Home » Articles » மனதின் மொழி

 
மனதின் மொழி


யோகதா ப
Author:

சென்ற இதழ் தொடர்ச்சி..

இனிய வாசகர்களுக்கு! வாழத்துக்கள். பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாராஸ்யம் இராது என்பதை புரிந்து கொண்டு பிரச்னையைக் கண்டு பயந்து விடாது பிரச்னையை சமாளிக்கவும், தீர்வுக்கு கொண்டு வரவும் ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை நினைத்தாலே இனிக்கிறது. நன்றி. மிக்க நன்றி. நம்மால் எதையும் செய்ய முடியும். நாம்மாலேயே முடியவில்லை என்றால் வேறு யாரால் முடியும்.

இந்த மாதம் நாம் அலசி ஆராயப்போவது ‘முடிவெடுத்தல்’. முடிவெடுப்பது என்பது சில நபர்களுக்கு சாதாரணமாக இருந்தாலும் பல பேர் முடிவெடுக்கத் தெரியாமல் தவிப்பதை பார்த்திருப்போம். கேட்டிருப்போம். ஏன்? நமக்கு நாமே ஒரு வினாவைக் கேட்டுக்கொள்வோமே.

‘நான் சரியான முடிவுகளைத்தான் எடுக்கிறேனா?’

விடையை சிந்தித்து மற்றவரிடம் உங்கள் மீது அவர்கள் என்ன அபிப்ராயம் வைத்துள்ளனர் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் அனைவருமே புத்திசாலிகள் என்ற ஒரே காரணத்தினால் தான் இந்த இதழைப் படிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். இதுவரை பல இதழ்களை புத்தகங்களை படித்திருப்போம்; பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். ஆயினும், சில இடங்களில் நம்மை நாமே புரிந்து கொள்து கடினம். நாம் ஒன்றை செய்த பிறகு, ‘நானா’ அப்படி செய்தேன். ச்சே’ இப்படி செய்யலாம் என்றல்லவா? எண்ணியிருந்தேன். என்று புலம்புவோம். இதை தவிர்க்கத்தான் சில வழிகளை நாம் இப்பொழுது பார்ப்போம். இதைத்தான் சீனா புத்த் மென்சியஸ் என்பர் “மக்கள் முதலில் எதைச் செய்யக்கூடாது என்பதை உறுதியாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும், அதன் பிறகே எதையும் செய்ய ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் வீணாவோம்.

அவசரப்படாதே (Don’t be hasty)

அவசரப்படுவதால் நாம் நிறைய இழந்தாலும் நம்மால் அதை மாற்றமுடியவில்லை. ஏன்? சிந்தியுங்கள். முதலில் முடிவெடுப்பதில் அவசரப்படாமல் இழப்பு நமக்குத்தான் என்பதை ஆழப் பதியுங்கள். அடுத்து அவசரத்தில் முடிவெடுத்தால் பிறகு சில நல்ல யோசனைகள் ஏற்படும்போது நாம் ஐயோ இந்த யோசனை அப்போது வராமல் போய்விட்டதே’ என்று நினைப்போம். யோசனைகள் எங்கும் போகாது அதற்குரிய நேரத்தை நாம் சரியாக தந்தால் அது வந்து சேரும்.

கோவையிலிருந்து சென்னைக்கு இரயில் பயணம் செய்தால் எவ்வளவு நேரம் எடுக்கும்? எட்டு மணி நேரம் எடுக்கலாம். இவ்வளவு நேரம் எடுக்குமா? இல்லை இல்லை நான் அவசரமாகப் போக வேண்டுமே என்றால் என்ன செய்ய முடியும். இரயிலில் மட்டும் தான் பயணிக்க முடியும். என்ற நிர்பந்தத்தில் வேறு எதையுமே செய்ய முடியாது. எனவே, அதை அப்படியே ஏற்றாக வேண்டும்.

முடிவெடுப்பது என்ற நிலையில் நாம் இருந்தால் அதற்கென இவ்வளவு நேரம் என ஒதுக்கி சிந்தித்து (அனைத்து கோணத்திலும்) நல்ல முடிவை எடுப்போம்.

உணர்ச்சிவயப்படாதே (Don’t be impulsive)

உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுத்தாலும் பாதிப்பு நமக்குத்தான். அவசரத்தில் முடிவெடுப்பதற்கும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. (சிந்தனையின் அளவில்) அவசரப்பட்டு முடிவெடுக்கும் போது சிந்தனைக்கு இடமே இல்லை. உணர்ச்சி வயப்பட்டு முடிவெடுக்கும் போது சிந்தனை போதாமல் போய்விடும். அஜாக்கிரதையாக உணர்ச்சி முடிவை எடுத்தால் சில சமயங்களில் அது சரியான, தைரியமான முடிவாக அமையும். அனைத்து சமயங்களிலும் அமையாது. எனவே அஜாக்கிரதையான முடிவும் நம்மையே பாதிக்கும்.

