Home » Articles » மனதின் மொழி

 
மனதின் மொழி


யோகதா ப
Author:

இனிய நண்பர்களே! வாழ்த்துகள்! பாரட்டுக்கள்! மனதின் மொழியை அறிய நீங்கள் உங்களைத் தயார் படுத்திய விதம் மிகவும் அருமை. மாற்றங்கள் தொடரட்டும்! வாழ்க்கையின் மதிப்பு கூடட்டும். சரி, நாம் நம் தலைப்பிற்கு வருவோம். புதிய மனிதர்களாக உருவெடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் சிறிய வினா. கடந்த கால இதழில் மனதின் மொழி கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட சின்னம் எது?

பதில்

இந்தச் சின்னம் தான். சரி இந்த சின்னம் எதை குறிக்கிறது. மனதையா? இதயத்தையா? மேலும் இதைக் காதலின் சின்னம் என்று கூறுகிறார்கள் அல்லவா? சரி எதுவாகவும் இருக்கட்டும். ஆனால், நம் அனைருக்குமே இருதயம் இருப்பது ஒரே வடிவத்தில், ஒரே நிறத்தில், ஒரே அளவில் சரி தானே! இதயத்தின் வேலையானது இரத்தத்தை சுத்தப்படுத்தி நம் உடலின் எல்லா இடங்களுக்கும் அனுப்புவது. இதில் ஏதேனும் சந்தேகம் இருகிறதா? இல்லை. இப்பொழுது இதயம் தன் வேலையைச் சிறிது நேரம் தள்ளி வைக்கலாமே என்று முடிவு செய்தால் என்ன ஆகும். விபரீதம் ஏற்படும். ஆனால் நாமோ மிகவும் பொறுப்பற்றவர்களாகச் சில சமயம் செயல்படுகிறோம். நமக்குள் இருக்கும் இதயம் சரியாக வேலை செய்கிறதே ஏன் நம்மால் செய்ய முடியவில்லை? சிந்தியுங்கள் நண்பர்களே!

அதற்குச் சில வழிகளைப் பார்ப்போமா! என்னால் இது முடியுமா? என்ற எண்ணம தோன்றி விட்டால் இதைத் தொடர்ந்து ஏற்படும் எண்ணங்கள் அனைத்துமே நம்மை முன்னேறவிடாது. எப்படி இதிலிருந்து விடுபடுவது என்பதைப் பார்ப்போம்.

இப்பொழுது நாம் நம்மை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.

முதலில்

1. என்னால் முடியாது என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பவரா நீங்கள்?

2. திரும்பத் திரும்ப அந்த வார்த்தையைக் கூறுவதால் உங்கள் ஆழ்மனதின் ஓர் அங்கமாக அது மாறிவிட்டதா?

ஆம் என்றால் கட்டாயம் நீங்கள் உங்களிடம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், சிறிய பிரச்னை கூடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவு அமைதியின்மை. பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். எனவே நாம்தான் அதை எப்படி அணுக வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சனைகள் நம்மைச் சூழும் முன்பே நாம் நம்மைத் தயார் செய்து பிரச்சனையே வராமல் விரட்டி விட வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது ஏதேனும் ஒரு பிரச்சனை நேர்ந்தால் முதலில்

1. நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை என்ன என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. அது எங்கிருந்து ஆரம்பித்தது?

3. எந்தச் சூழ்நிலை (அ) சம்பவம் அதற்குக் காரணமானது.

4. அச்சமயத்தில் அச் சூழ்நிலையின் முக்கியமான பங்கு என்ன?

5. இப்பொழுதும் அச்சூழ்நிலை அப்படியே தான் உள்ளதா?

இங்கு ஒன்றை நம் மனதில் நிறுத்த வேண்டியது சூழ்நிலைகள் மாறமாறப் பிரச்சனையின் தன்மையும் மாற்றம் பெரும்.

எனவே மேலே கூறிய ஐந்து வினாக்களுக்கும் விடையை அறிந்து கொண்டபின் அடுத்தது நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதில் நம் கவனம் செல்ல வேண்டும் ஏனெனில் அதன் போக்கில் விட்டால் நாம் அடிபடுவோம். அதே போல் மற்றவர்கள் இதே பிரச்னையைச் சந்தித்திருந்து சில வழிகளை உபயோகித்து மீண்டிருந்தால் அதையே தயவு செய்து நாமும் செய்யக்கூடாது.

