Home » Articles » மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா

 
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா


admin
Author:

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு விழா 20.08.2007 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ்.இராஜராஜன் வரவேற்றார். செயலர் கவிஞர் இரா. இரவி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் திருச்சி. சந்தர் முன்னிலை உரையாற்றினார். ஜோதி மகாலிங்கம், தினேஷ் வாழ்த்துரை வழங்கினார். தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் சேவியர் ஒயிட், ஹெமலதா பாலசுப்பிரமணியன், யோகா ஆசிரியர் கணேஷ் சந்தர் தன்னம்பிக்கை சிற்றுரையாற்றினார்கள். கவிஞர்கள் அபுதாகீர், இரா. கல்யாண சுந்தரம், பாண்டியராஜன், சமுத்திர மணாளன், சு.இலக்குமண சுவாமி, இரா. கணேசன், ஆ. திருநாவுக்கரசன், வேல்பாண்டியன், இராம. இராமனாதன், பொறியாளர் திவாகர், காவலர் இளையராஜா, அசோக்குமார் மன்னார் இராமசாமி மற்றும் பெண் கவிஞர்கள் மஞ்சுளா, மலர்மகள், லலிதா சியாம், கலைத் தாமரை, சாந்தகுமாரி, உஷா மகேஸ்வரி, நீத்தி, உமா மகேஸ்வரி ஆகியோர் “முன்னேற்றத்தின் வித்து தன்னம்பிக்கை” என்ற தலைப்பில் கவிதை படித்தனர்.

தன்னம்பிக்கை ஆசிரியர் ந. மாசிலாமணி “தன்னம்பிக்கையும் – மனோசக்தியும்” என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிற்சி அளித்தார். “ஒவ்வொரு மனிதனின் மனோ சக்தியைவிட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை” என்றார். பிடிக்காத சோகமான விஷயங்களை நினைத்துப் பார்க்காதீர்கள். மறந்துவிடுங்கள். தன்னம்பிக்கை என்ற ஒரு குடம் பாலில், அவநம்பிக்கை என்ற ஒரு துளி விஷம் கலந்தாலும் வீணாகி விடும். அவநம்பிக்கைக்கு இடம தராதீர்கள். மனம் பிரபஞ்சத்தை விட பிரம்மாண்டமானது. இப்படி பல விஷயங்களைச சொல்லி சிறந்த முறையில் பயிற்சி தந்தார். சிவகாசி கவிஞர் க.செ. கட்டிமுத்து. பயிற்சியின் நன்மை குறித்துப் பேசினார். தன்னம்பிக்கை நிர்வாகி A. மாணிக்கம் நன்றி கூறினார்.
-கவிஞர் இரா. இரவி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்