Home » Articles » கற்றல் கருவிகள்

 
கற்றல் கருவிகள்


இரத்தினசாமி ஆ
Author:

“தேவையான கருவிகளைக் கொடு. நாங்கள் வேலையை முடிக்கிறோம்” – சர் வின்ஸடன் சர்ச்சில்.

பயன்றற மூளை என்ற ஒன்று இல்லை. சரியான வகையில் மூளையைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதே உண்மை. உலகின் மிகவும் உயர்ந்த, விலை மதிக்க முடியாத அற்புதக் கருவி நமது மூளை. சரியான பயிற்சிகள் மூலம் அதை சிறப்பாக இயக்கினால் சாதனை பல புரியலாம்.

கற்பவை அனைதும் மூளையில் நிரந்தர நினைவாற்றலாக மாறவேண்டுமானால் அதற்கான கருவிகள் தேவை. அவையே கற்றல் கருவிகள்.

அடிப்படை கற்றல் கருவிகள்

தேர்வுகளுக்கான புத்தகங்களை படிக்கும்போது கதைப்புத்தகம் படிப்பது போல படிக்காதீர். குறிப்புகள் எடுக்க நோட்டு, பென்சில், பேனாவுடன் மேஜை நாற்காலியில் அமர்ந்து படிக்கவும். ஒரு பத்தி படித்து முடித்தபின் அதன் முக்கிய சாரத்தை உங்கள் கைப்பட நோட்டில் தந்தி வாசகங்கள் போல் எழுதவும். ஓரிரு வார்த்தைகள், ஒரு படம், சில குறியீடுகள் இவை மூலம் அந்த பத்தியை எளிதாக நினைவு கூறலாம்.

1. குறிப்புகள்

  • இதுபோல அந்த அலகு முழுவதற்கான குறிப்புகளை நோட்டில் எழுதவும் புதுவார்த்தைகள், தூண்டக்கூடிய வார்த்தைகள், கடின வார்த்தைகளை புத்தகத்தில் பென்சிலால் அடிக்கோடு இடவும்.
  • வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திய போது எழுதிய குறிப்புகளையும் உடன் வைத்துக்கொள்ளவும்.
  • அலகை நன்கு இரண்டு, மூன்று தடவை படித்து முடித்த பின்னர், தெறிந்த பின்னர் அனைத்தையும் வைத்துக் கொண்டு நீங்களாகவே உங்கள் கையெழுத்தில் முக்கிய குறிப்புகள் படங்களை எழுதி வரைந்து இறுதி வடிவம் கொடுக்கவும். இது ஒரு முக்கியமான கற்றல் கருவி.

2. உறக்கம்:

ஆச்சரியம். ஆனால் உண்மை. உறக்கம் என்பதும் முக்கியமான கற்றல் கருவிதான். மூளையின் சரியான, சுறுசுறுப்பான இயக்கத்திற்கு உறக்கம் மிக அவசியம். உறக்கத்தில் தான் தற்காலிகமாக பதிந்த செய்திகள் நிரந்தர நினைவாற்றலுக்கு மாற்றப்படுகின்றன. உறக்கத்திற்கு முன் படித்தவைகளை உறக்கத்திற்குப் பின் எளிதில் நினைவு கூறலாம்.

3. எழுதிப்பார்த்தல்

படித்தல், படித்ததை எழுதிப் பார்த்தல், எழுது, எழுது….. படி… படி… எழுது.. எழுது. தேர்வி சிறப்பான வெற்றிக்கான தாரக மந்திரம் இதுதான்.

4. கற்பனை ஆசிரியர்:

ஆசிரியராக மாறி அவ்வலகை கற்பனையாக உரத்த குரலில் நடத்தவும் ஆசிரியரும் நீங்களே. மாணவரும் நீங்களே.

ஆற்றல் கருவிகள்

அடிப்படைக் கற்றல் கருவிகளை கையாண்டு நிபுணத்துவம் பெற்ற பின்னரே தேவைப்படுபவை தான் ஆற்றல் கருவிகள். விரைவு நினைவு அட்டை, நினைவு வரைபடம் ஆகிய இரண்டும் முக்கியமான ஆற்றல் கருவிகள் ஆகும்.

விரைவு நினைவு அட்டை

பேருந்து/இரயில் பயணம், டிக்கெட்/ பொருள் வாங்க வரிசையில் நிற்பது போன்று பல நேரங்களில் நமது பொன்னான நேரம் வீணாகிறது. அவ்வேளைகளில் படித்த செய்திகளில் முக்கியமானவைகளை அட்டவணையிட்டோ, படமாக்கியோ பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளிவிற்கான அட்டைகளில் எழுதி வைத்து அடிக்கடி பார்பதன் மூலம் அச்செய்திகளை நிரந்தர நினைவாற்றலாக மாற்ற முடியும். உதாரணமாக வளிமண்டல அடுக்குகள் பற்றிய விரைவு நினைவு அட்டை கீழே தரப்பட்டுள்ளது.

ஹைட்ரஜனின் வரி நிறமாலை பற்றிய நினைவு அட்டை

அனைத்து வகைப் பாடங்களுக்கும் இதுபோன்ற விரைவு நினைவு அட்டைகளை தயார் செய்யலாம். மிக எளிதாக நிரந்தர நினைவாற்றலில் பதிய வைக்க இவை உதவும்.

நினைவு வரைபடம்

மிகவும் ஆற்றல் மிக்க கற்றல் கருவிகள் இது. 50 அல்லது 60 பக்கங்கள் கொண்ட ஒரு அலகை ஓரிரு வரைபடங்கள் மூலம் எளிதில் நினைவு கொள்ளும் ஓர் அற்புதமான கருவி.

கண்களுக்கு வண்ணங்கள் பிடிக்கும். வடிவங்கள் பிடிக்கும். அதன் மூலம் படிப்பது, பதிய வைப்பது சுலபமானது.

தொடக்கப் பள்ளியில் நாம் பார்த்த “படம் பார்த்து கதை சொல்” மூலம் காகம் – வடை – நரி கதை, குல்லா வியாபாரி கதை. நான்கு எருதுகளும், ஒரு சிங்கமும் கதை இன்றும் நினைவுக்கு வருகிறதே. எப்படி? அவைகளும் நினைவு வரைபடங்களே.

அதே போல் ஒவ்வொரு அலகிற்குமான தலைப்புக்கு தொடர்பான செய்திகளை சிறு சிறு படங்கள் மூலம், வார்த்தைகள் மூலம் வண்ணங்கள் கலந்து அமைப்பதுதான் நினைவு வரைபடம்.

ஓர் அலகிற்கான வகுப்புத் தேர்வை எழுதிய பின்னர், நினைவு வரைபடம் வரைவது சிறப்பானது. நன்கு படித்து எழுதி பார்த்து, முக்கிய குறிப்புகளை படங்களை தனித்தாளில் எழுதி வைத்து அதன் பின்னர் தான் நினைவு வரைபடம் வரைய வேண்டும்.

அடிக்கடி மறக்கும் வார்த்தைகள் படங்கள், சமன்பாடுகள், வருடங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவை அதில் இடம்பெறவேண்டும்.

அவரவர் நினைவு படத்தை அவரவர் கைப்பட அவரே வரைய வேண்டும். வண்ணங்கள், வடிவங்களை தேவையான அளவிற்கு சேர்க்க வேண்டும். மிக அழகாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சுருக்கமான, தெளிவான கருத்துக்கள், கொண்டதாக இருக்க வேண்டியது மிக, மிக அவசியம்.

10 அலகுகள் கொண்ட 400 பக்க புத்தகத்தை 20 நினைவு வரைபடங்களில் அடக்கி விடலாம். நிரந்தர நினைவாற்றலுக்கும் இது மிக உதவும். தேர்வு வேளையில் விரைந்து திரும்புதல் செய்ய இவை பேருதவியாக இருக்கும்.

(அடுத்த இதழில் சந்திப்போம்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்