Home » Articles » மறதி ஏன்?

 
மறதி ஏன்?


இரத்தினசாமி ஆ
Author:

பரீட்சைன்னா மறந்து போறா!

ஒரு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்கான இடைவேளை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தாயாரில் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு உணவை ஊட்டிக் கொண்டே தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுகின்றனர்.

“உங்க மக எப்படி படிக்கிறா?”

“நல்லா படிக்கிறா. போன மாசம் 2nd Rank வாங்கினா. உங்க பிள்ளை எப்படி படிக்கிறா?

அதையே கேட்கறீங்க. வீட்லே நல்லாதா படிக்கிறா. எழுதி காண்பிக்கிறா. ஆனா Schoolலே பரீட்சை/ டெஸ்ட்னா மறந்துடறா” என்று கூறிக்கொண்டே சோற்று உருண்டைகளை பிள்ளையின் வாயில் திணிக்கிறார் தாயார்.

இப்படித்தான் தினம், தினம் மதிய உணவு இடைவேளையில் பிள்ளைக்கு உணவு ஊட்டும்போது, “பரிட்சைன்னா மறந்துடறா” என்று சொல்லி உணவு ஊட்டும் போது அக்குழந்தையின் ஆழ்மனதில் பதிவது,

“பரீசைன்னா மறந்துடணும்” எனும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கடை போடும் வார்த்தைகள்

மறதி என்பது நோயா? மூளைக்கோளாறா?

மறதி என்பது சிலவற்றிற்குத் தேவைதான். குழந்தைகளுக்கு நிரந்தர நினைவாற்றல் குறைவுதான். அடிக்கடி மறக்கும். ஆனால் ஐந்து வயதிற்கு மேல் நிரந்தர நினைவாற்றல் அதிகரிக்கும். அதிகப் படியான வார்த்தைகள், வரிகள், பொருட்கள் போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும்.

காலை எழுவதிலிருந்து இரவு உறங்கும் வரை எத்தனையோ செய்திகள் நமக்கு கிடைக்கும். அனைத்தையும் நினைவில் ஐத்துக் கொண்டால்.. ஒவ்வொருநாளும் நடப்பதை அதைப்போல் நினைவில் நிறுத்தினால் என்னவாகும்…

தூக்கம் போகும். துக்கம் மேலோங்கும்.

எனவே மறதி தேவைதான் ஆனால். எதை மறக்க வேண்டும் என்ற வேறுபாட்டை தெரிந்து கொள்ளவேண்டும்.

பள்ளிப் பாடங்கள் தேர்வுகளுக்கு முக்கியம். அவைகளை அவசியம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் மாணவப் பருவத்தில் சிலருக்கு படிப்பைத் தவிர வேறு சிலவற்றில் ஆர்வம் அதிகமாகிருக்கும். விளையாட்டு, படம் வரைதல், கதை படித்தல், பாட்டு பாடுதல் போன்றவைகளில் சில பிள்ளைகளுக்கு நாட்டம் அதிகம் இருக்கும்.

படிப்பில் ஆர்வம் குறையக் குறைய நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் குறைகிறது. ‘பரீட்சைன்னா மறந்திடறா’ போன்ற சொற்கள், ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ , ‘முட்டாள்’ போன்ற அர்ச்சனைகள் படிப்பின் மேல் வெறுப்பை ஏற்படுத்தும்.

‘இந்த டெஸட்லே மார்க் குறைஞ்சு போச்சு. பரவாயில்லை. அடுத்த டெஸ்ட்லே நல்ல மார்க்கு வாங்கலாம். உன்னாலே முடியும் எனும் ஊக்க வார்த்தைகள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தும்.

+2வில் நல்ல மதிப்பெண் வாங்கியவர்களில் சிலர் கல்லூரியில் சேர்ந்த பின்னர் குறைந்த மதிப்பெண் வாங்குவது ஏன்?

பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற சிலர் பட்ட மேற்படிப்பில் குறைந்த மதிப்பெண் வாங்குவது ஏன்?

அவர்களை மறதி என்னும் நோய் தாக்கப்பட்டதாலா? மூளையில் ஏற்பட்ட கோளாறா?

நிச்சயம் இல்லை.

படிப்பின் மேலிருந்த ஆரவம் திசை மாறியதால்தான்.