எதுவானாலும் நபருக்கு நபர் இடத்திற்கு இடம் வேறுபடும் அல்லவா? நம் பிரச்னை நம்முடையது தான். இதே போல் நம் நண்பர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆகையால் அவர்களா நம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சொல்லுங்கள்.

இப்படி நம் மனம் எண்ணுமேயானால் நிச்சயம் நமக்குத் தேவையானதை நாம் பெறுவோம். நம் மனம் உடனே புதிய புதிய கோணத்தில் சிந்திக்கும். இதன் விளைவு நம் மனமும் நாமும் பலமடைவோம். தன்னம்பிக்கை அதிகரிக்கும், நம் எதிர்காலம் பிரகாசிக்கும்.

அடுத்ததாக எப்பொழுதும் நாம் நம் பொறுப்புக்களை மறுக்கக்கூடாது. மறுத்தால் நாம் பலவீனமாகி விடுவோம். எனவே முதலில் தைரியமாகவும் நேர்மையாகவும் நம் மீது கூறப்பட்ட பழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பிரச்னையில் நாம் மாட்டிக் கொண்டால் நாம் நம் மீதான தவறுகளை ஒப்புக் கொள்வதில் தயக்கமே காட்டக்கூடாது. மற்றவர்கள் ‘அனைத்துமே உன்னால் தான்’ என்று கூறுகிறார்களா? ஆம் என்று சொல்லி விடுவதால் நஷ்டம் நிச்சயம் நமக்கில்லை. ‘ஆம், நான்தான் அனைத்திற்கும் காரணம்’ என்று கூறிப்பாருங்கள். அனைவரும் அமைதியும் ஆச்சரியமும் அடைவர். மேலும் பிரச்னையைச் சமாளிக்கப் பல வழிகளை அதே காட்டும்.

நம் வாழ்க்கைக்குத் தேவையான சில நல்ல சுயவுந்துதல்களை இப்போது நாம் பார்ப்போம்.

  • ‘நான் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன்’
  • ‘என் பலமும் பலவீனமும் எனக்கு நன்கு தெரியும்’
  • ‘நான் எப்பொழுதுமே என்னுடைய லட்சியங்களை உண்மையானதாக அமைத்துக் கொண்டு, அதை நிச்சயம் அடைவேன் என்பதில் மிகுந்த நம்மிக்கையோடு செயல்படுகிறேன்.
  • என்னை நான் எப்பொழுதமே அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறேன்.
  • என்னை மென்மேலும் மேம்படுதிக் கொள்கிறேன்
  • நான் பண்பட்ட, பொறுப்பான முடிவுகளை எடுக்கும் திறனை படைக்கப் பெற்றுள்ளேன்.
  • ஒவ்வொரு நாளும் நான் சீருத்திருத்தம் பெறுகிறேன். மேலும் சரிபடுத்திக் கொள்கிறேன். ஆற்றல் குவிக்கப் பெறுகிறேன். நம்பிக்கை பெறுகிறேன்.
  • எனக்கு ஏற்படும் அவச்சொலை, என் முன்னேற்றத்திற்காகத் தான் என எண்ணுகிறேன்.
  • நான் வெற்றியைக் கற்பனை செய்கிறேன் . நான் வெற்றியை அநேகமாக நெருங்கித் தொட்டு விட்டேன். நான் அனைத்திலும் வெற்றி பெறுவதையே லட்சியமாகவும் விருப்பமாகவும் கொண்டுள்ளேன்.
  • நான் எனக்கும் இந்தச் சமுதாயத்திற்கும் கிடைக்கப் பெறாத பொக்கிஷமாவேன்.

மேலே கூறப்பட்டுள்ளவைகளைத் தினமும் குறைந்தது இரண்டு முறையாவது நினைவு கூர்ந்தால், நமக்குத் தேவையான மாற்றங்களை நாம் தானாகவே பெறுவோம்.

இங்கு மிக முக்கியமான ஒரு செய்தியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சில பிரச்சனைகளை நாம் சரிப்படுத்தி மேலும் அதனோடு வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். இதைத் தான் மிக உயர்ந்த அறிஞர் திரு எஸ். ஸ்டீவன்சன், ‘நம் அனைவராலும் நம் துன்பத்தையோ சுமையையோ நிச்சயம் தாங்க / சுமக்க முடியும். அது மிகக் கடினமாக இருந்தாலும் சரி, அந்தத் துன்பம் முடிவுக்கு வரும் வரை நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.’ என்று கூறுகிறார். இது உண்மை தானே. தேவையாதைச் சரியான நேரத்தில் சரி செய்து விட்டால் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் நிறைவாகவும் இருக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்