Home » Articles » மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?

 
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?


இராமநாதன் கோ
Author:

மின்சாரம் தாக்கிவிட்டது என தெரிந்தவுடன் ஏதாவது ஒரு மரக்கட்டையால் அவர் தொட்டுள்ள இடத்தில் தட்டி மின்சாரத்தில் இருந்து அவரை பிரிக்க வேண்டும். உலோகப் பொருட்களை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

அடுத்ததாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதியை நன்றாக கழுவி சுத்தமாக்கி ஆண்டிசெப்டிக் மருந்துகளைப் போட்டுக் கட்டு போடவும். மின்சாரம் தாக்கி மயக்கமடைந்திருந்தால் தாடை மற்றும் தலையை உயர்த்தி மூச்சு விடுவதை எளிமையாக்க வேண்டும்.

ஒருவேளை சுவாசம் இல்லையென தெரிந்தால் அவருடைய வாயின் மீது வாயை வைத்து காற்றை நன்கு ஊதி செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். இதயத்துடிப்பு இல்லாமலிருந்தால் இடது மார்பில் இரு கைகளையும் வைத்து இதயத்திற்கு அழுத்தம் (Cardiac Massage) கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் சென்று முறையான சிகிச்சை செய்ய வேண்டும். மின்சாரம் இதயத்திற்கு பாய்ந்தால் இதயம் நின்று விடுகிற அபாயம் இருப்பதால் வீடுகளிலுள்ள மின் இணைப்புகளுக்கு தானாக மின் இணைப்பு துண்டிப்பாகிற கருவியை (Circuit Breaker) பொருத்துவது அவசியம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்