Home » Articles » உழைப்பே உயர்வு

 
உழைப்பே உயர்வு


மெர்வின்
Author:

ஓவியர்கள் எப்படி எல்லாம் தங்கள் லட்சியங்களை வளர்த்துக் கொண்டார்கள், எப்படியெல்லாம் கஷ்டங்களை மேற்கொண்டார்கள், எவ்விதம் முயற்சி செய்து முன்னேறினார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டால்-

நாமும் அவர்களைப் போல தயார் செய்து கொண்டு வெற்றி பெற முடியும். மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு ஒரு பாடமாக அமையும்.

லியோனார்டா டாவின்ஸ இளமைக் காலத்தில் ஓவியத்திலும் அறிவியலிலும் கவன்த்தைச் செலுத்தினார். ஓவியக்கூடத்தில் பகுதிநேர வேலை முடிந்ததும் வான கணித தாவர சாஸ்திரம் கற்பார்.

அவருடைய எண்ணம் முழுவதும் கற்பதிலேயே இருந்தது. அதன் பயன் அற்புமான ஓவியத்தை வரைந்தார்.

“கடைசி இரவு உணவு” மோனலிசா போன்ற உயிர் ஓவியங்களைப் படைத்தார். இவருக்கு இணையாகப் போற்றத்தக்கவர் மைக்கேல் ஏஞ்சலோ.

இவர் பள்ளியில் படிக்கும்பொழுதே சுவர்களில் கிறுக்கத் தொடங்கினார். எப்படியும் சிற்பியாகிவிட வேண்டும் என்ற ஆசை அவருடைய உள்ளத்தில் உதயமாகிறது.

பதிமூன்றாவது வயதிலே ஓவியக் கூடத்திலே சேர்ந்து கற்க ஆரம்பித்தார். மனித உடற்கூறுகளை நுட்பமாக வரைய ஆர்வம் கொண்டார்.

மருத்துவமனையில் பிணங்களை அறுத்துச் சோதனை செய்யும்போது கூடவே இருந்து மனித உடற்கூறுகளை கவனித்தார்.

சலவைக் கல்லில் சிற்பத்தைச் செதுக்க ஆர்ம்பித்தார். வேலையை தொடங்கிவிட்டால் அவர் முற்றிலும் மாறுபட மனிதனாகி விடுவார். நண்பர்களைப் பார்க்க வெளியே செல்லமாட்டார். மிகவும் சோர்ந்து போன பிறகு உடைகளைக்கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் படுத்து விடுவார்.

இரவும் பகலும் உழைப்பில் ஈடுபட்டதனால் திருமணத்பைப் பற்றிக்கூட அவருக்கு அக்கறை இல்லாமல் போய் விட்டது. அவருடைய நேரம் முழுவதும் சிலையை செதுக்குவதிலேயே செலவிட்டார். அதன் பயன் உலகம் இருக்கும் வரை அவருடைய சிலைகள் சிங்காரத்தன்மை யுடன் இருக்கும். அவரே ஒரு இடத்தில் இவ்விதம் குறிப்பிடுகிறார்.

“எனக்கு இந்தக்கலையே மனைவி. இந்த மனைவி எனக்கு எப்போதும் ஊட்டி விடுகிறாள். என் கலைப் படைப்புகள் எல்லாம் என் குழந்தைகள் தாம். இவையே காலம் எல்லாம் என் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்” எவ்வளவு தீர்க்க தரிசனமான வார்த்தைகள்.

உருவப்படங்கள் வரைவதில் மிகவும் பிரிசித்தி பெற்றவர் ஓவிய மேதை ஹால்ஸ் பொருளாதார அமைப்பில் இவர மிகவும் பின் தங்கி இருந்தார். வறுமை வாட்டி எடுத்த போதிலும் ஓவியம் தீட்டுவதை மட்டும் என்றுமே நிறுத்த மாட்டார்.

