Home » Articles » பாராட்டு விழா

 
பாராட்டு விழா


வெள்ளியங்கிரி. K
Author:

“தன்னம்பிக்கை” போராளி பேரிசிரியர் முனைவர் இல.செ. கந்தசாமி அவர்களுக்கு பாராட்டு விழாவும், இல.செ. கந்தசாமி அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் பாவலர் காஞ்சி நடராசன் நினைவுக் கருத்தரங்கம், கோவை, போத்தனூர் புகைவண்டி நிலையம் எதிரில் உள்ள தென்னக இயில்வே பசுத்தூர் யூனியன் அரங்கத்தில் 26.08.2007 ஞாயிறு காலை 10.00 மணிக்கு தமிழ்த்திரு இராம்மோகன் (பொதுச் செயலர், சமத்துவ தொழிலாளர் முன்னணி) அவர்கள் தலைமையிலும், அரிமா. மு. சின்னமுத்து, கோவை சேகர் அரிமா நா. மதிவாணன், மேட்டூர் வெள்ளிங்கிரி, சி. கேசவமூர்த்தி, க. மனோகரன், சி. தியாகராசன், சூலூர் வீ. பால்வண்ணன், கவிஞர் மா. கொங்குவாணன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

விழாவில் வரேற்புரை நல்கினார். குறள்நெறிச் செல்வர் பாவலர் இரா. தம்பிதுரை (செயலாளர், கோவை மாவட்ட தமிழ்த்திரு. அ. ஜெகதீசன் அவர்கள்.

விழாவில் இல.செ.க. அவர்களைப் பற்றி இரா. தம்பிதுரை அவர்கள்..

டாக்டர் இல.செ.க. அவர்கள் இராசிபுரம் அருகில் உள்ள இலக்கபுரம் என்ற கிராம்ப்புறச் சூழலில் பிறந்து வளர்ந்து, பல இன்னல்களுக்கும், ஏளனங்களுக்கும் இடையே கல்வி பயின்று இளநிலை, முதுநிலை பயின்று அதில் சிறப்பிடம் பெற்றார்.

டாக்டர் இல.செ.க அவர்கள் சிறுவயதிலிருந்தே தெளிவான ஒரு குறிக்கோள் கொண்டு வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவ்வாறே தான் எண்ணிபடியே, “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமை உள்ளது. அத்திறமையைக் கண்டு வெளிக் கொணர்ந்து நல்ல பல செயல்களை திறம்பட செய்து இச்சமுதாயம் மேம்பாடு அடைய முயல வேண்டும்.

அம்முயற்சியைப் பெறவும், ஆற்றலைக் வெளிக் கொணரவும், இளைஞர்கள் தங்கள் கால கட்டங்களில் தன்னை அர்ப்பணித்து செயல்லாற்றல் புரிய வேண்டும் என்றும் வாழ்ந்து , அக்கருத்தை இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்வதில் முனைப்போடு இருந்தார்.

இல.க. செ அவர்கள் தன் இளமைக் காலத்திலிருந்தே இலக்கியம் சார்ந்த அமைப்புகளோடு தொடர்பு கொண்டு தன் தெளிவான எண்ணங்களையும், கருத்துக்களையும் இளைஞர்களுக்கு போதித்தார்.

பாவேந்தர் இளைஞர் இலக்கியப்பேரவையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு தன் தெளிவான சொல்லாற்றலை வெளிப்படுத்தினார்.

இல. க. செ அவர்கள் சமுதாயப்பற்றும் பணித்திறனும் கொண்டு விளங்கியவர். அவர் கோவை, P.N புதூர் அருகில் குடியிருந்து வாழ்ந்த போது சுந்தரம் மெடிக்கல்ஸ் அருகில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மரம் நட்டு வளர்த்தால் அங்கு பேருந்துக்காக வந்து செல்வோர் நிழலில் நின்று பயன் பெறுவார்கள் என்று ஒரு மரம் ஒன்று நட்டுவித்தார். எந்தச் செயலையும் தான் செய்து காட்டிய பின்பே அதை மற்றவர்களையும் செய்திடத் தூண்டுவார்.

