடைசெய்கிறது. நீதிமன்றத்திலோ, தீர்ப்ப்பாயத்தாலோ தடை செய்யப்ட்ட தகவல்கள், நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தின் உரிமையைப் பாதிக்கும் தகவல்கள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாம் நபரின் வர்த்தக நலன்களை பாதிக்கக்கூடிய வர்த்தக ரகிசியங்கள், அறிவு சார் உரிமைகள் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் நலன்கருதி, அவற்றை வெளியிடலாம் என்ற தகுதியுடைய அதிகாரி தெரிவிக்கும் பட்சத்தில் அத்தகவலை வெளியிட இச்சட்டம் வழிவகுக்கிறது.

வெளிநாட்டு அரசுகளிடமிருந்து பெறப்படும் ரகசிய தகவல்கள் ஒரு வழக்கின் விசாரணைப் பாதிக்கும் என்பதாலோ, ஒருவரின் உயிருக்கோ, பாதுகாப்பிற்கோ குந்தகம் விளைவிக்கும் என்பதாலோ, அத்தகைய தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவைக் குறிப்புகள், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களின் கருத்துகள், செயலர்கள் மற்றும் இதர அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களில் எடுக்கப்படும் குறிப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அத்தகைய முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை இந்த சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் ‘வெளியிடத் தடையல்லை’ என்றால் அந்த தகவலையும் மக்களுக்கு வெளியிடலாம்.

புகார்களும், மேல் முறையீடுகளும், கட்டணம், அபராதம், வரையறைகள் முதலியன… அடுத்த இதழலில்..


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்