Home » Articles » சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!

 
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!


செலின் சி.ஆர்
Author:

தொழில் உடன்பாடுகள் செய்து கொள்ளும் போது, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். சென்ற இதழில் நான் சொன்னதுபோல் பொறுப்பற்ற, கடமையுணர்வில்லாத, விளையாட்டுத் தனமானவர்களை நம்பி களத்தில் இறங்கினீர்கள் என்றால் கடைசியில் பாதிக்கபடப்போவது நீங்கள்தான்.

உடனே நடந்துவிட வேண்டுமென்றோ எளிதில் காரியம் கைகூடி விடவேண்டுமென்றோ கண்மூடித்தனமாக உங்களது தொழில் கூட்டாளிகளைத் ( Business Partners) தேர்ந்தெடுத்து விடாதீர்கள். ஒருவர் எவ்வளவு நம்பிக்கைக்குரியவர், எந்தளவிற்கு உறுதியான மனநிலைப்பாடு (Mental Stability) கொண்டவர், எல்லாவற்றிற்கும் மேலாக எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதன் அடிப்படையில்தான் நீங்கள் தொழில்முறை நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களைச் சுற்றியிருப்பவ்கள், உங்களுடன் தொழில்முறை இருப்பவர்கள் அதிக பணபலத்துடன், அறிவுத்திறனுடன், சாமர்த்தியத்துடனெல்லாம் இருக்க வேண்டியது இரண்டாம் பட்சம்தான். நல்ல மனிதர்களாக இருக்க வேண்டியது தான் முக்கியம். ஏனெனில், நல்ல மனிதர்கள் தான் வெற்றியாளர்களாக இருக்க முடியும். அவர்களால் தான் வெற்றியாளர்களை உருவாக்க முடியும்.

தரமற்ற மனிதர்களுடன் நாம் வைத்துக்கொள்ளும் தொழில்முறை நட்பு காலவிரயம், பணவிரயம் இவற்றை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி அவர்களது எதிர்மறை குணங்கள், எண்ணங்கள், உங்களுக்குள்ளும் எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும். தேவையற்ற மனச்சஞ்சலங்களை, தொழில் சார்ந்த தர்ம நியாயங்களை கலைத்துப்போட்டு உங்களை வெற்றிப் பாதையிலிருந்து விலக்கிவிடும்.

So,.. சக்ஸ்ஸ் உங்கள் சாய்ஸாக இருக்க வேண்டுமென்றால், சரியான நபர்களும், நண்பர்களும் உங்கள் சாய்ஸாக இருக்க வேண்டும்.

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று பதில் சொல்லுங்கள்.

1. ஒரு நபரைப் பார்த்தவுடன் முடிவெடுக்காமல, அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ட பிறகு அவருடன் தொழில்முறை உறவு வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுப்பீர்களா?

ஆம் இல்லை

2. நீங்கள் Business Contact வைத்துக் கொண்டுள்ள நபர் உங்களுக்கு நிறைய ஆலோசனைகள் சொல்வாரா?

ஆம் இல்லை

3. அவரது சமூகம் சார்ந்த ஆசைகள் விருப்பங்களைப்பற்றி தெரிந்து வைத்துள்ளீர்களா?

ஆம் இல்லை.

4. உங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறாரா?

ஆம் இல்லை

5. அவரை உங்கள் நண்பராகப் பாவிக்கத் தோன்றுகிறதா?

ஆம் இல்லை.

6. பிறரிடம் உங்களைப் பற்றி நல்ல விதமாகப் பேசுகிறாரா?

ஆம் இல்லை.

7. உங்களது தொலைபேசி அழைப்பை அடிக்கடி வேண்டுமென்றே துண்டிக்கிறார் என உணர்கிறீர்களா?

ஆம் இல்லை.

8. முடிவெடுக்கத் தாமதமானால் அதற்கான காரணத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த முயல்கிறாரா?

ஆம் இல்லை.

9. உங்களுடன் Business Contact வைத்துக் கொள்வதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று வார்த்தைகளிலோ, செயல் மூலமோ வெளிப்படுத்துகிறாரா?

ஆம் இல்லை

10, அவருடன் பேச வேண்டும் என்று நினைக்கும் உங்கள் மனதிற்குள் மகிழ்ச்சி பூக்கிறதா?

ஆம் இல்லை.

OK – Good டிக் செய்து முடித்து விட்டீகளா 7 கேள்விக்கு மட்டும் ‘ஆம்’ என்ற பதிலுக்கு மதிப்பெண்ணும் ‘இல்லை என்ற பதிலுக்கு 1 ம் கொடுக்கவும். மற்ற அனைத்து கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற பதில் சொல்லியிருந்தால் தலா 1 மதிப்பெண்ணும், ‘இல்லை’ என்ற பதிலுக்கு 0 மதிப்பெண்ணும் கொடுக்கவும்.

உங்களது மொத்த மதிப்பெண்கள் : 0-3

ம்ஹூம். உங்கள் Business partner “total waste”. இவரை நம்பி களத்திலிறங்கினீர்கள் என்றால் உங்கள் கதி ஹோகயாதான். இவரது குணங்களை மாற்ற முயற்சிப்பதை விட, டாடா பைபை சொல்லிவிட்டு விலகிக்கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல நிகழ்காலத்திற்கும் நல்லது.

4-6;

ஓரளவு சரியான நபருடன்தான் Business செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது கருத்துக்களை, திட்டங்களை மனம் விட்டுப் பேசி, அவரது அபிப்ராயங்களைக் கேட்டு உங்களது தொழிலையும், அவருடனான தொழில்முறை உறவையும், மேம்படுத்திக் கொள்ளலாம்.

7-10

உங்களுக்குள் Business contact மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகும். மிகமிக சரியான நபருடன்தான் பிசினஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள். தொழிலைக் கடந்து நல்ல ஆத்மார்த்தமான நட்பு, உறவு உங்களுக்குள்ளிருக்கும். இந்த உறவு தொடர்ந்து பல வெற்றிகளை வாரிக் குவிக்கும், So, அந்த நபரை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகக் கருதுங்கள்.

ஏனெனில் தொழில், பணம் எல்லாம் ஒரு நிலையில் லௌகீகமான, அறிவுப்பூர்வமான (logic – oriened) விஷயம் என்பதைக் கடந்து உணர்வோடு (Emotional) கலந்த விஷயங்களாகிவிடுவது சரிதானே?
(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்