Home » Articles » சிந்தனை செய் மனமே

 
சிந்தனை செய் மனமே


திருமுருகன்
Author:

கிராமத்துப் பாதைகளில் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது சத்தியநாராயணன் பயணம் செய்து கொண்டிருந்த ஜீப். நண்பன் பாலாஜியுடன் வியாபார நிமித்தமாக மைசூர் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தான். கிராமப்புற பாதையாக இருந்தாலும் நெடுஞ்சாலையாக இருந்ததால் நன்றாக பராமரித்திருந்தார்கள். பாலாஜி ஜீப்பை ஒரே சீரான வேகத்தில் அழகாக ஓட்டிக் கொண்டிருந்தான். இருபுறங்களிலும் விவசாய பூமிகள் பச்சை வண்ணம் உடுத்தி அந்த பிரதேசத்தின் வளமையை எடுத்துக்காட்டியது.

ஆள் அரவமற்றசாலை, பத்து நிமிடத்திற்குகொரு வாகனம் தான் எதிர்பட்டது. ஒரு இடத்தில் சாலையில் இருபுறமும் காய்கறிகளை கையில் வைத்து நான்கைந்து வாலிபர்கள் வாங்கிக் கொள்ளுமாறு அழைத்தார்கள். அழைத்தவர்கள அந்த பிரதேசத்து சாலையோர விவசாயிகள். நிலத்தில் இருந்து அப்பொழுதே பறித்து வந்த புதிய காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. வாகனங்களும் குறைவு. யாருக்கும் நின்று விலை கேட்கக்கூட நேரமில்லாததால் அதிகம் பொருட்படுத்தவாரில்லை.

“பாலாஜி நிறுத்து விலை கேட்போம்” என்றான் சத்யநாராயணன்.

‘முட்டைக்கோஸ் என்ன விலைப்பா” என்றான் பாலாஜி.

“எரடு ஹத்து ரூபா” கன்னடத்தில் பதிலளித்தான் விற்பவன். திகைத்துப் போனார்கள் இருவரும். நகரத்தில் கிலோ எட்டு அல்லது பத்து ரூபாய்க்கு விற்கிறது. இங்கே சுத்தமான இரண்டு கிலோ எடையுள்ள முட்டைகோஸ் ஐந்து ரூபாய் தானா!

பாலாஜி தனக்கு தெரிந்த கொஞ்சம் கன்னடத்தில் விலை பேசினான். மூன்று முட்டைகோஸ் பத்து ரூபாய்க்கு தருதாக இருந்தால் ஐம்பது ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக சொன்னான். விற்பவனுக்கு கட்டுப்படியாகாது என்று அவன் முகமே சொன்னது. மாலை நெருங்குவதாலும், வாங்குவதற்கு ஆள் இல்லாததாலும் பேரம் படிந்தது.

பதினைந்து முட்டைக்கோஸ் ஐம்பது ரூபாய்க்கு கைமாறியது.

ஜீப் புறப்பட்டது. பாலாஜிக்கு ஏக சந்தோஷம்.

“இப்படி ஏதாவது சாகசம் பன்னினாத் தான் நம்ம சாமர்த்தியம் வீட்டில் இருப்பவர்களுக்கு புரியும் கோவைக்கு கொண்டு போய் எல்லோருக்கும் ஒன்றாய் பெருமையா கொடுக்கப்போகிறேன். விலையை கேட்டு எல்லோரும் ஆச்சரியப்பட போகிறார்கள்” என்றான் பாலாஜி.

“இதில் சாமர்த்தியமென்ன இருக்கிறது. அவனுடைய பலவீனம் இங்கு வாங்குவதற்கு ஆளில்லை. இதை நகரத்தில் கொண்டுபோய் அதிக விலைக்கு விற்க அவனுக்கு வசதியில்லை. இதில் மேலும் விலையை குறைத்து கேட்டு, வாங்கி அவனை மேலும் நஷ்டத்துக்கு உள்ளாக்கியிருக்கிறோம்” என்றான் சத்தியநாராயணன்.

“என்னடா சொல்ற” என்றான் பாலாஜி.

“ஆமாம் இந்த பதினைந்து முட்டைக்கோஸ்கள் ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடை உள்ளது. சின்ன தூசு கூட இல்லாமல் சுத்தமாக விளைவிக்க அவன் எவ்வளவு சிரம்ப்பட்டிருக்க வேண்டும். அதை ஐம்பது ரூபாய்க்கு வாங்கிச்செல்கிறோம். ஐம்பதுரூபாய்க்கு இன்று என்ன கிடைக்கும். ஒரு குடும்பம் இரண்டு வேளை திருப்தியாக சாப்பிடக்கூட முடியாது. விளைச்சல் இருக்கும் நேரங்களிலேயே இப்படி என்றால் விளைச்சல் இல்லாத நேரங்களில் அவன் நிலைமையை யோசித்துப்பார். இந்த மாதிரி விலை குறைத்து கொடுக்கும்போது, மேலும் விலை குறைவாக கேட்டு பேரம் பேசாமல் இருப்பது நல்லது. ஒரு லிட்டர் தண்ணீர் பத்து பத்துரூபாய்க்கு வாங்கி பெரு முதலாளிகள் வசதியுட் வாழ வழி செய்கிறோம்”.

“இந்த மாதிரி வசதி குறைவானர்களிடம் பேரம் பேசி அவனை மேலும் நஷ்டப்படுத்தி நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இதனால் தான் இவர்கள் இன்னும் அரை வயிறு கஞ்சியே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

சத்யநாராயணனின் பேச்சின் நியாயம் தீயாய் சுட வாய்மூடி மௌனம் ஆனான் பாலாஜி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்