Home » Articles » கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!

 
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!


admin
Author:

உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது பற்றிய தன்னம்பிக்கை கருத்தரங்கில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.ந.வெங்கடேஷ் அவர்கள் ஆற்றிய உரையலிருந்து;

“மாணவர்களுக்கு ஒழுக்கம், அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகிய மூன்றும் முக்கியமானது. மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன துறையைத்தேர்வு செய்ய வேண்டும் என்பதை 10-வது படிக்கும்போதே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொரு நிலையிலும் திட்டமிடுதல் முக்கியமான ஒன்று. கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கையும் இருந்தால் ஒவ்வொரு மாணவனும் சாதிக்க முடியும். மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகளை பொறுத்த அளவில் தமிழிலேயே எழுதலாம். ஆங்கில அறிவு அவசியமானது என்றாலும் அனைத்து தாள்களையும் தமிழிலேயே எழுதி, தேர்வு பெற்று மாணவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகலாம்” என்றார்.

இந்திய அரசின் குடிமை பணிகளுக்கு கடும் போட்டி உள்ளது. ஆண்டிற்கு மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 300 முதல் 400 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற, தினமும் செய்திதாள்களை படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களில் உள்ள நாட்டு நடப்புகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், கட்டுரைகள், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு போன்றவை தொடர்பான தகவல்களை படிக்க வேண்டும்.

குழுவாக இருந்து விவாதித்தல், புத்தகங்கள் படித்தல், கருத்தரங்குகள், சொற்பொழிவுகளில் பங்கேற்பதும் தேர்வுக்கு உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு உள்ளது; ஆனால் தகவல் தொடர்பு குறைவாக உள்ளது என மென்பொருள் நிறுவனங்கள் சுட்டி காட்டியுள்ளன.

எனவே, மாணவர்கள் உலகலாளவிய தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம்” என்றார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்