Home » Articles » 30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு

 
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு


நம்பிராஜன் M
Author:

கடந்த சில வருடங்களாக திருப்பூர் நகரம் பின்னலாடை உற்பத்தியில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு மற்றும சளைக்காமல் வாடிக்கையாளர்களது தேவையான தரம், மலிவு விலை மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி பொருளை ஒப்படைக்கும் தன்மை போன்றவற்றாலும் திருப்பூர் தற்போது அதி நவீன பின்னலாடை உற்பத்தியில் முன்னலையிலிருக்கும் C&A Wal – Mart, J.C. Penney, GAP, Marks & Spencers, Sara Lee, Tommy Hilfiger, Karstadt Quell, H&M, Switcher ஆகியோரின் கூட்டுக்குழுவாக உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பின்னலாடை வர்த்தகங்களின் வருகையினால் திருப்பூரின் வளர்ச்சித் திட்டத்தில் ஒரு புதிய வேகம் எழுந்துள்ளது. அவர்கள் உற்பத்திக்கு தேவையான வசதிகளை தங்களின் வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போன்று எதிர்பார்க்கின்றார்கள். அதாவது, தேவைகளின் அளவில் மட்டுமல்லாது சமுதாய மாற்றத்திற்கேற்ற படியும், தரம் மற்றும் சூழ்நிலையை நிர்வகிக்கும் முறை, வேலை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் சூழ்நிலைகளை எதிர்பார்க்கின்றாகள். ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் தனிப்பட்ட முறையில் சர்வதேச பின்னலாடை வர்த்தகங்களின் தேவைகளை பூர்த்தி செய்த போதிலும், அந்த வசதிகள் நகரின் பல இடங்களில் வியாபித்து இருந்தாலும் அவை குறிப்பிட்டுத் தெரிகிற அளவு இல்லை.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (தி.ஏ.ச.) 1990ஆம் ஆண்டு திருப்பூரிலுள்ள பருத்தி பின்னலாடை உற்பத்தியாளர்களின் தேவைகளுக்காக தொடங்கப்பட்டது. அவர்கள் திருப்பூரில் உற்பத்தி கூடங்களை அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தியுள்ளனர். தி.ஏ.ச. தற்போது நன்றாக வளர்ந்து பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் வலிமையான சங்கமாக உருவெடுத்துள்ளது. அவர்கள் பெரிய திட்டங்களைத் தீட்டி அடிப்படை தேவைகளை விருத்தி செய்துள்ளார்கள். மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டு, வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் துணையுடன் இதனைச் செய்துள்ளனர். தற்போது இந்த சங்கத்தில் 640 உறுப்பினர்கள் உள்ளனர்.

வளர்ந்த நாடுகளில் உள்ள நவீன முறை உற்பத்திக்கூடம் இருப்பதை போன்று, ஒரு பெரிய தொழிற்கூடம் அதே தரத்துடன் பின்னலாடை ஏற்றமதியாளர்களுக்காகத் தொடங்கும் கனவு தி.ஏ.சங்கத்துக்கு இருந்தது.

2002ல் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒரு உலகத் தரம் வாய்ந்த, பின்னலாடை உற்பத்தி வசதிகள் நிறைந்த பூங்காவை ஏற்றுமதியை அதிகரிக்கும் குறிக்கோளுடன் உருவாக்கும் முடிவை அறிவித்தது. தி.ஏ.ச தலைவர் திரு. A, சக்திவேல் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாம் பயன்படுத்தி கொள்ள ஒரு திட்டத்தை உருவாக்கினார். அத்திட்டம் தான் ‘நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா’. இப்பூங்கா அவிநாசிக்கும், பெருமாநல்லூருக்கும் இடையிலான NH 47 சாலையில் திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மூலமாக மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அரசு 2002 அக்டோபரில் இத்திட்டத்தை அங்கீகரித்தது.

மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் தி.ஏ.ச. பின்னலாடை ஏற்றுமதியாளர்களை அழைத்து அவர்களுக்கான மனையை பதிவு செய்தது. எதிர்பார்த்ததைவிட அதிகமாக 50 பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்திடம் பதிவு செய்தனர். ஒவ்வொருவரும் 2 ஏக்கர் இடத்திற்காக ரூ. 15.25 லட்சத்தை முன் பணமாக கட்டினர். 10 உறுப்பினர்கள் சாதாரண இடத்தைவிட இருமடங்காக உள்ள இடம் வேண்டி விண்ணப்பித்தனர். இந்த திட்டத்தை முடிக்க தி.ஏ.ச. தலைவர் திரு. A. சக்திவேல் உறுதி பூண்டார். இத்திட்டத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக திரு. A. சக்திவேல் அவர்களைக் கொண்டு அதை ஒரு கம்பெனியாக, பிரிவு 25, கம்பனி சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. தினசரி திட்ட அலுவலக வேலைகளை கவனிக்க இயக்குநர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஈட்டி வீராம்பாளையம் என்னும் கிராமம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசு வழிகாட்டுதல் படி அரசின் அதிகபட்ச நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக இந்த இடம் அமைந்தது.

ஏனெனில்,

1. இந்த இடம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது.

2. இங்கிருந்து 1 மணி நேரத்திற்கும் குறைவாக பயணம் செய்தால் கோவை விமான நிலையத்தை சென்றடைய முடியும்.

3. தேசிய நெடுஞ்சாலை 47 கொச்சின் துறைமுகத்தை நேரடியாக இணைக்கிறது. சென்னை மற்றும் தூத்துக்குடி துறைகமுகங்களை தேசிய நெடுஞ்சாலை குறுக்கு நெடுக்கு சாலைகள் மூலம் இணைக்கிறது.

4. இங்கிருந்து இரு தனியார் ICD 10 கி.மீ. சுற்றளவில் உள்ளனர். மேலும் பின்னலாடை தயாரிப்பு, சாயம் போடுதல் மற்றும் அச்சுப் பதித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

6. திருப்பூருக்கு அருகில் இது உள்ளதால் மூலப்பொருட்களை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் வசதி உள்ளது.

7. தொழிலாளர்கள் இப்பூங்காவைச் சுற்றி உள்ள கிராமங்களில் அதிகம் உள்ளனர்.

8. இந்த பூங்காவுடன் அனைத்து நகரங்களும் சாலை வசதி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிலத்தை இலவசமாக கொடுக்கின்ற நிலையில் இல்லாததால், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உறுப்பினர்கள் நிலத்தின் விற்பனை மதிப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர். நிலத்தை வாங்குவதற்கு தனிப்பட்ட முறையில் நில உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்தனர். தி.ஏ.ச. தமிழக அரசிடம் நிலத்தை பதிவு செய்யும் முத்திரைத்தாள் செலவை முழுவதுமாக விலக்கு அளிக்க கேட்டுக் கொண்டது. ஆனால், தமிழக அரசு 50% முத்திரைத்தாள் செலவை மட்டும் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது.

2003 ஜூனில் 170 ஏக்கர் நிலத்தை நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வாங்கியது. மேலும் கட்டிடக் கலைஞர்களையும், சிவில் பொறியாளர்களையும் கலந்தாலோசித்து பின்னலாடை பூங்காவின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. அவ்வரைபடம் கீழே கண்ட முக்கிய அம்சங்களைக் கொண்டு அமைந்தது.

1. 46 மனைகள் 1.80 ஏக்கர் வீதம் (ஒவ்வொன்றும்)
7 மனைகள் 3.60 ஏக்கர் வீதம் (ஒவ்வொன்றும்)

2. 90 அடி பாதை தே.நெ. 47லிருந்து பூங்காவின் நுழைவு வாயில் வரை

3. 60 அடி பாதை பூங்காவின் உள்ளே டிரெய்லர்கள் மற்றும் 40 அடி பாதை கன்டெய்னர்கள் உள்ளே வந்து செல்வதற்கு.

4. நல்ல அடிப்படை வசிதகள் – தண்ணீர் விநியோகம், கழிவு நீர் வெளியேற்றம், பயிற்சி மையம், தொழிலாளர் நலன் வசதிகள், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தனித்தனி சுற்றுச் சுவர், பூங்கா முழுவதற்கும் சுற்றுச் சுவர், சமச்சீர் மின் விநியோக இயந்திரம் (தலைமை மின் நிலையம்)
-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்