Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தி. ந. வெங்கடேஷ் I.A.S., அவர்களின் அட்டைப்பட கட்டுரை அவரின் சமுதாய நோக்கச் சேவைகளை தன்னம்பிக்கை வாசகர்களுக்கு சுவைக்க தந்தது பாராட்டத்தக்கது. இவர் போன்றே எல்லோரும் அமைந்து விட்டால் நமது அன்பு முன்னால் ஜனாபதி ‘கலாம்’ கண்ட கனவை நிறைவேறி விடலாம் என்பதில் கடுகளவு கூட ஐயமில்லை.

காளாப்பூர் K. சித்ரா காமராஜ்
கோவை-14

தன்னம்பிக்கை இதழை படித்தேன். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு மிகவும் தேவையானது தன்னம்பிக்கை, அது உங்களின் நூல் மூலம் மேலும் வளமடையும் என்றால் அது மிகையாகாது.
மோ. திருமாறன்,
பட்டாளம், சென்னை.

இத்திங்கள் இதழில் பல அரிய செய்திகள் தெரியக் கிடைத்தன. கொலம்பஸ் என்பவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் என்ற ஒரு பக்கமே அறிந்திருந்த நமக்கு அவர் இலக்கை அடைவதற்குள் எத்துணை இயற்கைத் தடைகள், செயற்கைத் தடங்கல்கள் அடைய விரும்பும் இலட்சியத்திற்கு முட்டுக் கட்டையும், விடா முயற்சியும் கொண்டே ஆயிரக்கணக்கான மைல்கள் அல்லற்பட்டுக் கடலில் பயனித்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்ற மறுபக்கச் செய்தியே நம் நெஞ்சங்களில் விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கு வித்தூண்றிற்று.
-புலவர் ந. ஞானசேகரன்
திருலோக்கி

மக்களின் நலனே பதவயின் பலன் என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறிய கருத்துக்கள் அருமை. வாசிப்பு மனிதனின் சுவாசிப்பு என கூறியது அருமை. இதனை அனவரும் பின்பற்ற வேண்டும். கற்றல் பற்றிய கருத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. தற்போது கல்வி பயிலும் மாணவர்கள் இதனைப் பின்றபற்றி நடந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம்.

புதிய பார்வை எப்படிக் கிடைக்கும் என வள்ளுவர் பாவேந்தரின் கருத்தின் அடிப்படையில் விவரித்துள்ளது அருமை. தடைகளை எப்படித் தாண்டி முன்னேற வேண்டும் எனக் கூறியது. சிறப்பு மனதின் மொழி என சுய உந்துதல்களை எப்படி பயன்படுத வாழ வேண்டும் என யோகதா கூறியது மனநலக்கருத்தின் அடிப்படையில் அமைந்தது சிறப்பானது.

இரா. தியாகராசன், எம்.ஏ. பி.எட்.,
ஆசிரியர் (ஓய்வு)
இலால்குடி – 621 601.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்