Home » Articles » நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்

 
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்


சிவநேசன் வெ
Author:

முடியா தென்று சொல்பவன் நெஞ்சம்
மூடத் தனத்தின் மஞ்சம் – வாழ்வில்
முயற்சியை நம்பும் மனிதரைக் கண்டால்
தெய்வமும் குறுக்கிட அஞ்சும்.

உன்னிடம் இருக்கும் அற்புத ஆற்றல்
மண்ணுள் மறைந்த வைரம் – அதை
உணர்ந்து வெளியில் கொண்டு வந்தாலே
உலகில் உன்னிலை உயரும்.

எதையும் செய்ய என்னால் முடியும்
என்றே கரத்தை உயர்த்து – நீயும்
நம்பிக் கையில் நிமிர்ந்து நின்றால்
நாடே பின்வரும் துணிந்து.

அச்சம் தவிர்த்து ஆண்மை கொண்டால்
அறிவில் தெளிவு பிறக்கும் – நீதான்
அரிமா வென்னும் நம்பிக்கை வளர்த்தால்
அனைத்தும் வாழ்வில் சிறக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment