Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


பாலசுப்ரமணியம்
Author:

சுதந்திரம் பெற்ற பிறகு நம் இந்தியாவில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று எண்ணுகிறீர்களா?
-அரங்கநாயகி, S.M.C. பாளையம்

இல்லை… ஆனால் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய பெண்களின் நிலைப்பாட்டினை கடந்த 100-75-50-25 ஆண்டுகள் பின்னோக்கிப் பாருங்கள். பெண்களின் சுதந்திரத்தின் வளர்ச்சி தெரியும். இனிவரும் 25 ஆண்டுகளில் இன்னும் மேலோங்கிய வளர்ச்சி தெரியும்.

புரட்சி- வளர்ச்சி என்பதெல்லாம் பரிணாமங்கள் அதற்கு கால அவகாசம் தேவை. அவசரப்படாதீர்கள்.

நட்பு -உறவு வித்தியாசப்படுத்துங்கள்.
-பரமேஸ்வரன், சேலம்

நட்பு – சுகமளிக்கும் உறவு. எல்லைக்குட்படாதது. எதிர்பார்ப்புகள் அடங்கியது. எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களைத் தரும்போது நட்புகள் பல தடுமாறி விடும். ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களையும் நட்புகளும் – குறிஞ்சிமலர் போன்று இருக்கத்தான் செய்கின்றன.

உறவு: நகம் போன்றது. கூடவே உள்ளது தவிர்க்க இயலாதது. ஆனால் அளவோடு இருக்க வேண்டும்.

நகங்களின் வளர்ச்சி விரலை மிஞ்சும் போது விரல்களின் செயல்பாடுகள் முடங்கிவிடும். துணையாக இருக்க வேண்டியது தொல்லையாக மாறி விடும்.

தன்னம்பிக்கை, ஆன்மீகம் இரண்டும் இணைவதால் ஏற்படும் பலன்கள், பிரிவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன?
-விக்னேஷ், தாராபுரம்.

உலகத்திற்கே வழிகாட்டும் ஆன்மீகத்தின் உச்சத்தை தொட்டவர்கள் வாழ்ந்த தமிழ் மண் இது. இமயம் முதல் குமரி வரை மட்டுமல்ல. 11-ம் நூற்றாண்டில் கடல் கடந்து படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இனம் இது. ஆனால் இன்று நாடற்ற இனமாக, பக்கத்து நாட்டில் பரிதவிக்கும் தமிழனுக்கு கை கொடுத்து காப்பாற்ற வக்கற்ற இனமாக சொந்த மொழிக்காக தன் இனத்திடமே கையேந்தும் இனமாக அயல்நாடுகளில் அறிவையும் – உழைப்பையும் விற்று வாழ்க்கையைத் தேடும் இனமாக அல்லல்படுகிறோம்.

எங்கே தவறவிட்டோம்! எப்படி தவற விட்டோம். ஆன்மீகம் நல்லவர்களை உருவாக்கியது. வல்லவர்களை உருவாக்கவில்லை. ஆன்மீகத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள் வரலாற்றில் மட்டுமே வாழ்கிறார்கள்.

தன்னம்பிக்கையால் வல்லவர்களை உருவாக்கலாம் – நல்லவர்களை உருவாக்க முடியவில்லை. வாழ்வியல் முன்னேற்றம் அடைந்த போதிலும் “தவறு செய்யும் அஞ்சாமை மிகுந்து விட்டது”.

இறை நம்பிக்கை – தனிமனிதனுடைய தன்னம்பிக்கை தடையாக இருந்து விடக்கூடாது. இதனால் இயலாமை வளர்ந்துவிடும். வளர்ச்சிகள் தேக்கமடையும் இருப்பதை இழக்க நேரிடும்.

தன்னம்பிக்கை இறை நம்பிக்கைக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது. இதனால் தவறு செய்யும் அஞ்சாமையும் சுயநலப் போக்கும் மறைந்துவிடும். போட்டிப் பொறாமைகள் மிகுந்து மனித நேயம் கெட்டுவிடும். ஆன்மீகம் (இறைநம்பிக்கை) – நல்லவர்களை உருவாக்கட்டும். தன்னம்பிக்கை – வல்லவர்களை உருவாக்கட்டும்.