தன்னுடைய சாதனையாக முன்னூறு ஓவியங்களை வரைந்தார். அத்தனை ஓவியங்களே சாட்சி. வெறும் கலை உணர்வை மட்டும் ஓவியம் பிரதிபலிப்பதில்லை.

மக்களின் சமுதாய விழிப்புண்ர்ச்சியையும் அது தூண்டி விட வேண்டும் என்ற எண்ணம் உடையவர் லூயிஸ் டேவிட் அதனால்தான் அவர் புரட்சி ஓவியராக விளங்குகிறார்.

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது அது எங்கே போக வேண்டும் அதிலே மனிதனின் கடமை என்ன என்பதை எல்லாம் அவர் ஓவியமாகத் தீட்டி மக்களை விழிப்படைய்ச் செய்தார்.

பிரெஞ்சு புரட்சியின் போது நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை எல்லாம் ஓவியங்களாகத் தீட்டினார்.

நெப்போலியன் ஓவியம் இன்றும் கூட வியந்து பாராட்டும் வகையில் உள்ளது.

ஜேம்ஸ் ஆடுபன் காடுகளில் வாழும் பறவைகளையும் விலங்குகளையும் கூர்ந்து கவனித்து வரைவதில் மாமன்னர். காடுகளில் அலைந்து இயற்கைக் கண்ணோட்டத்தை எண்ணத்தில் வடிப்பதிலே விற்பன்னர்.

இவர் வரைந்த நூற்றுக்காணக்கான ஓவியங்களை பெட்டிக்குள் வைத்திருந்தார்.

பெட்டிக்குள் எலிகள் புகுந்து அவ்வளவு படங்களையும் கடித்துக் குதறி நாசமாக்கிவிட்டன. ஆனாலும் அவர் நிலை குலைந்து போய்விடவில்லை. மறுபடியும் முயற்சி செய்து அத்தனை ஓவியங்களையும் வரைந்து முடித்தார். பொறுமையுடன் பணியாற்றி படத்தை வரைந்தார்.

துயரங்களைக் கண்டு என்றுமே துவண்டு போய்விடக்கூடாது என்பதற்கு இவருடைய வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு.

உயர்நிலைப்பள்ளியைக் கூட எட்டிப் பார்க்காத ஓவியர் பிற்காலத்தில் ஓவியம் கற்று பத்து லட்சம் டாலர்களைச் சம்பாதித்தார். அவர்தான் அமெரிக்க ஓவியர் நார்மன் ராக்வெல்.

வெறும் கோடுகள் சில கிறுக்கல்கள் ஆணா பெண்ணா என்று காட்டக்கூடிய சில அடையாளங்கள், வண்ணக் கலவைகள் இவை சேர்ந்த மொத்த தோற்றம் பிக்காளாவின் நவீன ஓவியம்.

மாடர்ன் ஆர்ட்டின் தந்தை இவர். இவருடைய ஓவியத்திற்கு கடும் எதிர்ப்பும் ஏளனமும் தோன்றியது. ஆனாலும் தன்னுடைய ஓவிய தத்துவத்தைச் சூழ்ந்து இருக்கும் சிறப்புத் தன்மையை விடவே இல்லை.

இவருடைய ஓவியம் இந்த நூற்றாண்டிலேயே அதிக அளவுக்கு ஏலம் போனது. வாழ்க்கையில் செல்வத்தையும், புகழையும் பெற்றிருக்கும் இவர் அற்புதமான கருத்தை அழகுடன் விவரிக்கிறார்.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சாதனை புரிவதற்கு வேண்டிய சக்தியை ஒரே வழியில் செலவிட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி கிடைக்கும்.

நான் என் சக்தி முழுவதையும் ஒரே வழியில் பயன்படுத்தினேன். அதனால் பணத்தையும், புகழையும் பெற்றேன் என்கிறார். நாமும் இவருடைய வழியைப் பின்பற்றினால் வளமுடன் வாழ முடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்