தேர்வு பயம்

‘கணக்கு எனக்கு வராது. ஆங்கிலம் என்னால் பிழையின்றி எழுத முடியாது. ‘அறிவியல் எனக்கு ஆகாது’ போன்ற எதிர்மறை எண்ணங்களை ஆழ்மனதில் பதிக்கப்பதிக்க பாடங்களின் மேல் ஆர்வம் வெகுவாகக் குறைகிறது. தேர்வு என்றாலே பய உணர்வு மேலோங்குகிறது.

இத்தனை பெரிய புத்தகமா? இவ்வளவு பாடங்களா?’ என்று வியப்புடன், பயத்துடன் பார்த்தால் எப்படி படிப்பின்மேல் ஆர்வம் ஏற்படும்?

இன்றைய மாணவர்களில் 50% பேர் தேர்வு என்றால் பயத்துடன் இருக்கிறார்கள்.

பயம் நினைவாற்றலைக் குறைக்கிறது. சீரான உடல் இயக்கத்தை கெடுக்கிறது.

தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் சிலரை தற்கொலைக்கு தூண்டுகிறது.

மறதிக்கு மாமருந்து

மறதியை வெல்வது எப்படி?

ஆர்வக்குறைவு, பயம் இரண்டும் நினைவாற்றலுக்கு எதிரிகள். இவைகளே நமது தன்னம்பிக்கையைக் குறைத்து சோம்பேறிகளாக மாற்றுபவை.

எதிர்கால இலக்கை அமையுங்கள்.

இலக்கை நோக்கிய பயணத்திற்கான விதிமுறைகளை வகுங்கள்.

‘என்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை வளருங்கள்.

‘அனைத்து சக்திகளும் உன்னுள் புதைந்துள்ளது. உன்னால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளை மனதில் பதியுங்கள்.

திட்டமிடுங்கள். செயலாற்றுங்கள்.

மனம் என்னும் வேலைக்காரனை உங்கள் வசப்படுத்துங்கள்.

ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் பெற்ற நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்.

ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஐம்புலன் இன்பத்தில் மூழ்கும்.

ஆறாவது அறிவு மேலோங்க, மேலோங்க புலன் இன்பங்கள் கட்டுப்பட்டு, நுண் உணர்வுகள் மேலோங்கி, விழிப்புணர்வு தழைத்து வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறவைக்கும்.

2 நிலையில் படித்து பழகுங்கள்

மூளையின் அதிர்வெண்களைக் குறைக்க குறைக்க படிப்பது பதியும். முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவைகளை ஒரே நேர்கோட்டில் வைத்து, அமர்ந்த நிலையில் கண்களை லேசாக மூடிய வண்ணம், மூச்சுக் காற்றை மெதுவாக உள்இழுத்து விடவும். ஒரு பத்து நிமிடம் மனம் மூச்சுக்காற்றிலே இருக்கட்டும். தினசிரி காலை, மதியம், மாலை, இரவு என்று வெறும் வயிற்றில் இப்பயிற்சியை செய்யவும்.

என்னால் நன்கு படிக்க முடியும். படிக்கும் பாடங்கள் எளிதில் மனப்பாடம் ஆகிறது. நான் தேர்வுகளை சிறப்பாக எழுதுவேன். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன். நான் தேர்வுகளை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்”.

பயிற்சியின் முடிவில் மேகூறிய வார்த்தைகளை மனதில் கூறிக் கொள்ளவும்.

பின்னர் பாடப் புத்தகங்களை எடுத்துப் படிக்கவும்.

தொடர்ந்து விடாமல் இப்பயிற்சியை மேற்கொள்ளவும். பிரபஞ்ச சக்திகள் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றன. உங்களை நம்புங்கள். உங்களை உணருங்கள்.

வெற்றி நிச்சயம்.
(அடுத்த இதழில் சந்திப்போம்)


Share
 

3 Comments

  1. senthil says:

    பயன் உள்ள நல்ல கட்டுரை .

  2. MUKTHAR says:

    very encouraging

  3. நல்லதொரு பயனுள்ள கட்டுரை | இணையத்தில் எல்லா கட்டுரைகளும் மனித பயன்பாட்டுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது – மிக்க நன்றி – பாபு நடேசன்

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்