சமுதாயத் தாக்கமுடைய செயல்களை இளைஞர்கள் செய்து பயன்பெற்றால் தான் நம்நாடு உயர முடியும் என்பார்.

இளைஞர்கள், சோர்வு காணாமல் உழைப்பையே மூலதனாமாகக் கொண்டு உழைத்து முன்னேற்றம் காண வேண்டும். என்றும், அதற்கு தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் போன்றவை மிகவும் அடிப்படைத் தேவை என்ற கருத்தை இளைஞர்களிடையே கொண்டு சென்றார். தனது பேச்சாலும், எழுத்தாலும் இளைஞர்களை தட்டி எழுப்பினார்.

இளைஞர்களை, குறிக்கோளை நோக்கிய தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர தவறாமல் ஒவ்வொரு மாதமும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கிராமப்புற மக்களிடையே கிராம்ம் சார்ந்த , தொழல் சார்ந்த பணிகளில் மேம்பாடும் முன்னேற்றமும் காண வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லமை பெற்ற நாடாக வளம் காணமுடியும் என்ற APJ அப்துல்கலாம் கனவை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் மனதில் விதைத்தார்.

டாக்டர் இல.செ.க. அன்றைய இளைஞர்கள் மத்தியில் “கோவை தமிழ்வாணன்” என்று புகழ்பெற்றார்.

வாழ்வில் ஏற்றம் காண ஒவ்வொரு மனிதனுக்கும் “தன்னம்பிக்கை” மிகவும் அவசியம் என்பதற்காக, தானே பல சிரமங்களுக்கு மத்தியில் “தன்னிம்பிக்கை” என்ற மாத இதழைத் தொடங்கி, தரமான எழுத்துருவாக்கம் தந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் மாற்றம் காண விரும்பினார்.

தனது வாசகர்களுக்கு தன்னம்பிக்கை மாத இதழின் மூலமாக செய்திகளைக் கொடுத்து உற்சாகமும் ஊக்கமும் கொடுப்பார்.

இல.செ.க. அவர்கள் தன் வாழ்நாளில் இளைஞர்களிடையே மேம்பாடு காணவும் கிராமப்புற, சூழ்நிலையிலிருந்து, நகரங்களில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும், “முன்னேற்றம்” ஒன்றே உயிர் மூச்சு என்ற தாரக மந்திரத்தை கூறினார்.

இல.செ.க. அவர்கள் எந்தப் பகுதியிலும் எந்த சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் (திருமணம், காதணி விழா போன்ற) அங்கு கூடி இருக்கின்ற இளைஞர்களை அழைத்து சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை எண்ணங்களைக் கொண்டும் அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான தெளிவான பாதையை வகுத்துக் கொடுத்தும் இளைஞர்களின் வழிகாட்டியாக நல்லதொரு செயல்திறன் கொண்ட மாமனிதராக விளங்கினார்.

வாழ்வில் அவர் வகுத்துக்கொண்ட இல்க்கியப் பணிகளில் சோர்வின்றி உழைத்தார். ஏறத்தாழ 72 புத்தங்கள் எழுதினார். 65 புத்தகங்கள் வெளியீடாகியுள்ளது. அத்தனையும் தரமான புத்தகங்கள் ஆகும்.

பொதுவாக புத்தகங்கள் வெளியிடுகின்ற எழுத்தாளர்கள், தன் எழுத்து, அச்சுப் பணிகளின் செலவுகளை ஈடு செய்ய (மானியத்திற்காக) அரசு நூல்நிலையங்களில் தமது நூல்களை இடம் பெற வழிவகை காண்பர்.

