Home » Articles » கோடீஸ்வரர்களின் நேசம்

 
கோடீஸ்வரர்களின் நேசம்


மெர்வின்
Author:

கோடீஸ்வரக் கொடை வள்ளல் ஆண்ரூகார்னீகி தொழில் தொடங்கியபோது அவருடைய நூதன முறைளையெல்லாம் கண்டு மற்ற தொழில் அதிபர்கள் எள்ளி நகையாடினார்கள்.

ஓராண்டுக்குள் அவருடைய தொழில் வீழ்ச்சி அடையும் என்று கூறினார்கள். ஆனால் கார்னீகியின் தொழில் ஐம்பது லட்சம் டாலர் லாபத்தைப் பெற்றுத் தந்தது.

இதனைக் கண்டு எல்லாத் தொழில் அதிபர்களும் ஆச்சரியப்பட்டனர். எப்படி இந்த மாதிரி லாபம் சம்பாதிக்க முடிந்தது.

“மகத்தான வெற்றியை எவ்விதம் பெறமுடிந்தது” என்று வினவினார்.

அப்பொழுது கார்னீகி கூறினார்: என்னுடைய வெற்றியின் முதற்காரணம் என் கீழ் பணியாற்றுகின்றவர்களை – என்னை பிறர் எவ்வாறு நடத்த வேண்டுமென்று விரும்புவேனோ, என்னுடைய குழந்தைகள் பிறரால் நடத்தப் பெறுவதை நான் விரும்புவேனோ அதே மாதிரி அவர்களை நான் நடத்தியதுதான். அடுத்த காரணம் –

கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு வேலை செய்பவர்கள் அல்லர்.. என்னைக் கண்டு அவர்கள் பயப்படுவதை நான் விரும்பவே இல்லை.

அவர்கள் எல்லோரும் இந்தத் தொழிலின் முக்கியமான அங்கம் என்பதை உணரச் செய்துள்ளேன்.

அவர்களின் எவராவது துக்கம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டால் அவர்களைத் தனியாக என் அறைக்கு அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டு உடனே நிவர்த்தி செய்வேன்.-

இருவரிடையே மனத்தாங்கள் ஏற்பட்டிருந்தால் அவர்களை அழைத்துப் பேசி நட்புறவை ஏற்படுத்தி வைக்கிறேன்.

அவர்களுடன் நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால், அவர்களும் என்னுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறார்கள். என்னுடைய நலனும் ஒன்றாக இணைந்திருப்பதாகவும் என்னுடைய நலனே அவர்களுடைய நலன் என்றும் உணர்ந்திருக்கறார்கள்.

அதனால் அவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்றுகிறார்கள். என் கண்முன் ஒரு வேலை, நான் இல்லாதபோது இன்னொரு வேலை என்று அவர்கள் பணியாற்றுவதில்லை.

தொழில் நிலையத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது எவரும் என்னைக கண்டதும் சுறுசுறுப்பாகப பணியாற்றுவாதாகப் பாவனை செய்வதில்லை.

எப்போதும் போல் அமைதியாகவும், பொறுப்பாகவும் பணியாற்றுவதையே நான் காணுகின்றேன். இவைகளை நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன் என்று தெளிவுபட விளக்கியவுடன் தொழிலதிபர்கள் எல்லோரும் ஆண்ரு கார்னீகியை மிகவும் பாராட்டினார்கள்.

வாணிபத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் பணியாற்றுகின்றவர்களைத் தங்களின் பங்காளிகள் போன்று நடத்தியதுதான்! அடுத்த காரணம்…

இது மட்டுமல்ல, தங்களுக்கு கிடைகும் லாபத்தைப் பிரித்தும் கொடுத்திருக்கிறார்கள். பங்காளிக்கு உள்ள பங்கு போல.

சார்லஸ் ஷ்வாப் தன்னுடைய தொழிலில் கிடைத்த முதல் பதினைந்து சதவிகித லாபத்தை தம்மிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

இவர் ஆண்டின் முடிவில் கணக்குப் பார்த்து தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பங்கு பிரித்துக் கொடுத்தார்.

ஆனால் ஹென்றி போர்டு ஆண்டின் தொடக்கத்திலேயே அந்த ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை சென்ற ஆண்டின் கணக்கிலிருந்து நிதானித்து பங்கு பிரித்துக் கொடுத்து விடுவார்.

இந்தத் திட்டத்தைப் பல பேரிடம் கூறிய போது இது ஒரு பைத்தியக்காரத் திட்டம் என்று கேலி செய்தனர். ஆனால் ஹென்றிபோர்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார்.