“அறிவியல் (தன்னம்பிக்கை) இல்லாத ஆன்மீகம் முடவனுக்குச் சமம்.

ஆன்மீகம் இல்லாத அறிவியல் (தன்னம்பிக்கை) குருடனுக்குச் சமம்.

அமெரிக்க தன் முனைப்பு அறிஞர் அந்தோணி ராபின்ஸ் அவர்களின் கூற்று தான் இதற்கு சரியான பதிலாகும்.

இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கைதான் மனித குல மேம்பாட்டுக்கு வகை செய்யும்.

மனதின் இருப்பிடம் எது?

உயிர் உடலில எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்து விட்டால் ‘மனிதின் இருப்பிடம் வெளிச்சமாகிவிடும்.

விட்டுக் கொடுப்பதால் தன்மானத்தை இழக்கலாமா?
-சம்பத்குமார், குனியமுத்தூர்.

தன்னை எட்டி உதைத்த சிறைக்காவலாளிக்கு விடுதலையாகி போகும்போதுத் தான் தைத்த செருப்பை பரிசாக அளித்த காந்தியடிகளின் செயல் தன்மானத்தை இழந்ததாகுமா?

பிரச்சாரத்தின் போது தந்தை பெரியாரை அவமதிக்கும் நோக்கில் அவர் மீது செருப்பு வீசப்பட்டபோது, இன்னொரு செருப்பையும் வீசட்டும் என்று காத்திருந்து எடுத்துச் சென்றாராம். ஒற்றைச் செருப்பால் யாருக்கும் பயனில்லை’ என்றாராம். இது தன்மானத்தை இழந்த செயலாகுமா? பெரிய இலட்சியங்களுக்காக வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட மாபெரும் மனிதர்கள் சிறிய விஷயங்களில் தனது தன்மானத்தை முன்நிறுத்திக் கொள்ளமாட்டார்கள்.

நாகரீக முன்னேற்றத்திற்காக கலாச்சார சீரழிவினை ஏற்றுக்கொள்ளலாமா?
-மோகன், பெங்களூர்

எது கலாச்சாரம்! எந்த நூற்றாண்டின் வாழ்க்கை முறையை கலாச்சாரம் என்கிறீர்கள்!

உங்கள் பெற்றோ போன்றா நீங்கள் வாழுகிறீர்கள்!

உங்கள் பிள்ளைகள், பேரப்பபிள்ளைகள் உங்கள் வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களா?

ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்திய தலைமுறையின் கலாச்சாரத்தை சீரழித்துவிட்டது என்று கூறலாமா?

பரிணாம வளர்ச்சியில் உடல் வளர்ச்சி போன்று கலாச்சார மாற்றம் தவிர்க்க முடியாது.

உலகம் (அ) சமுதாய மாற்றத்திற்கு அடிப்படை எது?

தேவைகள் தான் அனைத்து மாற்றங்களுக்கும் தாயாக இருக்கிறது.
“Necessity is the mother of all inventions”

வெற்றி என்பது மனதைப் பொருத்ததா (அ) புறச்சூழ்நிலைகளைப் பொருத்ததா?
-நாராயணசாமி, சென்னை.

ஒவ்வொரு ஊரிலும் வசதிபடைத்தோர் நடுத்தர, சாமானியர், வறுமைக்கோட்டில் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?

ஒரே ஊரில் வாழுகின்றவர்கள் மத்தியில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு. புறச்சூழல் காரணமாக இருந்தால் இந்த உயர்வு- தாழ்வு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும்.

வெற்றி வெளியில் இல்லை. மனதில் தான் இருக்கிறது.

மனத்திற்கு சக்தியளிக்கக்கூடிய தன்னம்பிக்கை மந்திரம் ஒன்று கூறுங்கள்.

இலக்கை நோக்கிய ‘அயராத உழைப்பு – சளைக்காத மனம்’ – வெற்றி நிச்சயம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்