அதிர்ஷ்டத்தை நம்பாதே(Don’t Erust luck)

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு சிலருக்கு மட்டுமே என்ற கருத்து தவறு. அனைவருக்குமே அதிர்ஷ்டம் உண்டு. அதன் வருகையை தெரிந்துகொண்டால் அனுபவிக்கலாம். சிலர் அதனை அலட்சிம் செய்வதும், அறியாமையில் தவறவிடுவதும், பிறகு நினைத்து நினைத்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதை கண்டால் பரிதாபமே மிஞ்சும். சில பேர் மற்றவர்களைப் பார்த்து ‘நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, கொடுத்து வைத்தவள்/வன்’ என கூறுவதை கேட்டிருப்போம். ஏன்? நாம் கூட கூறியிருப்போம். அப்போது நாம் அதிர்ஷ்டசாலி இல்லை. என்ற எண்ணம் மனதில் பதியும். அதுவே வெளிப்படும். எனவே இன்றிலிருந்து எந்த ஒரு நல்ல விஷயம் சந்தோஷமான விஷயம் நமக்கு நேர்ந்தாலும் ‘நான் அதிர்ஷ்டசாலி’ என்று மூன்று முறைக் கூறிப்பாருங்கள். தொடர்ந்து நடப்பவை அனைத்துமே நல்லதாகவே நிகழும். அதிர்ஷ்டத்தைப் பற்றி மதபோதகர் தாமஸ் புள்ளர் எழுதியுள்ளார். கிணற்றில் கால் தவறி நீ விழுந்து விட்டால் கடவுளோ, அதிர்ஷ்டமோ உன்னை காப்பாத்தும் என்று எண்ணி கொண்டிருந்தால் உனக்கு மரணம் நிச்சயம்; ‘அதிர்ஷ்டம் உன்னிடம் உன்னுள் தான் உள்ளது. நீ முயற்சி செய்கிறாயா? இல்லையா? என்று அது பார்க்கும். செய்கிறாய் என்றால் உடன் உதவும். இல்லை என்றால் கைவிட்டு விடும். எனவே நம்மால் என்ன முடியுமோ அதை நாம் சரியாக செய்ய வேண்டும். எதையும் நம்பி வாழக்கூடாது. ‘உன்னை நம்பு வெற்றி கிட்டும்’.

சார்லஸ் டிக்கன்ஸ் என்ற புத்தகத்தில் திருமிக்கவ்பர், ‘நீ எதிர்பாராமல் ஏதோ ஒரு சமயம் அதிர்ஷ்டம் உன் கதவை தட்டிவிட்டதால், அதுவே உன்னை வழிநடத்திவிடும் என்று தவறாக எண்ணி வாழ்ந்தால் உன்னை விட முட்டாள் இந்த உலகத்தில் இல்லை.’ என்கிறார்.

உணர்வு நிர்வாகம் (Control of feelings)

பல வருந்தக்க முடிவுகளை நாம் அனுபவிப்பதற்கு காரணம் – உணர்வுகளை நிர்வகிக்காததே. கோபம், வெற்று, அன்பு ஏமாற்றம், பலி வாங்கும் எண்ணம், பொறாமை, கவலை போன்ற உணர்ச்சிகளில் அகப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் இறுதியில் நிம்மதியற்ற வாழ்க்கையையே கொடுக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் விவாகரத்து செய்தல், பெரும்பாலும் அவசரப்பட்டு, உணர்ச்சி வயப்பட்டு எடுக்கப்படும் முடிவு விவாகரத்து. சரியாக உணர்ச்சிகளை நிர்வாகம் செய்தால், பல நன்மைகளை நாம் நிச்சயம் பெறுவோம். இதற்கு, சரியான மருந்து தியானம். தற்சோதனை, இனி தினமும் இரவு 15 நிமிடம் நமக்காக செலவு செய்யப்போகிறோம். இந்த 15 நிமிடம் நம்மைப் பற்றிய சிந்தனை மட்டும் அவசியம். நாம் காலை கண் விழித்ததிலிருந்து என்னவெல்லாம் நடந்ததோ அதை நினைவு கூர்ந்து பார்ப்போம். அதில் எந்த சூழ்நிலையில் உணர்ச்சிவயப்பட்டோம், அவரசப்பட்டோம் (அ) சிந்தித்து செயல்பட்டோம் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். எப்பொழுதுமே கெட்டதை மட்டும் நாம் ஆராயக்கூடாது. கூடவே நல்லதையும் ஆராய்ந்தால் மட்டுமே தெளிவான சரியான நாம் விரும்பும் முடிவுகளைப் பெறமுடியும்.
-தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்