பின்பு கிடைக்கும் ஆதாயத்திற்காக உற்சாகத்தடன் பணியாற்றுகின்ற போது, வேலை செய்வதறகு முன்பே ஆதாயம் கையில் கிடைத்தால் இன்னும் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள் என்று நம்பினார்.

ஒரு கோடி டாலர்களை அவர்களுக்கென்று ஒதுக்கி ஊதியத்துடன் ஆதாயமாகக் கொடுத்தார்.

ஒருவேலை போர்டு நினைத்த அளவு பணம் லாபமாகக் கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்று சிலர் யோசித்தபோது-

ஹென்றி போர்டு கூறினார். தொழிலாளர்களின் நல்ல எண்ணத்தைப் பெற்ற மகிழ்ச்சியாவது கிடைக்கும். ஆயிரமாயிரம் குடும்பங்களை வாழவைத்த நற்பெயராவது எங்களுக்குக் கிடைக்கட்டும் என மன நெகிழ்வுடன் எடுத்துச் சொல்லிய பாங்கினைப் போற்றாதவர்களே எவரும் இல்லை.

இதுதான் மனித நேசத்தை வளர்க்கும் வழி.

நீதி நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அன்பு வழியில் வெறுப்பு, விரோதம், பகை, ஐயம், வன்முறை, குறைகூறுதல் ஆகியவற்றிற்கு இடமே இல்லை.

அதனால் வெற்றிச் சக்கரம் மென்மையாகவும் வேகமாகவும் சுழன்று நற்பலனகளை அள்ளித்தரும்.

இங்கிலாந்தில் ஒரு தொழில் அதிபர் தன்னுடைய தொழிற்சாலையை மூடிவிட ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

காரணம் தொழிலாளர்களுடன் ஒத்துப்போக முடியாமல் இருந்ததுதான். இந்த விவரத்தை ஒரு இளைஞன் அறிந்தான்.

தொழில் அதிபரைக் கண்டு தொழிற்சாலையை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டான்.

தொழில் அதிபரும் அவனுடைய வேண்டுகோளை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டார். தொழிலை நிரந்தரமாக மூடுவதற்கு முன் இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார்.

ஆறு மாதத்திற்குள் தொழிற்சாலை நன்றாக நடத்தி லாபம் காட்ட வேண்டும் என்று இளைஞனிடம் கூறினார்.

இளைஞனும் சரி என்று கூறி ஒப்பந்ததில் கையெழுத்துப் போட்டுத் தந்தான்.

இளைஞன் தொழிற்சாலையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் அவன் செய்த முதல் வேலை-

தொழிலாளிகள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் மனம் விட்டு பேசினான். தான் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கான உண்மையான காரணத்தை ஒளிவு மறைவின்றி எடுத்துரைத்தான். தொழிற்சாலை நஷ்டத்தில் நடந்து கொண்டிருப்பதை தெளிவுபட விளக்கினான். முதலாளி தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிடும் எண்ணத்தில் இருப்பதையும் கூறினான்.

முதலாளியிடம் தனக்கு ஒரு வாய்ப்பு தந்துதவுமாறு கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல் தொழிற்சாலையை லாபத்துடன் நடத்திக் காட்டுவதாகவும் கூறியிருப்பதாக விளக்கினான்.

நீங்கள் எல்லோரும் முழு ஒத்துழைப்பு தந்தால்தான் தொழிற்சாலையை திறம்பட நடத்த முடியும் என்பதனையும் சொல்லிவிட்டு-

தனக்கு யார் யார் ஒத்துழைப்புத் தரமுடியும்? என்று கேட்டான். எல்லோரும் ஏகோபித்தக் குரலில் ஒத்துழைப்புத் தருகிறோம் என்றனர்.

இளைஞனும் தொழிலாளர்களுடன் சேர்ந்து இரவு பகலாக வேலை செய்தான். தொழிற்சாலையின் ஒரு அறையை தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டு அல்லும் பகலும் பாடுபட்டான்.

தொழிளார்கள் எல்லோரிடமும் அன்பாகவும் நேசமாகவும் நடந்து கொண்டான். அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தான்.

அவர்களுடைய கஷ்டங்களைப் போக்க தொழிசாலை பணத்திலிருந்து கடன் கொடுத்தான். அவர்களின் வீட்டு சுபகாரியங்களிலெல்லாம் கலந்துகொண்டான். சுருக்கமாகச் சொன்னால் அவர்களுடன் அவனும் ஒன்றாகி தொழிலாளி ஆகிவிட்டான். அதன் பயன்-

தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்கள் அதிகமாயின. விற்பனை அதிகரித்தது. லாபம் ஏரளமாகக் கிடைத்தது. ஆறுமாதம் சென்றதும் முதலாளி தொழிற்சாலையை அவனிடமே ஒப்படைத்தார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்