ஆனால் இல.செ.க. அவர் எழுத ஆரம்பித்த நாள் முதல் இறுதிக்காலம் வரையிலும் தாமாக முன்நின்று (அரசு சலுகை கோர) நூல் நிலையங்களில் சென்று விண்ணப்பிக்கவில்லை என்பதே அவரது உண்மையான உழைப்பிற்கு சான்றாகும்.

தோழர் ராம்மோகன் அவர்கள்..

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் குறிப்பிடும்படியான ஒரு எழுத்தாளர், பேச்சாளர் என்ற தன் முனைப்பை முன்னின்று முகம் காட்டியவர் இல.செ.க. அவர்கள்.

தன்னம்பிக்கை மிக்க போராளியாகவும், சமுதாயத்தில் உள்ள எல்லோரும் முன்னேற்றம் காண வேண்டும் என்ற முனைப்பும் துடிப்பும் கொண்டு விளங்கினார்.

தனது சிந்தனைகளை, எண்ணங்களை காதில் சொன்னால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று தனது படைப்பாற்றல் அனைத்தையும் எழுத்து வடிவில் கொடுத்துள்ளார்.

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர தான் சம்பாத்தித்த பொருள் செல்வத்தை இலக்கியத்திற்கும், பொது வாழ்விற்கும் செலவிட்ட பெருந்தகையாளர்.

அழகுதாசன் அவர்கள்….

இல.செ.க. அவர்கள் பெரிய இலக்கிய வாதியாக இன்றும் நாம் அவரை பாராட்டிக் கொண்டு இருக்கிறோம் என்றால் அதற்கு அவரின் திறமையான இலக்கிய எழுத்தும் பேச்சும்தான். அதை அவர் வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்கு படைத்திருக்கக் காரணம். இல.செ.க. அவர்கள் ஆரம்பப்பள்ளியில் மாணவனாக பாடம் பயிலும்போது ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாததால் இல.செ.க. அவர்களை ஆசிரியர் நீயெல்லாம் எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்றார்”.

அந்த ஆசிரியரின் வார்த்தைகளின் பாதிப்புதான் இன்று இல.செ.க. அவர்கள் நம்முன் ஓர் இலக்கியவாதியாக படைப்பாளியாக உயர்ந்து நிற்கின்றார்.

அவர் எழுதிய ஓ! அன்றில் பறவைகளே! என்ற புத்தகம் 3 லட்சம் பிரதிகள் விற்று விற்பனையில் சிகரத்தை எட்டியது. பல அயல்நாடுகள் பயணித்தார்.. அதன் மூலம் நிறைய விழிப்புணர்வை நம்மிடையயே ஏற்படுத்தினார்.

அன்பு தாசன் அவர்கள்…

இல.செ.க. என்ற இலக்கியவாதியின் அக்னிப் பிரவேசங்கள் அவரது படைப்புளே!

அவர் ஒரு முன்னணி இலக்கியவாதி…

ஒரு மனிதனுக்கு அக வளர்ச்சியும், புறவளர்ச்சியும் கொண்டு நல்ல பணியாற்றவேண்டுமானால், நல்ல நூல்கள் படிக்க வேண்டும். அதற்கு இல.செ.க.வின் நூல்கள் சிறந்த நூல்கள் ஆகும்.

சு. உதயகுமார் அவர்கள்

கண்ணதாசன் என்றாலே கவிதைகள் நினைவுக்கு வரும். இல.செ. க என்றால் ‘தன்னம்பிக்கை’ நமக்குள் வரும். காலத்தின் தேவை அறிந்து ‘தன்னம்பிக்கை’ ஆற்றும் சேவை பாராட்டுதலுக்குரியது.

ஒவ்வொரு இலக்கியவாதியும், படைப்பாளியும் தன் எண்ணங்களை விதைகளாக விதைத்து ஆலமரமாக விருட்சமடைகின்றனர். அதற்கு அவர்களின் ஓய்வறியா உழைப்புதான் காரணம்.

விழாவிலிருந்து …..
திரு. K. வெள்ளிங்கிரி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்