Home » Articles » உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)

 
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)


கலைச்செல்வி க
Author:

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2007

தற்போது மருத்துவ உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சியாளர்களுக்கும், நோய்களை குணப்படுத்தும் மருத்துவ நிபுணர்களுக்கும் மிகவும் உபயோகப்படுகிற “ஸ்டெம்செல்” கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கொடுத்து மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும்.

உலகத்தில் பல எதிர்ப்புக் குரல்கள் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக இந்த “ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு” ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அனைத்துவகையான விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு தங்களை “எம்பிரியானிக் ஸ்டெம் செல்” (embryoic stem cell) ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்துக் கொண்ட பேராசிரியர் மார்டின் ஜெ. இவான்ஸ், கார்டிக் பல்கலைக்கழகம், இங்கிலாந்து மரியோ கபிச்சி, உடயோவ் பல்கலைக்கழகம், அமெரிக்கா — ஒலிவர் ஸ்மித்தீஸ், வடக்கு கரோலின் பல்கலைக் கழகம், அமெரிக்கா ஆகியோருக்கு நோபல் பரிசு குழு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு குழு, மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது .

இவர்கள் கண்டுபிடிப்புதான் என்ன? உண்மையில் மனித கரு முட்டையை ஆராய்ச்சிக்கு உட்படுத்த கூடாதா? இல்லை இதில் ஆராய்ச்சியே செய்யக்கூடாதா? அப்படி ஆராய்ச்சி செய்யாமல் இருந்தால் இன்று மருத்துவ உலகில் இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா? இவர்களுக்கு இந்த நோபல் பரிசுதான் கிடைத்திருக்குமா?

நோபல் பரிசு பெரும் ஆராய்ச்சிகள் உண்மையில் மிகவும் பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றதாகும். இந்த ஆராய்ச்சி இந்த வகையைச் சார்ந்ததே.

கடந்த ஆண்டு ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சிறந்த தென்கொரிய விஞ்ஞானி தனது ஆராய்ச்சியில் உடனே பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில பொய்யான தகவல்களை கொடுத்ததால் தனது ஆராய்ச்சி வாழ்க்கை இழந்தார். ஆனால் நோபல் பரிசு பெற்ற மூன்று விஞ்ஞானிகளும் பல ஆண்டுகள் காத்திருந்து தங்கள் உண்மையான ஆராய்ச்சி முடிவுக்கு நோபல் பரிசு பெற்றுள்ளனர். இதன் மூலம் உண்மையான ஆராய்ச்சி முடிவுகளுக்கு காத்திருந்தாலும் பலன் கிட்டும் என்பதை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்து, சரியான தகவல்களை கொடுக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.

இந்த நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்புகள் என்ன?

மனிதனில் பெரும்பாலும் காணப்படுகின்ற சர்க்கரை வியாதி, மரபணு குறைபாட்டு ஜீன்கள் பெற்றோர்களிடம் இருந்த குழந்தைகளுக்கு வருவதால் இந்த நோய்களை முழுமையாக குணப்படுத்த இயலாது. இந்த நோய்களுடன் அன்றாட வாழ்வில் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம், இவற்றை குணப்படுத்த இயலாத ஒன்று.

இந்த நோய்களுக்கு தீர்வே இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்த காலம் சென்று இவற்றை குணப்படுத்த முடியும், மனிதனின் மரபணுக்களில் நோய்க்கான காரணிகளை கண்டுபிடித்து அவற்றை “கருமுட்டை செல்லில்” (Stem cell) மாற்றத்தை ஏற்படுத்தி அதை உடலில் செலுத்தி உடலில் உள்ள பழுதான, நோய் உடைய மரபணுவை குணப்படுத்த முடியும் என்பதை உலகிற்கு காட்டிய ஒரு ஆராய்ச்சின் பகுதியே நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மனிதனின் எலும்பு மஜ்ஜையில் (born marrow) உள்ள ஸ்டெம்செல்லில் உள்ள இரத்தம் சம்பந்தமான நோய் கொண்ட அணுவை (cell) சுடுதி மாற்றம் (mutation) மூலமாக மாற்றி நோயை குணப்படுத்த முடியும் என்பதை விளக்கினார்கள்.

