Home » Articles » இதுதான் வாழ்க்கை

 
இதுதான் வாழ்க்கை


admin
Author:

வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை வெறிநாய் கடித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்ன செய்வது ஏது செய்வதென்று தெரியாமல் வைத்தியரிடம் அவரை அழைத்துச் சென்றனர்.

வைத்தியரோ பழுக்கக் காய்ச்சிய இரும்பால் கடிபட்ட இடத்தில் சூடு வைத்தார். கடிபட்டவர் வலி தாங்க முடியாமல் ‘ஓ’வென்று அலறினார். இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு ஒன்பது வயது சிறுவனும் இருந்தான். அந்தக் கொடூரச் சம்பவம் ஒரு அச்சிறுவனின் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது.

ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். ஒருநாள் அவன் சேர்த்து வைத்திருந்த பொற்காசுகள் எல்லாம் திருடு போய்விட்டது. அவன் அழுது புலம்பிக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில் துறவி அங்கே வந்தார். வந்தவர், ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.

கருமி திருடு போன பொற்காசுகளைப் பற்றி சொன்னான். அந்தக் கருமியால் யாருக்கும் பயனில்லை. என்பதை உணர்ந்த துறவி பொற்காசுகள் திருடு போகாமல் இருந்தால் என்ன செய்வாய்? கேட்டார் துறவி.

என்ன செய்வேன்…? மேலும மேலும் பொற்காசுகளைச் சேர்ப்பேன்.. சொன்னான், கருமி.

அருகில் கிடந்த செங்கல்லைக காட்டி, உன்னைப் பொறுத்தவரையில் நீ சேர்த்து வைத்துப் பொற்காசுகளால் மற்றவர்களுக்கும், உனக்கும் பயனில்லை. இந்தக் கல்லை நீ சேர்த்து வைத்த பொற்காசுகள் என்று நினைத்துக் கொள். உன் கவலை கரைந்து போகும். யாருக்கும் பயன்படாத பொருள் இருந்தால் என்ன, திருடு போனால்தான் என்ன? என்று சொல்லிவிட்டு, அவன் முகத்தைக்கூட பார்க்காமல் அங்கிருந்து போனார்.

ஒரு வேளை உணவிற்கு வழியில்லை. மனைவியையும், தாயாரையும் காப்பாற்றவேண்டிய நிலை. என்றாலும் அவர் எழுதிக் கொண்டே இருந்தார். அவருடைய எழுத்துக்களை எவரும் கவனிக்கவில்லை. புத்தகம் வெளியிடுவோர் அவருடைய எழுத்துக்களை குப்பையெனத் தள்ளினர்.

வறுமையுடன் போராடினாலும் முயற்சியை விட்டுவிடாமல் எழுதிக் கொண்டே இருந்தார். தன்னுடைய எழுத்துக்கள் என்றாவது ஒருநாள் மதிப்புடையதாகும் என்று நம்பினார். நம்பிக்கையின் மூலமே காலத்தைக் கடத்தினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. ஆம்! அவருடைய படைப்பு அனைத்துலகப் புகழ் பெற்று பணமும், புகழும் அவரைத் தேடி ஓடி வந்தன. அந்த நம்பிக்கைக்குரியவர் எமிலிஜோலா அவர்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்