கருமுட்டை செல்லில் சடுதி மாற்றத்தை ஏற்படுத்தி, அதில் உள்ள குறையை சரிசெய்து அந்த வளரும் திசுக்களில் செலுத்தும்போது, மாற்றம் செய்யப்பட்ட மரபணு, வளரும் செல்லில் உள்ள தன்னை இணைத்துக்கொண்டு குறையுடைய மரபணுக்களை மாற்றம் செய்து, நோயை குணப்படுத்துகிறது. இதை எலி உடலில் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்தார்.

எலி கருமுட்டையை எடுத்து செல்களை செயற்கையாக உற்பத்தி செய்தார். இந்த செயற்கையாக உற்பத்தியான வளரும் செல்கள் (cell line) மற்றொரு எலியின் கருமுட்டை செல்லுடன் சேர்த்து விடப்பட்டது.

இந்த இரண்டு செல்களும் ஒன்றாக எலியின் கருப்பையில் வளரவிடப்பட்டுக் கிடைத்த புதிய எலிகளை ஆராய்ந்ததில், கருமுட்டையில் மாற்றம் செய்யப்பட்ட மரபணுக்கள், புதியதாக தோன்றிய எலியில் காணப்பட்டது.

இந்த மாற்றம் செய்யப்பட்ட மரபணுக்கள், பல தலைமுறைகளுக்கு காணப்பட்டதால், மரபணு மாற்றம் நடந்தது ஒத்துக்கொள்ளப்பட்டது.

எனவே நோய்கொண்ட மரபணுக்களை மாற்றி அமைக்க முடியும் என்பதையும், அப்படி ஒருமுறை மாற்றப்பட்டால், ‘பிறகு வரும் சந்ததிகள் நோய் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியும் என்பதும் இந்த சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதை மேலும் உறுதி செய்ய கருமுட்டை கர்சினோம் செல்லை (embyonic carcinoma cell) வளர்த்து அதில் வைரஸ் மூலம் தக்க வைத்து, வைரஸ் உள்ள தேவையான மரப்புக்கூற்றை கருமுட்டை செல்லுக்கு குரோமோசோம் மாற்றம் செய்தார்கள்.

இதன் மூலம் புதியதாக சேர்க்கப்பட்ட மரபுக்கூறு கொண்ட எலியை உற்பத்தி செய்து, அதன் குணத்தை நிரூபித்தார்கள்.

இந்த “மரபணு குறிவைத்தல்” (Gene targeting) எலியை ஒரு உதாரணமாக வைத்து ஆராய்ச்சி செய்து நோய்க்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்தல் நிரூபிக்கப் பட்டது. இதனால் தற்போது மனிதருக்குள்ள எண்ணற்ற மரபணு சம்பந்தமான நோய்களை கண்டுபிடிக்கவும் அவற்றைச் சரி செய்யவும் மிகவும் உறுதுணையாக உள்ளது.

இந்த முறை கண்டுபிடிப்பதற்கு முன்னால், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மரபணு சம்பந்தப்பட்ட நோய்கள், மூதாதையர்களிடம் இருந்து எப்படி சந்ததிகளுக்கு பரவுகிறது என்பதை, நோயின் தன்மை, பரவும் விதம், நோயாளிகளின் கதை இவற்றை வைத்து அனுமானம் மூலம் முடிவுக்கு வந்தனர்.

அல்லது, நோய்க்கு காரணமான மரபணுவுக்கு சடுதி மாற்றம் (gene mutation) மூலம், நோய் காரணிகளை மாற்றி அதன் மூலம் கிடைக்கும் சந்ததிகளில் நோய் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து தெரிந்து கொண்டார்கள்.

இந்த வகை ஆராய்ச்சிகள் மிகவும் துல்லியமாக விடைகளை கொடுக்காது மற்றும் முடிவுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

எனவே இந்த புதிய முறை விரைவில் மனிதனை ஆட்டி படைக்கும் மரபணு சம்பந்தமான நோய்களை விரைவில் குணமாக்க உதவும் என்பதில் ஐயம் இல்லை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்